• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சன் தெரபி, யோக நித்ரா, அரோமா தெரபி.. கொரோனாவை ஓட ஓட விரட்டும் யோகா.. ஆச்சரியமூட்டும் டாக்டர் தீபா

|

சென்னை: சூரிய குளியலால் வைட்டமின் டி மட்டும் கிடைப்பதில்லை, ரத்த அழுத்தம், ரத்தத்தின் சர்க்கரை அளவும் முறைப்படுத்தப்படும். லிப்பிட் புரோஃபைல் மெயின்டெய்ன் ஆகும் என டாக்டர் தீபா தெரிவித்தார்.

  Dr Deepa says about Sun Exposure therapy, Yoga Nithra, Aroma therapy for Corona treatment

  இதுகுறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்ப துறையின் தலைவர் டாக்டர் தீபா ஒன் இந்தியாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறுகையில், யோகா செய்வதால் நமது உடல் மற்றும் மனதை பேலன்ஸ் செய்யும். யோகா செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நமது மன அழுத்தத்தை குறைக்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு தாடாசனா, திரியக்க தாடாசனா, கட்டி சக்கராசனா, உக்கிராசனா, ஹேண்ட் ஸ்ட்ரெச் பீரித்திங், சேர் பிரீத்திங், பிராமரி பிராணயாமா போன்ற ஆசனங்களை கற்றுக் கொடுக்கிறோம்.

  செயற்கை சுவாசத்தை பயன்படுத்தும் நோயாளிகளுக்கு மூச்சு பயிற்சிகளை கொடுப்பதன் மூலம் நேர்மறையான எண்ணங்களை வளர்க்க உதவுகிறது. இந்த பயிற்சிகளை எல்லாம் நாம் வென்டிலேட்டரில் இருந்து வந்தவுடன்தான் நம்மால் கொடுக்க முடியும். வென்டிலேட்டரில் இருந்து வெளியே வர அவர்களுக்கு யோக நித்ரா எனக்கூடிய யோகிக் டெக்னிக் கொடுக்கப்படுகிறது.

  சளியின் அடர்த்தியை குறைக்கும் நீராவி தெரபி.. கொரோனாவை தொண்டையிலிருந்து துரத்தும்.. டாக்டர் தீபா

  பயம்

  பயம்

  அவர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கிறது. நாம் எப்போதும் ரிதமிக் மூச்சுப் பயிற்சியில் கான்டன்டிரேட் செய்தோமேயானால் நமது மனது ஆசுவாசப்படும். கொரோனாவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் பயத்தால் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. அந்த பயத்தை போக்க யோக நித்ராவை நோயாளிகளின் ஆழ் மனதில் கொடுப்பதன் மூலமாக அவர்கள் வென்டிலேட்டரிலிருந்து மீள்வதற்கு மிகவும் உதவுகிறது.

  தற்கொலை எண்ணங்கள்

  தற்கொலை எண்ணங்கள்

  எனது அனுபவத்தில் இந்த மூச்சு பயிற்சிகளை செய்யும் போது நோயாளிகளுக்கு பாசிட்டிவ் எனர்ஜி அதிகம் கிடைக்கிறது. நோயிலிருந்து மீண்டு மற்ற நோயாளிகளுக்கு ஊக்கமளிக்கும் நிலைக்கு செல்கிறார்கள். குணமடைந்து வீடு திரும்புவோமா, வீடு திரும்பினால் நம்மை வீட்டிலுள்ளவர்கள் என்ன நினைப்பார்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை எப்படி சந்திப்பது போன்றவற்றால் தற்கொலை எண்ணங்கள் எழுகின்றன.

  கொரோனா வார்டு

  கொரோனா வார்டு

  சில நோயாளிகள் கொரோனா வார்ட்டில் இருக்கும் போது அவர்களது நெருங்கிய உறவினர்கள் போன் மூலம் அழைத்தாலும் பேசுவதில்லை. அவர்களை அவர்களாகவே வெளியுலகிலிருந்து தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை அலோபதி மருத்துவத்துடன் இணைந்து 1000 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம். இதில் அவர்களின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது. இதை ஒரு ஆய்வாகவே செய்துள்ளோம்.

  யோகா பயிற்சி

  யோகா பயிற்சி

  தமிழகம் முழுவதும் உள்ள கொரோனா வார்டுகளில் யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவர்கள் முழுவீச்சில் பணியாற்றி வருகிறார்கள். மேற்கண்ட சிகிச்சைகளுடன் சூரிய குளியலையும் செய்ய வைக்கிறோம். பொதுவாக சூரிய வெயிலில் நின்றால் வைட்டமின் டி கிடைக்கும் என்பதுதான் பெரும்பாலானோருக்கு தெரியும். ஆனால் சூரியன் நம் உடம்பில் படும்படி நிற்பதால் நமது ரத்த அழுத்தம், ரத்தத்தின் சர்க்கரை அளவும் முறைப்படுத்தப்படும். லிப்பிட் புரோஃபைல் மெயின்டெய்ன் ஆகும்.

