சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க.. உடலை தளர்வாக்க.. இந்த ஆசனத்தை செய்ங்க- டாக்டர் ஒய் தீபா!

Google Oneindia Tamil News

சென்னை: குழந்தைகளின் ஞாபகச் சக்தியையும் கவனத்தையும் அதிகரிக்கும் எளிமையான ஆசனம் விருக்ஷாசனம் என்கிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்ப மருத்துவ துறைத் தலைவர் டாக்டர் ஒய் தீபா.

Recommended Video

    Health tips: குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க.. உடலை தளர்வாக்க..

    இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா, ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் நமது உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஸ்டேமினாவை மேம்படுத்தவும் ஒரு எளிமையான உடற்பயிற்சிதான் விருக்ஷாசனம். விருக்ஷம் என்றால் மரம்.

    மரம் போல் இருக்கும் ஆசனம்தான் நாம் இப்போது பார்க்க போவது. இந்த ஆசனத்தை பெரியவர்கள், குழந்தைகள் செய்யலாம். வயதானவர்கள் செய்யும் போது சுவற்றையோ யாரையாவதோ பிடித்துக் கொண்டுதான் செய்ய முடியும்.

    முதியவர்களே.. மூட்டுவாதம், தோள்பட்டை வலியா.. கொரோனா வந்துடும்னு பயமா.. கவலைய விடுங்க.. டாக்டர் தீபாமுதியவர்களே.. மூட்டுவாதம், தோள்பட்டை வலியா.. கொரோனா வந்துடும்னு பயமா.. கவலைய விடுங்க.. டாக்டர் தீபா

    கவலை

    கவலை

    இதை செய்யும் போது எதை நோக்கி நாம் போகிறோம். எந்த விஷயத்திற்காக நாம் கவலைப்படுகிறோம், நமது மனதில் ஏதாவது நினைத்து கொண்டே இருப்போம். இதை நிறுத்துவதற்கு நமது மனதை ஒரு போகஸ்ட்டாக வைத்திருக்க வேண்டும். இதை செய்யும் போது நமது மூளைக்கு ஒரு சிக்னல் செல்லும். இந்த சிக்னல் நான்- அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரப்பதற்கு உதவுகிறது. எப்போதும் நமது சுவாசத்தில் கவனம் செலுத்தும் போதோ, நமது விஷயத்தில் கவனம் செலுத்தும்போதோ அதனுடன் நிறைய நியூ டிரான்ஸ்மிட்டர்ஸ் ரிலீஸாகும்.

    சுரப்பி

    சுரப்பி

    இதனுடன் நான்-அட்ரினலும் சுரக்கும் போது நாம் எப்போதாவது மன அழுத்தத்துடனோ, குழப்பநிலையிலோ Vகோபத்துடனோ இருக்கும் போது நமது உடல் நமக்கு எச்சரிக்கையை கொடுக்கும். இதுதான் நான்- அட்ரினலின் பணியாகும். நமது மனதை அலர்ட்டாக வைத்து மன அழுத்தத்தை குறைக்க இந்த ஆசனம் உதவியாக இருக்கும்.

     மிருதுவான திசுக்கள்

    மிருதுவான திசுக்கள்

    ஒரு புள்ளியில் நாம் கவனம் செலுத்தும் போது நமது உடல் பேலன்ஸ்டு ஆகிறது. அத்துடன் நமது மனமும் ஃபோகஸ்ட்டாக இருக்க உதவுகிறது. இந்த ஆசனத்தை வெறும் வயிற்றில் சூரிய வெளிச்சத்துடன் நாம் செய்யலாம். இதனால் சூரிய கதிர்களின் பலனும் இந்த ஆசனத்தில் பயனும் நமக்கு கிடைக்கும். நமது உடல் தளர்வடையும். மிருதுவாக இருக்கும் திசுக்கள் வலுவடையும்.

     ஞாபக சக்தி

    ஞாபக சக்தி

    கால்களின் வலுவை அதிகரிக்கும். இதை குழந்தைகள் தினமும் செய்வதன் மூலமாக அவர்களுடைய ஞாபகச் சக்தியையும் கவனத்தையும் அதிகரிக்கும். முதலில் ஆரம்பிக்கும் போது சுவற்றின் உதவியுடன் செய்யுங்கள். அதன் பிறகு நம்மால் எவ்வளவு நேரத்திற்கு ஃபோகஸ்ட்டா இருக்கிறீர்கள் என்பதை பார்த்து தினமும் இதை சில நிமிடங்கள் செய்து வரவும் என்றார் டாக்டர் தீபா.

    English summary
    Government Yoga and Naturopathy hospital Dr Y Deepa says that Vrikshasana is used to make flexible our bodies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X