சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவிலிருந்து மீண்டாலும்.. அதான் போய்டுச்சேனு அசால்ட்டா இருக்காதீங்க.. டாக்டர் ஒய் தீபா அட்வைஸ்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவிலிருந்து மீண்டு வீட்டுக்குச் சென்றாலும் சுடுதண்ணீரில் வாய்க் கொப்பளிப்பதையும் ஜலநேதி செய்வதையும் வாடிக்கையாக வைத்திருந்தால் தொண்டையில் ஏதோ கொஞ்சம் நஞ்சம் ஒட்டியிருக்கும் வைரஸும் ஓடி போய்டும் என சொல்கிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை கைநுட்ப மருத்துவத்தின் தலைவர் டாக்டர் ஒய். தீபா.

Recommended Video

    கொரோனாவிலிருந்து போய்டுச்சேன்னு அசால்ட்டா இருக்காதீங்க.. இதை செய்ங்க.. டாக்டர் தீபா

    இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா, தமிழ் ஒன் இந்தியாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கொரோனா தொற்றுநோய் காலத்தில் இன்னொரு முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி இன்று பார்க்கவிருக்கிறோம்.

    அதாவது வெந்நீரில் வாய் கொப்பளிப்பது, ஜலநேதி செய்தல் ஆகியவற்றை செய்வதால் எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை பார்ப்போம். கொரோனா பாதிக்கப்பட்டு நாம் அதிலிருந்து மீண்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாலும் அந்த வைரஸானது மூக்கு மற்றும் சுவாச பகுதியில் இருப்பதற்கான வாய்ப்புள்ளது என மருத்துவ ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சுடுநீரில் வாய் கொப்பளிப்பது மற்றும் ஜலநேதி ஆகியவற்றை செய்வதன் மூலம் அந்த வைரஸ் உள்ளே சென்று நமது உடலில் பாதிப்பை ஏற்படுத்தாமல் பாதுகாக்கும் என்கிறார்கள்.

    கொரோனா காலத்தில் முட்டை, நாப்கின் விநியோகம் - அரசு விளக்கம் தர ஹைகோர்ட் உத்தரவுகொரோனா காலத்தில் முட்டை, நாப்கின் விநியோகம் - அரசு விளக்கம் தர ஹைகோர்ட் உத்தரவு

    தண்ணீர்

    தண்ணீர்

    ஜலநேதி என்றால் என்ன, ஜலம் என்றால் தண்ணீர், நேதி என்றால் சுத்தம் செய்தல் என்பதாகும். அதாவது நமது மூக்கு பகுதியில் தண்ணீரை கொண்டு சுத்தம் செய்தல்தான் ஜலநேதி ஆகும். மூக்கு சொம்பு என ஒன்றும் இருக்கும். அதில் உப்பு சேர்த்த சுடுநீரை எடுத்துக் கொள்ள வேண்டும். இது போன்ற மூக்கு சொம்பு இல்லாவிட்டாலும் கவலை வேண்டாம்.

    வாய் பகுதி

    வாய் பகுதி

    நம் வீட்டில் உள்ள பாத்திரத்தை கொண்டே மூக்கு மற்றும் வாய் பகுதியில் சுத்தம் செய்துக் கொள்ளலாம். அதை தொண்டை வரைக்கும் உப்பு தண்ணீரால் நாம் கொப்பளிக்கும் போது தொண்டையில் வைரஸ் இருந்தாலும் அதை ஒன்றும் இல்லாததாக்க இது உதவும்.

    மியூகஸ் லேயர்

    மியூகஸ் லேயர்

    இந்த ஜலனேதி என்ன செய்யும் எனில் நமது மூக்கில் உள்ள மியூகஸ் லேயரிலும் (Mucus layer) பேரன்ஜீல் லேயரிலும் (pharyngeal mucus) செல்கள் இருக்கும். இந்த ஜலநேதி மூலம் நாம் எடுக்கும் தண்ணீர் ஹைபர்டானிக் சலைன் கரைசல் (Hypertonic saline solution) என சொல்வது உண்டு. இந்த உப்பு தண்ணீர் மியூகஸ் லேயரிலும், பேரன்ஜீல் லேயரிலும் உள்ள செல்களில் உள்ள குளோரைடு அயனிகளை ஹைப்போகுளோரஸ் திரவமாக (HOcl) மாற்றுகின்றன.

    மூக்கு துவாரங்கள்

    மூக்கு துவாரங்கள்

    இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் நாம் பயன்படுத்தும் கிருமிநாசினியிலும் பிளீச்சிங் பவுடரிலும் ஹைப்போகுளோரஸ் திரவத்தைதான் பயன்படுத்துகிறோம். ஜலனேதியை ஒரு மூக்கில் தண்ணீரை விட்டு இன்னொரு மூக்கு வழியாக சுத்தப்படுத்துகிறோம். இதேபோல் மற்றொரு பகுதியில் தண்ணீரை விட்டு மறுமூக்கு துவாரத்தின் வழியாக வெளியேற்ற வேண்டும். இதை முடித்துவிட்டு கபாலபதி செய்ய வேண்டும். அது போல் தொண்டையில் உள்ள தொற்றை நீக்க சுடுநீரில் உப்பு சேர்த்து தொண்டை வரை நீரை செல்ல வைத்து பின்னர் கொப்பளிக்க வேண்டும் என்றார் டாக்டர் தீபா.

    English summary
    Government Yoga and Naturopathy hospital Manipulative Therapy HOD Dr Y Deepa says about Hot water Gargling, Jalaneti procedure.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X