  நோய் எதிர்ப்பு சக்தி

  நோய் எதிர்ப்பு சக்தி

  வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது ப்ரோ இன்ப்ளமேட்டரி சைட்டோகைன்ஸ்களின் அடர்த்தியை குறைக்கும். இதனால் நம் உடலில் உள்ள இன்ப்ளமேஷனை குறைக்கிறது. நுரையீரலில் செயல்படாமல் இருக்கும் விட்டமின் டி ஆக்ட்டிவ்வாக மாறுவதற்கு சூரிய குளியல் உதவுகிறது. வைரஸுக்கு எதிரான தன்மையை இது உற்பத்தி செய்கிறது. இந்த சூரிய குளியலை காலை 7 மணி முதல் 9 மணி வரை எடுக்கலாம்.

  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

  மாலை நேரங்களில் 4 அல்லது 4.30 மணிக்கு பிறகு எடுக்கலாம். 15 முதல் 20 நிமிடங்கள் சூரியனில் நம் உடல் படும்படி நின்றோமேயானால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அது போல் அக்குபிரஷர் பாயிண்ட்களையும் நாங்கள் நோயாளிகளுக்கு கற்றுக் கொடுக்கிறோம். ரெஸ்பிரேட்டரி சேனல்களையும் இம்மியூன் பூஸ்ட் சேனல்களையும் அதிகரிக்க அவர்கள் அந்த பாயிண்ட்களில் செஃல்ப்பாக கொடுத்து கொள்வர்.

  எண்ணெய்

  எண்ணெய்

  இத்துடன் நாங்கள் அரோமா தெரபியையும் கொடுக்கிறோம். அரோமா தெரபி என்றால் பெப்பர் மின்ட் எண்ணெய், நீலகிரி தைல எண்ணெய் ஆகியவற்றை அவர்கள் நுகருவதற்காக கொடுக்கிறோம். ஒரு நாள் முழுவதும் அதை நுகர சொல்கிறோம். இதன் மூலம் செஸ்ட் கன்ஜெஷன் ரீலிவ் ஆகும். சுவாசிக்க எளிதாக இருக்கிறது. மூக்கு அடைப்பு இருப்பவர்கள் இந்த எண்ணெய்யை நுகரும் போது நன்றாக இருக்கும். இதன் மூலம் பிரான்கோ ஸ்பேஸம் ரிலீவ்வாகும். இதை நோயாளிகளே கூறியுள்ளார்கள்.

  பிராணயாமா

  பிராணயாமா

  இந்த அரோமா ஆயில், வைரஸை எதிர்த்து போராடும் திறனை உற்பத்தி செய்கிறது. அந்த அரோமா எண்ணெய் நல்ல வாசத்தை கொடுக்கிறது. அறிகுறியில்லாத கொரோனா நோயாளிகள் சுவையும் வாசனையும் தெரியவில்லை என்பார்கள், அவர்களுக்கு இந்த அரோமா எண்ணெய்யை நாம் தரும்போது 2 நாட்களிலேயே அவர்களது சுவை திறனும் நுகர்வுத் திறனும் திரும்ப கிடைத்து விடுகிறது. பிராணயாமாவை அவர்கள் செய்வதற்காக நிமிர்ந்து உட்காரும் போது நம்மை காக்க யாரோ இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் வருகிறது.

  பேலன்ஸ்

  பேலன்ஸ்

  ஒரு நபருக்கு நாங்கள் சிகிச்சை அளித்தோம். அவர்கள் எங்களிடம் பேசக் கூட மாட்டார். அவர் குணமாகி வீட்டுக்கு சென்ற போது எங்களிடம் கூறியது இதுதான்- வந்த முதல் இரு நாட்களில் நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தேன். ஆனால் நீங்கள் கொடுத்த கவுன்சலிங், மூச்சுப் பயிற்சிகள்தான் இன்று நான் உயிருடன் இருப்பதற்கு காரணம் என சொன்னார். அந்த அளவுக்கு அரசு மற்றும் யோகா மருத்துவத்தில் மனதையும் உடலையும் பேலன்ஸ் செய்யும் திறனுள்ளது என்று கொரோனாவை விரட்டும் பல யோசனைகளை கூறி ஆச்சரியப்படுத்தியுள்ளார் டாக்டர் தீபா.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Government Yoga and Naturopathy Medical College and Hospital Dr Deepa says about Sun Exposure therapy, Yoga Nithra, Aroma therapy against Corona.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X