சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியே தேவையில்லைங்க.. இந்த ஆசனத்தை செய்ங்க.. போதும்.. டாக்டர் ஒய் தீபா

Google Oneindia Tamil News

சென்னை: ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியே இல்லாமல் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் அற்புதமான ஆசனம் மக்ராசனம் என அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் மருத்துவர் ஒய் தீபா தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியே தேவையில்லைங்க.. இந்த ஆசனத்தை செய்ங்க.. போதும்.. டாக்டர் ஒய் தீபா

    இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் கொரோனா நோயாளிகளுக்கான ஆசனம் குறித்து பார்ப்போம். அண்மைக்காலமாக கொரோனா நோயாளிகளுக்கு ப்ரோன் போஸர் (அதாவது படுத்தபடியே செய்யும் ஆசனம்) மக்ராசனம் சொல்லித் தருகிறோம்,

    தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை

    இதன் மூலமாக ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கிறோம். இந்த மக்ராசனத்தின் செயல்பாடு என்ன? இதை எப்படி செய்வது? கொரோனா நோயாளிகள் மட்டும்தான் செய்ய வேண்டுமா? இல்லை எல்லாரும் செய்வதனால் இதனுடைய பயன்கள் என்ன என்பது குறித்து நாம் பார்க்க போகிறோம்.

    கடல்வாழ் உயிரினம்

    கடல்வாழ் உயிரினம்

    மக்ராசனம் என்றால் ஒரு கடல் வாழ் உயிரினம் என சொல்லக் கூடியதாகும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் முதலை, ஷார்க், டால்பின் ஆகியவை எப்படி கடலில் வாழ்கிறதோ அதை குறிக்கக் கூடிய ஆசனம்தான் இந்த மக்ராசனம். இதை ஆங்கிலத்தில் Crocodile pose என சொல்வோம். இது கடினமான பயிற்சியே கிடையாது.

    தனித்துவம்

    தனித்துவம்


    மற்ற ஆசனங்களை காட்டிலும் இது ரிலாஸ் கொடுக்கும் ஆசனம் ஆகும். இதற்கென தனித்துவமே இருக்கிறது. இந்த ஆசனத்தை நாம் செய்யும் போது வயிறு, அடி வயிறு பகுதிகளுக்கு (Diaphragmatic Breathing) வேலை கொடுக்கிறோம். இந்த ஆசனத்தை நாம் செய்யும் போது உடலை மட்டுமல்லாமல் மனதையும் தளர்வான நிலையில் வைத்திருக்கிறோம்.

    அழுத்தம்

    அழுத்தம்

    இந்த ஆசனத்தை எப்படி செய்வது என பார்ப்போம். நாம் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும். கால்கள் நேராக இருக்க வேண்டும். நமது உடலின் பக்கத்தில் கைகளை வைத்திருக்க வேண்டும். பின்னர் இரு கைகளையும் ஒன்றன் மீது ஒன்று வைத்து கோர்த்து கொண்டு தலையை அதன் வைத்து இடது புறமாக தலையை சாய்த்து படுக்க வேண்டும்.

    கால்களை இறக்கி

    கால்களை இறக்கி

    இந்த ஆசனத்தில் நமது வயிறு பகுதி தரையில் இருக்கும், மார்பு பகுதி லேசாக தூக்கி இருக்கும். இதனால் நமது அடிவயிறு தளர்வாக இருக்கும். இதனுடன் நாம் கண்களையும் மூடி தலையை சாய்த்து படுப்பதால் மிகவும் ரிலாக்ஸ்டாக உணருவோம். ஒரு முறைபடுக்கும் போதே நன்றாக 10 நிமிடங்கள் படுத்துக் கொண்டு நமது ஆழ்ந்த சுவாசத்தை நாம் எடுக்க வேண்டும். இது Diaphragmatic Breathingஐ கொடுக்கக் கூடிய ஆசனம் என்பதால் நமது சுவாசம் நன்றாக டிரெயின் ஆகும்.Diaphragmatic Breathing என்றால் என்ன, டயபார்ம் என்றால் ஒரு தசை. தமிழில் உதரவிதானம் என சொல்வர். இது மூச்சுவிடுவதற்கு மிகவும் அவசியமானதாகும்.

