சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த 5 விஷயங்களை கடைப்பிடியுங்கள்.. கொரோனா ஓடோடி போய்ரும்.. டாக்டர் வித்யா ஹரி கூறுவதை கேளுங்க

Google Oneindia Tamil News

சென்னை: இந்த இக்கட்டான சூழலில் 5 வழிமுறைகளை நாம் கடைப்பிடித்தால் கொரோனாவிலிருந்து தப்பலாம் என டாக்டர் வித்யா ஹரி ஐயர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கொரோனா : 5 விஷயத்துல கவனமா இருங்க | Dr. Vidyaa Hari Iyer | EP-1 | Oneindia Tamil

    இதுகுறித்து டாக்டர் வித்யா ஹரி ஐயர் ஒன் இந்தியா தமிழ் தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில் தற்போது இந்த கோவிட் 19 குறித்த பேச்சுகள்தான் எங்கும் இருக்கிறது. அது நமக்கு பீதியை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த கொரோனா நோய் பரவி கொண்டிருக்கிறது. ஆனால் ஆரம்ப கட்டத்தில் யாருக்கும் பெரியளவில் எச்சரிக்கை கொடுக்கும்படியாக இல்லை.

    எல்லோரும் நினைத்தது, இது லேசான காய்ச்சல்தானே என்றுதான். இதை அப்படியே விட்டுவிட்டார்கள். கிட்டதட்ட உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியுள்ளது. அது போல் பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. உலகம் முழுவதும் பாதித்ததால் இந்த கொரோனாவை தொற்றுநோய் என உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறியுள்ளது.

     தண்ணீர்

    தண்ணீர்

    முதலில் நாம் பூமியான மண்ணுக்கு நிறைய மரியாதை கொடுக்கவில்லை. பிளாஸ்டிக்குகளை அப்படியே மண்ணில் தூக்கி போட்டோம். இதனால் பல விளைவுகளை சந்தித்து வருகிறோம். அடுத்தது தண்ணீர், குடிக்கும் தண்ணீர் முதற்கொண்டு அதை நாம் காசு கொடுத்து வாங்கி வருகிறோம். அடுத்தப்படியாக காற்று, பஞ்ச பூதங்களை நாம் அவமதிப்பதால்தான் துன்பங்களை சந்திக்கிறோம். இதனால் கடவுளுக்கே பொறுக்காமல் நாம் இப்போது லாக்டவுன் எனும் விஷயத்தால் அடங்கியிருக்கிறோம்.

    தொழிற்சாலைகள்

    தொழிற்சாலைகள்

    வாகனங்கள் இயக்கம் இல்லை, தொழிற்சாலைகள் மூடல் உள்ளிட்டவற்றால் நல்ல காற்று இருக்கும் போதிலும் நாம் மாஸ்க் போட்டுக் கொண்டு வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. காற்றை இலக்காரமாக நினைத்ததால் இன்று நாம் மூச்சுவிடும் காற்றுக் கூட முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. வெளிநாட்டில் ஒரு முதியவர் வென்டிலேட்டரில் உதவியின்றி சுவாசிக்க தொடங்கி வீடு திரும்பினார்.

     மீண்டது

    மீண்டது

    அப்போது மருத்துவமனை சார்பில் கொடுக்கப்பட்ட பில்லை பார்த்து அழுதார். அதற்கு மருத்துவமனை நிர்வாகமோ உங்களால் முடிந்த பணத்தை செலுத்துங்கள் போதும் என்றார்கள். அதற்கு அந்த முதியவர், நான் காசு கொடுப்பதற்காக அழவில்லை. இத்தனை நாட்கள் சுவாசிக்கும் காற்றை எத்தனை அலட்சியமாக கையாண்டேன் என்பதை நினைத்து அழுகிறேன். வென்டிலேட்டர் உதவியிலிருந்து மீண்ட போதிலும் நான் இன்னும் கடவுளுக்கு நன்றி சொல்லவில்லை என்றார்.

     5 விஷயங்கள்

    5 விஷயங்கள்

    எனவே முக்கியமானது நாம் கடவுளுக்கு எப்போதும் நன்றி கூறவேண்டும். இதுதவிர்த்து 5 முக்கியமான விஷயங்களை பார்ப்போம்.

    1. வீட்டில் பத்திரமாக இருங்கள் (Stay safe)
    2. ஒரு நபர் மட்டும் வெளியே செல்ல வேண்டும். அந்த நபர் வீட்டுக்கு வந்தவுடன் அவரது துணிகளை கிருமிநாசினியால் சுத்தம் செய்து துவைக்க வேண்டும். வெளியில் 1 மீட்டர் தூரத்திற்கு சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.
    3. இருமலோ தும்மலோ வந்தால் கையை முடக்கிக் கொண்டு செய்ய வேண்டும். அப்போதுதான் அதிலிருந்து வரும் நீர் துளிகள் யார் மீதும் படாது.
    4. ONE- Oral, Nose, Eyes- இந்த மூன்று பாகங்களையும் கைகளை கழுவாமல் தொடக் கூடாது.
    5. கைகளை 20 வினாடிகளுக்கு நன்றாக சுத்தமாக கழுவ வேண்டும்.

    English summary
    Dr Vidhya Hari Iyer says that please follow 5 steps to stay away from Coronavirus. She also explains about ONE.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X