சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆன்லைனில் பாடம்.. மாணவர்களின் கண் பார்வை, ஞாபக திறன் அதிகரிக்க.. டாக்டர் தீபா கூறுவதை கேளுங்க!

Google Oneindia Tamil News

சென்னை: ஆன்லைன் மூலம் பாடம் படிக்கும் மாணவர்கள் நீண்ட நேரம் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் கண் பார்வை கோளாறு, கவன சிதறல், தூக்கமின்மை ஆகியவற்றை சரி செய்ய எளிய யோகா பயிற்சிகள் குறித்து கற்று கொடுக்கிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்ப மருத்துவத்தின் தலைவர் டாக்டர் ஒய் தீபா தெரிவித்தார்.

Recommended Video

    Health Tips : மாணவர்களின் கண் பார்வை, ஞாபக திறன் அதிகரிக்க..

    இதுகுறித்து டாக்டக் ஒய் தீபா கூறுகையில் லாக்டவுன் நேரத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி வருகிறார்கள். அவ்வாறு ஆன்லைன் மூலம் பாடம் படிக்கும் மாணவர்கள், நீண்ட நேரம் செல்போன் பார்ப்போருக்கான எளிமையான யோகா பயிற்சிகளை நாம் காண்போம்.

    அது போல் மாணவர்களின் ஞாபக சக்தியையும் அதிகரிக்கும் பயிற்சியையும் பார்ப்போம். இந்த கண் பயிற்சியை அவர்கள் செய்வதன் மூலம் கண்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் அவர்களின் பார்வை திறனும் அதிகமாகும். மொபைல் அதிகமாக பார்ப்பது, சிஸ்டம் அதிகமாக பயன்படுத்துவது, டிவி அதிகமாக பார்ப்பது உள்ளிட்டவைகளால் நம் பார்வையில் கோளாறுகள் ஏற்படலாம்.

    ஆன்லைன் கிளாஸ்: எல்கேஜி, யூகேஜிக்கு 30 நிமிடம்.. 1 டூ 12ம் வகுப்புக்கு எப்படி? வெளியான கால அட்டவணைஆன்லைன் கிளாஸ்: எல்கேஜி, யூகேஜிக்கு 30 நிமிடம்.. 1 டூ 12ம் வகுப்புக்கு எப்படி? வெளியான கால அட்டவணை

    பார்வை

    பார்வை

    இதனால் அவர்களின் ஞாபக சக்தி குறையும். பார்வையும் குறையும். இரவில் தூக்கமும் கெடும். நம் கண்களில் விழும் கதிர்வீச்சுகளானது செரடோன் ஹார்மோன் இடையூறை அளிக்கும். இரவு நேரத்தில் சுரக்கக் கூடிய மெலடோனின் என்ற ஹார்மோன் சுரப்பதை தடுத்து அவர்களின் தூக்கத்தை கெடுக்கும்.

    மூளை

    மூளை

    நாளடைவில் அவர்கள் மன அழுத்தத்திற்கும் ஆளாகலாம். எனவே நாம் முன்கூட்டியே அவர்கள் பார்வை குறைபாடு, ஞாபக சக்தி குறைபாடு, மன அழுத்தம் ஆகியவற்றிற்கு தீர்வு காண இந்த எளிய பயிற்சிகளை மாணவர்கள் செய்ய வேண்டும். இந்த மாதிரியான எளிமையான பயிற்சிகளை நமது சுவாசத்தின் மீது கவனம் செலுத்தி செய்வதன் மூலம் நமது மூளையை செயலாற்ற வைக்க முடியும்.

    கரு உருவாக்கம்

    கரு உருவாக்கம்

    நம் வயிற்றில் குழந்தையின் கரு உருவானவுடன் கண் வளர்ச்சிகள் ஏற்படுகிறது. உண்மையை சொல்ல போனால் கண் வளர்ச்சி அடைவது கர்ப்பம் தரித்த 2ஆவது வாரம்தான். ஆனால் மூளையின் எக்ஸ்ட்ரா குரோத்தாகத்தான் நாம் இதை பார்க்கிறோம். ஆப்டிக்கல் நரம்பு, ரெட்டினால் ஆகியவை 2ஆவது வாரத்தில்தான் உருவாகிறது.

    பயிற்சி

    பயிற்சி

    நம் மூளையில் எந்த ஒரு விஷயத்தையும் சேமிக்க இந்த கண்கள் நமக்கு மிகவும் பயனுடையதாக உள்ளன. இந்த கண்கள் நமது எமோஷனலான விஷயங்களை மற்றவர்களுக்கு காண்பிக்கிறது. அப்படிப்பட்ட கண்களை நாம் பாதுகாக்க வேண்டும். அதிலும் குழந்தைகளின் பார்வை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவர்களின் பார்வை கெட்டு போகாமலும் கவனச் சக்தி சிதறாமலும் பார்த்து கொள்ள இந்த பயிற்சிகளை செய்ய வேண்டும் என்றார் டாக்டர்.

    English summary
    Government Yoga and Naturopathy Hospital Manipulative therapy's Dr Y. Deepa says to cure eye problems those who attend online classes, watch cellphones and TV.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X