சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிசம்பர்தோறும் சென்னையில் 'வானம் திருவிழா..' சாமானியர்களின் கலையை மேடையேற்றுகிறார் பா. ரஞ்சித்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில், வானம் என்ற பெயரில் கலைத்திருவிழா நடத்த உள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வானம் கலை திருவிழா டிசம்பர் 29, 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் சென்னை மயிலாப்பூரில் நடைபெற இருக்கிறது. அதற்கான அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

Driector Pa.Ranjith said, he will conduct art festival

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், வானம் நிகழ்ச்சியின் மூலம் எல்லாரையும் ஒன்று இணைக்கும் முயற்சியை முன்னெடுக்கிறோம். புரட்சியாளர் அம்பேத்கார் பெரியார், மாக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளுவதற்கு இது தகுந்த மேடையாக இருக்கும். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இந்த புரட்சியாளர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அரசியல் குறித்த முன்னேற்படுகளாக இந்த நிகழ்ச்சி அமையும்.

வானம் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் நடக்கும். இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு போதிய ஆட்கள் இல்லை. பலர் சினிமாவில் உள்ளே வந்து இருக்கிறோம். கிளாசிக் பாடல்களுக்கும் குத்து பாடல்களுக்கும் ஒரு வித்தியாசம் காட்டப்படுகிறது. இந்த முரண்பாடு மாற வேண்டும். திரைப்படத்தில் குத்துப்பாட்டு என்பதை குறைத்து பேசுவதே தவறு. மக்கள் ஏற்கத்தான் செய்கிறார்கள்.

மக்களுக்கு எது பிடிக்கும் என்பதை பொறுப்பில் உள்ளவர்கள் தீர்மானிக்கின்றனர். ஆனால், மக்களுக்கு எது பிடிக்கும் என புரிந்து கொள்ள வேண்டும். பரி ஏறும் பெருமாள் படத்தை யாரும் எடுக்கதாக போது நான் துணிந்து எடுத்தேன். அது மக்களுக்கு பிடித்து விட்டது.

இந்த படம் வெளிவரும் போது பல சிக்கல்கள் இருந்தது. அதை சந்தித்தேன். நம்முடைய இசையும், கலாச்சாரமும் எதற்கும் குறைந்தது இல்லை. எனவே இதை மேடையேற்ற நினைக்கிறேன். முன்பு இருந்தவர்களுக்கு இதெல்லாம் கலையாக தெரியவில்லை.

இந்த வானம் கலை திருவிழாவில், அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் நூல்களை திரட்டி, 3 கருத்தாளுமைகளை ஒன்றிணைத்து 3 நாட்களும் புத்தகங்களை கண்காட்சிக்கு வைக்க உள்ளேன். பெரியார் குத்து பாடலுக்காக சிம்புவிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்தார்.

English summary
Driector Pa.Ranjith said, he will conduct art festival in the name of Vanam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X