சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மலச்சிக்கல், நெஞ்சு சளியா?.. 4 அக்குபிரஷர் பாயிண்ட்ஸை பயப்படாம தூண்டுங்க.. சொல்கிறார் டாக்டர் தீபா

Google Oneindia Tamil News

சென்னை: மலச்சிக்கல், நெஞ்சு சளியா அவதிப்படறீங்களா, அப்ப இந்த 4 அக்குபிரஷர் பாய்ண்ட்களை தூண்டுங்க. உங்கள் பிரச்சினை நிவர்த்தியாகும். தவறாக தூண்டிவிட்டாலும் எந்த பக்க விளைவுகளும், பிரச்சினைகளும் ஏற்படாது என அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை கைநுட்ப மருத்துவத் துறை டாக்டர் ஒய் தீபா சொல்கிறார்.

Recommended Video

    Health tips : மலச்சிக்கல், நெஞ்சு சளியா அவதிப்படறீங்களா?

    இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இந்த லாக்டவுன் நேரத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமாக இருக்கிறது. இன்று நாம் பார்க்க இருப்பது அக்குபிரஷர் புள்ளிகளை எப்படி கொடுக்க வேண்டும், எந்த புள்ளிகளை நாம் தூண்ட வேண்டும் என்பதுதான். அதில் முதல் புள்ளி எல் ஐ4 என சொல்லக் கூடியதாகும்.

    நமது ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் ஒன்று சேர்க்கும் போது பின்புறத்தில் வரும் கோடு முடியும் இடம்தான் உயர்ந்த புள்ளியாக (highest point) கருதப்படுகிறது. அந்த கோடு முடியும் இடத்தில் நாம் அழுத்தம் கொடுக்கும் போது ஒரு லேசான வலியை கொடுக்கும். அப்போது நாம் சரியான புள்ளியை தூண்டியுள்ளோம் என்பது அர்த்தம்.

    கொரோனா வைரஸ் நோயாளிகளே!.. உடல் அசதி, உடல் வலி, தலை வலியா?.. அப்ப இதை செய்ங்க.. டாக்டர் தீபா அட்வைஸ்கொரோனா வைரஸ் நோயாளிகளே!.. உடல் அசதி, உடல் வலி, தலை வலியா?.. அப்ப இதை செய்ங்க.. டாக்டர் தீபா அட்வைஸ்

    நோய் எதிர்ப்பு சக்தி

    நோய் எதிர்ப்பு சக்தி

    இந்த புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது கழுத்து வலி, தலைவலி, இடுப்பு வலி உடல் சோர்வு, உடல் முழுவதும் உள்ள வலிகளை நீக்குவதற்கு இது போல் அழுத்தம் கொடுப்பது மிகப் பெரிய நிவாரணத்தை கொடுக்கும். கொரோனாவால் ஏற்படும் செஸ்ட் கன்ஜெஷனும் சரியாகும். இது எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உபயோகமாக இருக்கும்.

    மலம் கழிக்க

    மலம் கழிக்க

    இந்த புள்ளியில் நாம் தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் வரை பிரஷர் கொடுக்கும் போது உடனடியாக தலைவலி குணமாவதை நாம் உணரலாம். அடுத்த புள்ளி என்னவெனில் கை முட்டியை மடக்கும் போது வெளிப்புறமாக இருக்கக் கூடிய ஒரு கோடு முடியும் இடத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் மலச்சிக்கலை நிவர்த்தி செய்ய மிகவும் உதவியாக இருக்கும். வென்டிலேட்டரில் இருக்கும் நோயாளிகள் கழிவறைக்கு செல்லும் போது மலம் கழிக்க மிகவும் கஷ்டப்படுவர்.

