சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுகப் பிரசவத்துக்கு அலறும் பெண்களே.. இதை பண்ணுங்க.. வலியே இல்லாமல் பிள்ளை பெறலாம்.. டாக்டர் தீபா

Google Oneindia Tamil News

சென்னை: பிரசவம் என்றாலே மறுபிறவ என அச்சப்படும் பெண்களே யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் உதவியுடன் அதிக வலி இல்லாமல் எளிதாக சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் டாக்டர் ஒய் தீபா அறிவுறுத்தியுள்ளார். ஆனால் இவற்றை யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மருத்துவரின் மேற்பார்வையில் மட்டுமே செய்ய வேண்டும் என்பதையும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Recommended Video

    Normal Delivery Tips In Tamil | Dr Y Deepa | Boldsky Tamil

    இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் பெண்கள் சுகப்பிரசவம் அடைய யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் உள்ள எளிய சிகிச்சை முறைகள் குறித்து இந்த பகுதியில் பார்ப்போம். இதன் பெயர் Yoga and Naturopathy for Easy Delivery ஆகும்.

    அந்த காலத்தில் பாட்டிகள், முப்பாட்டிகள் எல்லாம் 16 குழந்தைகள், 10 குழந்தைகள், 7 குழந்தைகள் என மருத்துவமனைகளுக்கே செல்லாமல் எந்த கஷ்டமும் அடையாமல் குழந்தை பெற்று கொண்டார்கள்.

     அதிக பெண்கள்

    அதிக பெண்கள்

    தற்போதுள்ள பெண்கள் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளவே மிகவும் அவதிப்படுகிறார்கள். அதிகமான பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவதையே விரும்புகிறார்கள். இயற்கையாகவே குழந்தை பெற்றுக் கொள்ள முடிந்தாலும் வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ள சிசேரியனை விரும்புகிறார்கள். சிசேரியன் செய்து கொள்வதால் நிறைய பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.

     உடல் பருமன்

    உடல் பருமன்

    அறுவை சிகிச்சை செய்து கொள்வதால் உடல் உழைப்பு குறைந்து உடல் பருமன் ஆகிறது. தண்டுவட பிரச்சினைகள், இடுப்பு வலி ஆகியவற்றால் அவதியடைகிறார்கள். யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் எளிதாக குழந்தை பெற்றுக் கொள்வதை பார்ப்போம். பிரசவ காலத்தில் பெண்கள் நிறைய பிரச்சினைகளை சந்திப்பார்கள். திடீரென மனஅழுத்தம் வரும், இல்லாவிட்டால் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள், இல்லையெனில் சோகமாக இருப்பார்கள். இந்த நேரத்தில் இதற்காக மருந்துகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

    கால்சியம்

    கால்சியம்

    சுயமாக மருந்து எடுப்பதை தவிர்க்க வேண்டும். மலச்சிக்கல் ஏற்படும், கெண்டை கால்களில் வலி ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் கால்சியம் சத்து குறைவாக இருப்பதுதான் முக்கிய காரணம். இதனால் வாயு தொல்லை, மூட்டு வலி, தலைவலி ஏற்படும். சில பெண்களுக்கு பெல்விக் தசைகள் மிகவும் குறைவாகவே இருக்கும். ஒரு சில பெண்கள் உயரம் குறைவால் இப்படி இருக்கும். இன்னொரு சிலருக்கு குறுகிய இடுப்பு எலும்பாகவே இருக்கும். இந்த மாதிரி பெண்களுக்கும் இயற்கை மருத்துவம் மூலம் சுகப்பிரசவம் செய்யலாம். இவர்களுக்கு யோகா பயிற்சிகள் கொடுப்பதால் அவர்களது பெல்விக் தசைகளை வலிமைப்படுத்தி சுகப்பிரசவம் அடைய வைக்கலாம்.

     ஹார்மோன்

    ஹார்மோன்

    வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளர தேவையான ஹார்மோன்களை சுரக்க வைக்க யோகா பயிற்சிகள் உதவும். இது போல் யோகா பயிற்சி செய்யும் போது நம் உடலில் என்டார்பின் (Endorphin) எனும் ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன் சுரப்பதால் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு மனசோர்வு, மன அழுத்தமின்றி மகிழ்ச்சியாக இருக்க உதவும். அது போல் மலச்சிக்கல், மூட்டு வலி, தலை வலி, சோர்வுகள் இவை எல்லாவற்றையும் இந்த ஹார்மோன் தடுக்கும்.

     மிருதுவாக்கும்

    மிருதுவாக்கும்


    இந்த பிரசவ காலத்தை மூன்று நிலைகளாக பிரிக்கலாம். முதல் 3 மாத காலம், 2ஆவது 3 மாத காலம், 3 ஆவது 3 மாத காலம் என பிரிக்கலாம். முதல் 3 மாத காலங்களில் மிகவும் கடினமான உடற்பயிற்சிகளை செய்யக் கூடாது. ஒரு சிலருக்கு கர்ப்பப்பை வலுவில்லாமல் இருக்கலாம். அதனால் வேகமான உடற்பயிற்சிகளை செய்வதை தவிர்க்க வேண்டும். ஒரு சில எளிய பயிற்சிகளை நாம் செய்யும் போது என்டார்பின் என்ற ஹார்மோனுடன் ரிலாக்ஸ் என்ற ஹார்மோனும் சுரக்கும். கர்ப்பப்பையில் இருக்கக் கூடிய திசுக்கள் மிருதுவாக்குவதற்கு இந்த ஹார்மோன்கள் உதவும்.

