சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Facial Steam: தொண்டையிலிருக்கும் கொரோனாவை விரட்ட ஆவிபிடிங்க.. டாக்டர் ஒய் தீபா அட்வைஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: வேது பிடித்தலை எப்படி செய்ய வேண்டும், என்னென்ன மூலிகைகளை சேர்க்க வேண்டும், எத்தனை முறை எடுக்க வேண்டும், இதை எடுப்பதால் என்ன பலன்கள் என்பது குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் டாக்டர் ஒய் தீபா தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ஆவி பிடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கு.. டாக்டர் ஒய் தீபா | Oneindia Tamil

    இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ஆவி பிடித்தல், வேது பிடித்தல் என்பது தற்போது எங்கு பார்த்தாலும் பேசும் பொருளாகிவிட்டது. இயற்கை மருத்துவத்தில் முக்கியமான சிகிச்சை முறை இந்த ஆவி பிடித்தல்.

    தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை

    பொதுவாகவே நம் உடலில் கழிவுகள் அதிகமாவதுதான் நோய்க்கான முதல் காரணம். இது நிச்சயமாக மரணப்படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு நிச்சயம் இந்த விஷயம் தெரிந்திருக்கும்.

    தண்ணீர் குடித்தல்

    தண்ணீர் குடித்தல்

    மலத்தை சரிவர கழிக்காவிட்டால் அதுதான் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. கழிவுகள் நம் உடலில் தங்கும்போதுதான் நோயின் சீற்றமும் வீரியமும் அதிகமாகிறது. தினசரி நாம் தண்ணீரை குடித்தல் அவசியமான விஷயமாகும்.

    ஆவி பிடிக்கும் முறை

    ஆவி பிடிக்கும் முறை

    கழிவுகளை அகற்ற இயற்கை மருத்துவ வழிமுறைகளை நாம் பின்பற்றுவது நல்லது. ஆவி பிடிக்கும் போது நாம் நேராக உட்கார்ந்திருக்க வேண்டும். ஆவி பிடிப்பதற்கான ஒரு கருவியை கொண்டு நாம் எடுக்கிறோம். அப்போது நாம் மூக்கு, வாய் வழியாக அந்த ஆவியை உள்ளிழுக்கலாம். வாயை நன்றாக திறந்து ஆவியை உள்ளிழுக்க வேண்டும்.

    5 முதல் 7 நிமிடங்கள்

    5 முதல் 7 நிமிடங்கள்

    அப்போது நம் தொண்டை வரை அந்த ஆவி உள்ளே இறங்குவதை உணரலாம். இது ஒரு நாளைக்கு 5 முதல் 7 நிமிடங்கள் எடுப்பது அவசியமாகும். கொரோனா நோயாளிகளாக இருந்தால் இரு வேளைகள் எடுக்கலாம். இதனால் என்ன பயன் என்று பார்த்தால் இந்த கொரோனா வைரஸில் உள்ள கிளைக்கோபுரோட்டீன் அல்லது ஸ்பைக் புரோட்டீன் 55 டிகிரி டூ 65 டிகிரி செல்சியஸில் இந்த ஆவி உள் போகும் போது நமது தொண்டையில் உள்ள மியூகஸ் மெம்பரேனில் உள்ள அணுக்கள் கொரோனா வைரஸில் உள்ள புரோட்டீனை மட்டுப்படுத்துவதற்கு உதவும்.

    வைரஸ்

    வைரஸ்

    இதனால் அந்த சளி மியூகோலைட்டிக்காக மாறி உடலில் இருந்து அந்த வைரஸ் வெளியேற உதவுகிறது. இந்த ஆவி பிடித்தலில் என்னென்ன போடலாம் என்பதை பார்ப்போம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட வேண்டும். அதில் துளசி, கற்பூரவல்லி இலை அல்லது நொச்சி இலை, யூகாலிப்டஸ் இலை அல்லது எண்ணெய் அல்லது லெமன் கிராஸ் ஆயில் அல்லது பெப்பர் மின்ட் ஆயில் ஆகியவற்றில் இரு துளிகள் சேர்க்கலாம்.

    எண்ணெய்

    எண்ணெய்

    இதுபோன்ற நறுமணம் மிக்க எண்ணெய்களை சுவாசிக்கும் போது வைரஸை எதிர்த்து போராடும் திறன் கிடைக்கும். இது எதுவுமே இல்லை என்றால் வெறும் கல் உப்பு போதும். நன்றாக வாயை திறந்து வைத்துக் கொண்டு ஆவி பிடிக்க வேண்டும். ஆவி பிடிக்கும் போது தலையை நனைத்து கொள்ள வேண்டாம். சிலர் ஆவி பிடிக்கும் போது அடிக்கடி ஒரு துணியால் முகத்தை துடைப்பார்கள். ஒரு நாளைக்கு 10 தடவை கூட எடுப்பார்கள்.

    10 முறை வேண்டாம்

    10 முறை வேண்டாம்


    இதெல்லாம் வேண்டாம். ஒரு நாளைக்கு இரு முறை எடுத்தால் போதும். அதிலும் நமது மூக்கு, மார்பின் மேல் பகுதி, தொண்டை ஆகிய இடங்களில் படும்படி எடுத்தால் போதுமானது. தலையை நனைத்துக் கொண்டால் சைனஸ் இருப்போருக்கு சைனுசைட்டீஸ் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே தலையை நனைக்க வேண்டாம்.

    வெறும் வயிற்றில்

    வெறும் வயிற்றில்

    இரவு நேரத்தில் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மியூகோலைட்டிக்காக மாறும் சளி பாரா நாசில் சைனஸில் அப்படியே தங்கி காலையில் மூக்கு அடைப்பு ஏற்படும். எனவே பகல் நேரங்களில் எடுத்தால் நல்லது. குறிப்பாக வெறும் வயிற்றில் எடுத்தால் மிகவும் நல்லது. சாப்பிட்டுவிட்டால் இரண்டரை மணி நேரம் கழித்து எடுக்கலாம் என்றார் டாக்டர் தீபா.

    English summary
    Government Yoga and Naturopathy Hospital Dr Y Deepa advises to do steam inhalation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X