    சுவாச பிரச்சினை

    சுவாச பிரச்சினை

    இது பின்புறமாக நம்முடைய கீழ் முதுகெலும்புடன் இது இணைந்திருக்கும். முன்புறத்தில் மார்பில் உள்ள எலும்பு மற்றும் ரிப்கேஜுன் முனையுடன் இணைந்திருக்கும். நமது மார்பையும் வயிற்று பகுதியையும் பிரிக்கக் கூடியது. இந்த உதரவிதானம் சரியாக வேலை செய்யாவிட்டால் நமக்கு சுவாச பிரச்சினைகள் ஏற்படும்.

    மூச்சை இழுக்கும் போது

    மூச்சை இழுக்கும் போது

    ஒருவர் மூச்சை உள்ளே இழுக்கும் போது நமது வயிறு பகுதி வெளியே வர வேண்டும். மூச்சை விடும்போது நமது வயிறு பகுதி உள்ளே இழுக்க வேண்டும். இதுதான் சரியான சுவாசம். இந்த ஆசனத்தை நாம் செய்யும் போது இயற்கையாகவே Diaphragmatic Breathingஐ கொண்டு வரும். கொரோனா நோயாளிகள் இந்த நிலையில் படுக்கும் போது அதிகமான ஆக்ஸிஜனை நுரையீரலுக்கு கொண்டு போவதற்கான வாய்ப்புகளை அதிகமாக ஏற்படுத்தும்.

    நுரையீரல்

    நுரையீரல்

    நாம் மூச்சை உள்ளே இழுக்கும் போத நமது டயாப்ரம் கீழ் நோக்கி வரும். இதனால் நுரையீரலுக்கு அதிகமான இடம் கிடைத்து நன்றாக விரிந்து சுவாசிக்க முடிகிறது. இதை தினசரி நாம் வீட்டில் செய்யும் போது நமது ஆக்ஸிஜன் திறநை நம்மால் மெயின்டெய்ன் செய்ய முடியும். ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமலேயே ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கலாம்.

    நோயாளிகள்

    நோயாளிகள்

    குப்புறப்படுத்திருப்பதால் நம் மனதில் உள்ள டென்ஷன் நீங்குகிறது. நமது ஸ்பைன் மற்றும் பெல்விஸில் இருக்கும் தசைகள் தளர்கின்றன. இதன் மூலம் நமது உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொரோனா நோயாளிகள் மட்டுமில்லை. மற்றவர்களும் செய்யலாம். இதனால் பதற்றமான நிலை நீங்கும், தூங்கும் போது கெட்ட கனவுகள் வராமல் பார்த்துக் கொள்கிறது.

    நிமிர்ந்து

    நிமிர்ந்து

    இந்த ஆசனம் செய்து விட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு நமது வயிற்றுப்பகுதியில் கையை வைத்து நாம் எப்படி சுவாசிக்கிறோம் என்பதை ஒரு 3 தடவை பார்த்து கவனம் செலுத்தலாம். நமது சுவாசத்தில் கவனம் செலுத்தினால் தானாகவே சரியான சுவாச முறைக்கு நம்மை கொண்டு செல்லும். இந்த ஆசனத்தை செய்து இயற்கையான முறையில் ஆக்ஸிஜன் கிஇந்த ஆசனம் செய்து விட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு நமது வயிற்றுப்பகுதியில் கையை வைத்து நாம் எப்படி சுவாசிக்கிறோம் என்பதை ஒரு 3 தடவை பார்த்து கவனம் செலுத்தலாம். நமது சுவாசத்தில் கவனம் செலுத்தினால் தானாகவே சரியான சுவாச முறைக்கு நம்மை கொண்டு செல்லும். இந்த ஆசனத்தை செய்து இயற்கையான முறையில் ஆக்ஸிஜன் கிடைக்க வழி செய்வோம் என்றார் ஒய் தீபா. டைக்க வழி செய்வோம் என்றார் ஒய் தீபா.

    English summary
    Government Yoga and Naturopathy Dr Y. Deepa says about improving of Oxygen level without using oxygen cylinder.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X