    லேசான வலி

    லேசான வலி

    அவ்வாறு மலம் கழிக்க அவர்கள் முக்கும்போது மூச்சுத்திணறல் அதிகமாகவே ஆகிறது. அவர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மலச்சிக்கலை குறைப்பதற்கு இந்த புள்ளி மிகவும் உதவியாக இருக்கும். இந்த புள்ளியில் நாம் அழுத்தம் கொடுக்கும் போது ஒரு டல் பெயின் (லேசான வலி) கொடுத்தால் நாம் டச் செய்திருப்பது சரி என்று அர்த்தம்.

    ஆக்சிஜன்

    ஆக்சிஜன்

    நூலிழை நீங்கள் தள்ளி வைத்தாலும் அந்த வலி இருக்காது. லேசான வலி இருக்கும் இடத்தில் நாம் பிரஷர் கொடுத்துக் கொண்டே இருந்தோம் என்றால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அடுத்தது, கையில் விரல் ஆரம்பிக்கும் இடத்திற்கு கீழே உள்ள பகுதி நுரையீரலுக்கான பகுதியாகும். அந்த பகுதியில் மற்றொரு கையை மடக்கி அதில் உள்ள முட்டிகளின் மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும். அது போல் இன்னொரு கையிலும் செய்ய வேண்டும். அவ்வாறு நாம் பத்து பத்து தடவை மாறி மாறி செய்யும் போது நமது நுரையீரலுக்கு கொண்டு செல்லும் ஆக்சிஜனை அதிகரிக்கும். நுரையீரலின் வலிமையும் அதிகமாகும்.

    தைமஸ் பாயிண்ட்

    தைமஸ் பாயிண்ட்

    அந்த நுரையீரலுக்கான பாயின்ட் உள்ள பகுதிகளில் வலி இருக்கும். கொரோனா நோயாளிகள், குழந்தைகள், பெரியவர்களுக்கு நெஞ்சில் சளி கட்டியிருக்கும் போது இது போல் அழுத்தம் கொடுப்பதன் மூலம் நுரையீரல் பிரச்சினைகள் தீரும். அடுத்தது, தைமஸ் பாயின்ட். கையை நேராக நீட்ட வேண்டும். கட்டவிரலும் மற்ற விரல்களும் தமிழ் எழுத்து ட வடிவில் இருக்கும் அந்த சமயத்தில் கையின் உள்புறத்தில் கட்டவிரல் முடியும் இடத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த இடமும் வலியைகொடுக்கும். அந்த இடத்தில் பேனா அல்லது பென்சிலின் பின்புறத்தை கொண்டு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    தொண்டை வலி

    தொண்டை வலி

    அவ்வாறு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி, தொண்டை வலி இருக்கும் அந்த புள்ளியில் ஒரு மிளகை வைத்து செல்லோடேப் போட்டு ஒரு மணி நேரத்தில் ஒட்டிவிட வேண்டும். அவ்வாறு செய்யும் போது நெஞ்சில் இருக்கும் சளி மியோகோ லைட்டிங் அதாவது சளியின் அடர்த்தியை குறைத்து மலம் வழியாகவோ அல்லது உடல் கழிவுகள் மூலமாகவோ வெளியேறி விடும்.

    ஆரோக்கியம்

    ஆரோக்கியம்

    இது போல் அக்குபிரஷர் புள்ளிகளை நாமே எடுத்துக் கொள்வதால் வேறு புள்ளிகளை தூண்டிவிடுவதால் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா என்ற கவலை வேண்டாம். இது மிகவும் எளிதான புள்ளிகள்தான். இதை சரியாக தூண்டும் லேசான வலி இருக்கும். அப்போது நாம் சரியான புள்ளியை தொட்டோம் என்பது நமக்கு தெரியும். எந்த பக்கவிளைவுகளும் இருக்காது. தவறாக தூண்டினாலும் எந்த பிரச்சினையும் ஏற்படாது. எனவே பயம் வேண்டாம். வீட்டிலிருக்கும் இந்த நேரத்தில் இந்த புள்ளிகளை தூண்டி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றார் டாக்டர் தீபா.

    English summary
    Government Yoga and Naturopathy Hospital Dr Y Deepa says about 4 acupressure points to get relief from cold, constipation etc.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X