     தாயின் மனநிலை

    தாயின் மனநிலை

    இந்த நேரத்தில் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவே கூடாது. அதனால் முதல் மூன்று மாதங்களில் (First Trimester) என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம்? நாடி சுத்தி பிரணாயாமம், பிராமரி பிரணாயாமம் ஆகிய மூச்சு பயிற்சிகளை செய்யலாம். இவற்றை நாம் 9 மாதங்களும் தொடர்ந்து செய்யலாம். அதற்கு அடுத்து மந்திரங்களை உச்சரிக்கலாம். அதாவது அகாரம், உகாரம், மகாரம் மந்திரங்களை உச்சரிக்கலாம். தியான பயிற்சி மேற்கொள்ளலாம். நமது சுவாசத்தில் நல்ல கவனம் செலுத்தி ஆழ்ந்த மூச்சு பயிற்சியை செய்யலாம். அனுலோம், வினுலோம் என்ற பயிற்சிகளை செய்யலாம். தாடாசனம், வீராபத்ராசனம், வஜ்ராசனம் ஆகிய ஆசனங்களை செய்யலாம். இவற்றை நாம் செய்வதால் நமது உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்க உதவும். மேலும் குழந்தையின் வளர்ச்சிக்கும், தாயின் மனநிலையை மேம்படுத்துவதற்கும் இது உதவும்.

    ஆசனங்கள்

    ஆசனங்கள்


    அடுத்தது இரண்டாவது மூன்று மாதங்களில் வஜ்ராசனம் செய்தால் ஜீரண பிரச்சினைகளை சரி செய்யும். இந்த Second Trimester-இல்தான் குழந்தையின் உடல் உறுப்புகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். வஜ்ராசனம் செய்வதால் குழந்தையின் உடல் உறுப்புகள் நன்றாக வளம் பெறும். அடுத்தது திரிகோணாசனம் செய்தால் நமது கை, கால்கள் வலிமை பெறும். உடல் மற்றும் மன மாற்றங்களை எதிர்கொள்ள தேவையான நம்பிக்கையையும், மனஉறுதியையும் தர இந்த ஆசனம் உதவும். அடுத்தது விரிக்ஷாசனம், தாடாசனம், கருடாசனம் ஆகிய பேலன்சிங் ஆசனங்களை செய்யலாம். சுவற்றின் உதவியுடன் இவற்றை செய்யலாம். குழந்தையின் வளர்ச்சியை இன்னும் மேன்மைப்படுத்த பிப்பலி ஆசனம் எனப்படும் Butterfly pose-ஐ நாம் செய்வதால் இடுப்பில் இருக்கும் பெல்விக் எலும்புகள், இடுப்பு எலும்புகள் நல்லா விரிவடைந்து குழந்தையின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

    யோகா

    யோகா

    ரத்தம் ஓட்டமும் நன்றாக இருக்கும். குழந்தைக்கு தேவையான ஆக்சிஜனையும் கொடுக்கும். காலில் ஏற்படக் கூடிய தசை பிடிப்புகள் இல்லாமல் தாயும் சேயும் ஆரோக்கியமாக இருக்க உதவும். அடுத்தது ஜானுசிரசானம் இது முன்பக்கமாக குனிந்து செய்வது. கர்ப்ப காலத்தில் இதை எப்படி செய்வது என சந்தேகம் எழலாம். ஆனால் ஒரு யோகா மற்றும் இயற்கை மருத்துவருடைய கண்காணிப்பிலோ அல்லது அறிவுறுத்தலின்படியோ இதை செய்ய வேண்டும். எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். எந்த அளவுக்கு நாம் வளைய வேண்டும், எந்தளவுக்கு மூச்சை உள்ளே இழுக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை அவர்கள் வழங்குவர்.

     முதுகு தண்டுவடம்

    முதுகு தண்டுவடம்

    இந்த ஜானுசிரசாசனத்தை நாம் செய்யும் போது வயிறு வலியை சரி செய்யவும், முதுகு தண்டுவடம் உறுதியாவதற்கும் இது உதவும். மூன்றாவது மூன்று மாதத்தில் (Third Trimester) பத்ராசனம், பத்தகோணாசனம், திரிகோணாசனம், தாடாசனம், ஏகாபாத தித்திலி ஆசனம் , பர்வதாசனம் ஆகியவற்றை நாம் செய்யலாம். இந்த ஆசனங்களை டெலிவரி காலம் வரை தொடரலாம். பிரசவ நேரத்தில் ஏற்படும் இடுப்பு வலி அதிகமாக இல்லாமல் சுகப்பிரசவம் ஏற்படவும் இந்த ஆசனங்கள் உதவும். முதுகு தண்டுவடத்தை நன்றாக டோன் செய்து அங்கு அழுத்தமோ வலியோ இல்லாமல் அதே நேரத்தில் யூட்ரின் கன்டிராக்ஷனையும் மெயின்டெய்ன் செய்யும். மிகவும் வலி இல்லாமல் எளிதாக டெலிவரி ஆக வழி வகை செய்யும். இத்துடன் இந்த 9 மாதங்களும் யோக நித்ரம் என சொல்லக் கூடிய மனதை ரிலாக்ஸ் செய்யக் கூடிய ஒரு ரிலாக்சேஷன் டெக்னிக்கை நாம் நிச்சயம் செய்யலாம் என்றார் டாக்டர் தீபா.

    English summary
    Government Yoga and Naturopathy hospital Manipulaive therapy HOD Dr Y Deepa says about how to easily deliver a baby through normal delivery.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X