சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதியவர்களே.. மூட்டுவாதம், தோள்பட்டை வலியா.. கொரோனா வந்துடும்னு பயமா.. கவலைய விடுங்க.. டாக்டர் தீபா

Google Oneindia Tamil News

சென்னை: மூட்டு வாதம், கழுத்து வலி, தோள்பட்டை வலியால் அவதிப்படும் முதியவர்களுக்கான எளிமையான உடற்பயிற்சிகளையும் உணவு பொருள்களையும் விளக்குகிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்ப மருத்துவத் துறை மருத்துவர் டாக்டர் தீபா.

Recommended Video

    Health tips : மூட்டுவாதம், தோள்பட்டை வலியா.. கொரோனா வந்துடும்னு பயமா..?

    இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில், கொரோனா நேரத்தில் அதிக உயிரிழப்பு வயதானவர்கள்தான். இந்த வயதானவர்கள் வீட்டிலிருக்கும் போது ஒரு வித பயத்துடனேயே இருக்கிறார்கள். நமக்கு இந்த நோய் வந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள்.

    பெரும்பாலான முதியவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருக்கும். இந்த வீடியோவில் தற்போது முதியோருக்கான யோகா பயிற்சியை பார்ப்போம். அதுவும் எளிமையான பயிற்சிகள். பொதுவாக வயதானவர்களுக்கு மூட்டுவாதம், கழுத்து வலி , இடுப்பு வலி, தோள்பட்டை வலி ஆகியவை அதிகமாக இருக்கும்.

    கவலைகளா?.. தூக்கமின்மையா?.. இந்த ஆசனத்தை செய்ங்க!.. அப்பறம் பாருங்க.. சொல்கிறார் டாக்டர் தீபாகவலைகளா?.. தூக்கமின்மையா?.. இந்த ஆசனத்தை செய்ங்க!.. அப்பறம் பாருங்க.. சொல்கிறார் டாக்டர் தீபா

    உடற்பயிற்சி

    உடற்பயிற்சி

    மூச்சு பயிற்சிகளுடன் சேர்ந்து சில உடற்பயிற்சிகளை செய்யலாம். அதாவது இதை சூட்சும வியாயாயம் என சொல்வார்கள். இதை செய்யும் போது நம் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் இது உதவும். வயதானவர்களுக்கு மூட் ஸ்விங்கஸ் அதிகம் (மனம் அலைபாயும்). ஒரு முறை பார்க்கும் போது தைரியமாக இருப்பது போல் தெரியும்.

    முக்கியம்

    முக்கியம்

    ஆனால் அவர்களுக்குள்ளேயே பயத்தை வைத்துக் கொண்டு புழுங்கிக் கொண்டிருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்களின் மனம் ஃபோகஸ்ட்டாக இருப்பதற்கும் உணர்ச்சிபூர்வங்களை பேலன்ஸ் செய்யவும் அவர்களின் மன அமைதி அடைய யோகா பயிற்சி மிகவும் முக்கியமாகும்.

    சுவாசம்

    சுவாசம்

    இந்த பயிற்சிகளை நாம் சுவாசத்துடன் சேர்த்து செய்யும் போது பாரா சிம்பதட்டிக்கை தூண்டுகிறது. ரீங்காரத்துடன் கூடிய மூச்சுப் பயிற்சி, சுவாசத்தில் கவனம் ஆகிய இரு விஷயங்களும் நம் மனதை அமைதிப்படுத்த போதுமானவை. முதியவர்கள் என்னென்ன உணவு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்.

     4 பல் பூண்டு

    4 பல் பூண்டு

    ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் 4 பல் பூண்டை வாணலியில் வதக்கினால் அதன் பச்சை வாடை நீங்கிவிடும். ஆனால் அதனுக்குள் இருக்கும் ஆலோசன் அப்படியே இருக்கும். இது என்ன செய்யும் என்றால் ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை நீக்க உதவுகிறது.

    சூப்பு

    சூப்பு

    அது மட்டுமல்லாமல் பூண்டில் இருக்கும் சல்பர் நமது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த கொரோனா நேரத்தில் ரத்த அழுத்தம், கொல்ஸ்டிராலை கட்டுப்படுத்தவும் இதய நோய் வராமல் தடுக்கவும் இந்த பூண்டு உதவுகிறது. இதை தினமும் மாலை நேரங்களில் சாப்பிடலாம். இல்லாவிட்டால் இந்த பூண்டை சூப்பாகவும் வைத்து குடிக்கலாம்.

     கஞ்சி தண்ணீர்

    கஞ்சி தண்ணீர்

    காய்கறிகளை சாதம் வடிக்கும் கஞ்சியில் போட்டு பூண்டு, இஞ்சி, மிளகு, உப்பு சேர்த்து சூப்பாக தினமும் குடித்து வரலாம். இத்துடன் முளை கட்டிய பயறுகளையும் சாப்பிடலாம். அதாவது பச்சை பயறை முளைகட்டி அதில் வெங்காயம், தக்காளி, மிளகு, உப்பு சேர்த்து சாலட் மாதிரியும் சாப்பிடலாம். இதனால் புரதச் சத்துகளும் கிடைக்கிறது. இப்படிப்பட்ட விஷயங்களை முதியவர்கள் செய்வதன் மூலம் கோவிட் 19-ஐ வெல்லலாம் என்கிறார் டாக்டர் தீபா.

    English summary
    Government Yoga and Naturopathy Dr Y Deepa explains simple exercise and yoga for senior citizens
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X