சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ் நோயாளிகளே!.. உடல் அசதி, உடல் வலி, தலை வலியா?.. அப்ப இதை செய்ங்க.. டாக்டர் தீபா அட்வைஸ்

Google Oneindia Tamil News

சென்னை: உடல் அசதி, தலைவலி, உடல் வலியை போக்கும் அற்புதமான யோகா நாடி சுத்தி பிராணயாமம் என்றும் இதன் மூலம் நாம் சுவாசிக்கும் காற்று சுத்தப்படுத்தப்படுகிறது என்கிறார் அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவமனையின் கைநுட்ப மருத்துவத் துறை தலைவர் டாக்டர் ஒய் தீபா.

Recommended Video

    Health Tips : உடல் அசதி, உடல் வலி, தலை வலியா? | Dr Y Deepa explains

    இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா தமிழ் ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் மன அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை குறித்து பேசிவிட்டோம். தற்போது ஆரோக்கியம் குறித்து பார்ப்போம். நமது உடல் ஆரோக்கியத்தை மேன்மைப்படுத்துவது குறித்து பார்ப்போம்.

    நாடி சோதன பிராணயாமம் குறித்து பார்க்கலாம். இதற்கு நாடி சுத்தி பிராணயாமம் என்ற பெயரும் உண்டு. சுத்தி என்றால் சுத்தப்படுத்துதல். நம் உடலில் உள்ள நாடிகளை 3 ஆக பிரிக்கிறோம். இட நாடி, பிங்கல நாடி, சூஷ்மன நாடி ஆகியவை ஆகும்.

    மூச்சு விடும் போது வயிறு வெளியே வரக் கூடாது.. அந்த பழக்கமே தவறு.. சொல்கிறார் டாக்டர் தீபா மூச்சு விடும் போது வயிறு வெளியே வரக் கூடாது.. அந்த பழக்கமே தவறு.. சொல்கிறார் டாக்டர் தீபா

     பிங்கல நாடி

    பிங்கல நாடி

    இட நாடி என்றால் இடதுப் புறத்தில் உள்ள நாடி. பிங்கல நாடி என்பது வலது புறத்தில் உள்ள நாடி. நாம் காலையில் எழுந்தவுடன் சுறுசுறுப்பாக இயங்க இந்த பிங்கல நாடிதான் காரணமாக இருக்கிறது. பாசிட்டிவாக சிந்திப்பதற்கும், நமது செயல்பாட்டை தெளிவுப்படுத்துவதற்கும் பிங்கல நாடி உதவியாக இருக்கும். இட நாடி என்பது ரெஸ்ட் அன்ட் ரிலாக்ஸேஷன். ஓய்வு எடுக்கக் கூடிய விஷயங்களை இடது நாடி நமக்கு பேலன்ஸ் செய்கிறது.

     உடல் வலி

    உடல் வலி

    இந்த இரு நாடிகளும் சமநிலையில் இருக்கும் போதுதான் சூஷ்மன நாடி தூண்டப்படுகிறது. இந்த நாடிகளை சுத்தம் செய்வதுதான் நாடி சுத்தி பிரணாயாமம். இந்த நாடி சுத்தி பிராணயாமம், நமது காற்றை சுத்தம் செய்து சுத்தமான ஆக்ஸிஜனை கொடுக்கிறது. அது மட்டுமில்லாமல் இது ஒரு பெரிய வலி நிவாரணியும் ஆகும். கொரோனா நேரத்தில் நிறைய பேருக்கு உடல் வலி அதிகமாக இருக்கும். அசதியாக இருப்பார்கள், அதிகமான தலைவலி ஏற்படும்.

     உடல் அசதி

    உடல் அசதி

    இந்த நாடி சுத்தி பிராணயாமம் செய்யும் போது நாடிகளும் சுத்தமாகிறது. நமது இடது மற்றும் வலது மூளைகளை சமமான செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு இந்த பிராணயாமம் உதவுகிறது. இந்த பிராணயாமத்தை ஒரு நாளைக்கு 5 முதல் 10 முறை செய்யலாம். இதனால் நமது உடலுக்கு ஒரு நல்ல ஆக்ஸிஜனேஷன் கிடைக்கிறது.

     நாசிக முத்திரை

    நாசிக முத்திரை

    இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது. இதனால் மனமும் அமைதியாகிறது. இதை காலை மற்றும் மாலை நேரத்தில் வெறும் வயிற்றில் இருக்கும் போது நல்ல சவுகரியமாக உட்கார்ந்து கொண்டு நாசிக முத்திரையை பயன்படுத்தி இடது நாசி வழியாக மூச்சை இழுத்து வலது புறத்தில் விடுவது , வலது புறத்தில் மூச்சை இழுத்து இடது புறத்தில் விடுவது என நாம் தினசரி செய்வதன் மூலம் நமது ஆரோக்கியம் மேன்மைப்படும் என்றார் டாக்டர் தீபா.

    Dr Y Deepa says about Naadi Suddhi Pranayama

    English summary
    Government Yoga and Naturopathy Hospital Dr Y Deepa explains about Naadi Suddhi Pranayama to clear air and increases brain function.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X