சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

”சந்தல்” சமூகத்தின் திரௌபதி முர்மு புகழ் “சந்தனமாக” மணக்கட்டும் - ரைமிங்கில் வாழ்த்திய கிருஷ்ணசாமி

Google Oneindia Tamil News

சென்னை: ஒடிசா மாநிலத்தின் சந்தல் சமூகத்தை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவின் புகழ் உலகம் முழுவதும் சந்தனமாக மனக்கட்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பணியில் ஆளும் பாஜகவும், காங்கிரஸ், திரிணாமூல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் முழு மூச்சாக இறங்கின.

அன்புமணி ஃபர்ஸ்டு.. ஓபிஎஸ் நெக்ஸ்டு.. பாஜக தந்த ட்விஸ்டு! திரௌபதி நிகழ்வில் அண்ணாமலை செய்த காரியம் அன்புமணி ஃபர்ஸ்டு.. ஓபிஎஸ் நெக்ஸ்டு.. பாஜக தந்த ட்விஸ்டு! திரௌபதி நிகழ்வில் அண்ணாமலை செய்த காரியம்

குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள்

குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள்

அதன் விளைவாக இன்று காலை முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார்.

வேட்புமனுத் தாக்கல்

வேட்புமனுத் தாக்கல்

இந்த நிலையில், இன்று குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவை மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆதரவு திரட்டிய திரௌபதி

ஆதரவு திரட்டிய திரௌபதி

இந்த நிலையில் இன்று திரௌபதி முர்மு இன்று சென்னை வந்து கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார். சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

 கிருஷ்ணசாமி வாழ்த்து

கிருஷ்ணசாமி வாழ்த்து

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கிருஷ்ணசாமி, "ஒடிசா மாநிலத்தில் Santal சமூகத்தில் பிறந்த திரௌபதி முர்மு அவர்களின் புகழ் இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் sandal - சந்தனமாக மனக்கட்டும்! திரௌபதி முர்மு அவர்கள் அமோகமான வெற்றி பெற்று, தான் பிறந்த சமுதாயத்திற்கு மட்டுமன்றி, பாரத தேசத்திற்கு உலகளவில் மிகப் பெரிய நன்மதிப்பையும் மரியாதையையும் உருவாக்குவதோடு; இந்தியாவை ஒரு வலுவான தேசமாக உருவாக்கிட அவர் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Draupadi Murmu of the “Santal” community fame spread like a “sandal” smell as she was contested in President election for NDA – Krishnasamy congratulated: : ஒடிசா மாநிலத்தின் சந்தல் சமூகத்தை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவின் புகழ் உலகம் முழுவதும் சந்தனமாக மனக்கட்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X