சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூச்சு விடும் போது வயிறு வெளியே வரக் கூடாது.. அந்த பழக்கமே தவறு.. சொல்கிறார் டாக்டர் தீபா

Google Oneindia Tamil News

சென்னை: நுரையீரலில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்ய பிராண முத்திரையை செய்ய வேண்டும் என அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்ப மருத்துவத் துறை தலைவர் டாக்டர் ஒய் தீபா அறிவுறுத்தியுள்ளார்.

Recommended Video

    கொரோனா நோயாளிகளே.. நுரையீரலில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்ய பிராண முத்திரை

    இதுகுறித்து டாக்டர் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில் கொரோனா காலத்தில் சில முத்திரைகளை பயன்படுத்துவதன் மூலமாக நமது எதிர்ப்பு சக்தியை அதிலும் குறிப்பாக பிராண சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

    இது கொரோனா நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவர்கள் சீக்கிரமாக குணமாவதற்கும் ஏற்றதாக இருக்கிறது. பிராணயாமத்துடன் சில முத்திரைகளை அவர்களுக்கு கொடுக்கிறோம். பிராணயாமம் என்றால் பிராணசக்தியை கட்டுக்குள் வைத்திருப்பது.

    லாக்டவுன் 6.0 அமல்.. தமிழகத்தில் இன்று எதெல்லாம் இயங்கலாம்?.. எதெல்லாம் இயங்க கூடாது?.. லிஸ்ட் இதோ!லாக்டவுன் 6.0 அமல்.. தமிழகத்தில் இன்று எதெல்லாம் இயங்கலாம்?.. எதெல்லாம் இயங்க கூடாது?.. லிஸ்ட் இதோ!

     முத்திரை

    முத்திரை

    இது போல் பிராணயாமத்துடன் சில முத்திரைகளை செய்யும் போது மன அழுத்தத்தை குறைக்கிறது. இந்த பிராண சக்தியை உடம்பில் எந்த இடத்தில் ஆற்றல் சக்தி குறைவாக இருக்கிறதோ அந்த இடத்தில் எனர்ஜியை கொண்டு சேர்ப்பதற்கு இந்த பிராண முத்திரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

     உட்கார வேண்டும்

    உட்கார வேண்டும்

    இதை எப்படி செய்ய வேண்டுமெனில் நமது கட்டைவிரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல் ஆகிய 3 விரல்களின் நுனிகளை மட்டும் நாம் டச் செய்ய வேண்டும். மேல் நோக்கி பார்த்த மாதிரி நிமிர்ந்து உட்கார வேண்டும். பின்னர் நமது சுவாசத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

     வயிறு உள்ளே

    வயிறு உள்ளே

    கொரோனா நோயாளிகளுக்கு அவர்களின் மூச்சில் கவனம் செலுத்தி இந்த பிராண முத்திரையை செய்ய கூறுகிறோம். இந்த பிராண முத்திரை செய்யும் போது அவர்களின் வயிற்று பகுதியில் மூச்சை உள்ளே இழுக்கும் போது வயிறு வெளியே வர வேண்டும். மூச்சை வெளியே விடும் போது வயிறு உள்ளே செல்ல வேண்டும் என்ற கவனத்தை செலுத்த வேண்டும்.

    நுரையீரல்

    நுரையீரல்

    பிராணம் என்றால் நாம் பிறக்கும் போது மூச்சை உள்ளே இழுக்கிறோம். நமது பிராணம் போகும் போது நமது உயிர் போகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நமது பிராண சக்தியை அதிகரிப்பது நமது சுவாசம்தான். இதை பிராண முத்திரையுடன் செய்யும் போது நமது நுரையீரலில் இருக்கக் கூடிய கிருமிகளை வெளியேற்றுவதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.

    English summary
    Government Yoga and Naturopathy Hospital Doctor Y.Deepa says that Prana muthirai is useful to clean the lungs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X