• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

செல்போன், டிவி- உங்க குட்டீஸின் ஆல்டைம் ஃபேவரைட்டா?.. கவலையை விடுங்க.. டயட்டை பிடிங்க.. டாக்டர் தீபா

|

சென்னை: லாக்டவுனால் பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டு பெரும்பாலான பள்ளிகளில் நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளின் கண்கள் பாதிக்காமல் இருக்க ஸ்பெஷல் உணவுகள் குறித்து அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவமனையின் கைநுட்ப மருத்துவத் துறை தலைவர் டாக்டர் ஒய் தீபா விளக்கியுள்ளார்.

  செல்போன், டிவி- உங்க குட்டீஸின் ஆல்டைம் ஃபேவரைட்டா?.. கவலையை விடுங்க.. டயட்டை பிடிங்க.. டாக்டர் தீபா

  இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறுகையில் தற்போது இந்தியா டிஜிட்டல்மயமாகிவிட்டது. பணபரிமாற்றம், பணம் செலுத்துதல், பணம் வாங்குதல், பொருட்களை வாங்குதல், விற்றல் என அனைத்திலும் டிஜிட்டல்மயமாகிவிட்டது.

  அது போல் ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் கல்வியிலும் டிஜிட்டல்மயம் புகுத்தப்பட்டுள்ளது. சிறிய வயதிலிருந்து எந்த விஷயத்தை குழந்தைகள் செய்வதனால் தீங்கு ஏற்படும் என நினைத்து செல்போன், லேப்டாப் பார்ப்பதற்கு அனுமதி மறுத்து வந்தோம்.

  ஆன்லைனில் பாடம்.. மாணவர்களின் கண் பார்வை, ஞாபக திறன் அதிகரிக்க.. டாக்டர் தீபா கூறுவதை கேளுங்க! ஆன்லைனில் பாடம்.. மாணவர்களின் கண் பார்வை, ஞாபக திறன் அதிகரிக்க.. டாக்டர் தீபா கூறுவதை கேளுங்க!

  குறைபாடு

  குறைபாடு

  ஆனால் இன்று நாமே அவர்கள் கையில் செல்போனை கொடுத்து படி என்று கூறும் நிலை வந்துவிட்டது. இதனால் குழந்தைகளின் கண் பார்வையில் பிரச்சினை ஏற்படலாம். ஞாபக சக்தியிலும் குறைபாடு ஏற்படலாம். இதற்கு யோகா மூலம் தீர்வு காண முடியும்.

  உணர்வு

  உணர்வு

  அத்துடன் சில உணவுகளை எடுத்துக் கொண்டால் அவர்கள் இந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். கேரட்டை குழந்தைகள் நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளது. விட்டமின் ஏ என்பது கண் பார்வைக்கானது என்பது அனைவருக்கும் தெரியும். எந்த ஒரு உணர்வையும் நமது கண்கள் மூலமாகவே வெளிப்படுத்துகிறோம்.

  பீட்டா கரோட்டீன்

  பீட்டா கரோட்டீன்

  அப்படிப்பட்ட கண்களை பாதுகாக்கும் திறன் கேரட்டிற்கு உண்டு. கேரட்டில் பீட்டா கரோட்டீன் அதிகமாக உள்ளது. இது ரெட்டினாவுக்கு மிகவும் நல்லது. அது போல் ஆரஞ்ச் நிறம், மஞ்சள் நிற காய்கறிகள, பழங்களில் விட்டமின் ஏ அதிகம் காணப்படுகிறது. உதாரணமாக மஞ்சள் பூசணி, மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றில் ஆரஞ்ச், மஞ்சள் நிறம் அதிகமாகவே உள்ளது. இவற்றில் பீட்டா கரோட்டீன் அதிகமாக காணப்படுகிறது.

  பசலை கீரை

  பசலை கீரை

  சரி இந்த கேரட் ஜூஸை நாம் எப்படி எடுத்துக் கொள்வது. கேரட் ஜூஸ் ஒரு 150 மில்லி எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் பசலை கீரை ஜூஸை 150 மில்லி எடுத்துக் கொள்ளலாம். இதில் ஜின்க், பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவை அதிகமாக இருக்கிறது. மேலும் பீட்டா கரோட்டீனும் அதிகமாக காணப்படுகிறது. இந்த ஜூஸ் கண்களை மட்டும் பாதுகாக்காமல் குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

  விட்டமின் பி 17

  விட்டமின் பி 17

  இந்த இரண்டு ஜூஸையும் கலந்து தினமும் குழந்தைகளுக்கு வெறும் வயிற்றில் கொடுத்து வந்தாலே அவர்களுடைய கண் பார்வைக்கு எந்த பாதிப்பு வராமல் பாதுகாக்கலாம். அது போல் தினமும் 4 பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் நீரில் ஊறவைத்து அதை காலையில் தோல் நீக்கிவிட்டு கொடுக்கலாம். இதில் செரினியம், விட்டமின் பி17 அதிகமாக காணப்படுகிறது.

  கசாயம்

  கசாயம்

  இது ஜீரண சக்தியை வலுப்படுத்துகிறது. இந்த பாதாமில் விட்டமின் ஏவும் இருப்பதால் கண் பார்வை பிரச்சினை வராமல் தடுக்கிறது. மேலும் மூளை சுறுசுறுப்பாக இயங்கவும் இது உதவுகிறது. அடுத்ததாக அதிமதுரம். இதை லிக்விட் ஐஸ் என்போம். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், ஆன்டி வைரல் அதிகமாக உள்ளது. இதனால்தான் கொரோனா நோயாளிகளுக்கு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை சார்பில் வழங்கப்படும் கசாயத்தில் அதிமதுரம் சேர்க்கப்படுகிறது.

  முருங்கை கீரை

  முருங்கை கீரை

  அதிமதுரத்தில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து நீரில் கொதிக்கவைத்து கொடுத்து வந்தால் கண் பார்வை திறன் வலுப்படும். இத்துடன் கீரை வகைகளையும் நாம் தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம். பொன்னாங்கண்ணி கீரை, முருங்கை கீரைகளையும் பயன்படுத்தலாம் என்றார் டாக்டர் ஒய் தீபா.

  English summary
  Government Yoga and Naturopathy Hospital Dr Y Deepa says about foods which are protecting eyes. She has listed out the food which are good for eyes and for brain.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X