சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடிகாரர்களே..! திருந்துங்க…!அப்பதான் குடியை ஒழிக்க முடியும்..! அமைச்சரின் சூப்பரான யோசனை

Google Oneindia Tamil News

சென்னை:குடிகாரர்கள் திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து கூறியுள்ளார்.

வருவாய்க்காக டாஸ்மாக்கை நம்பாமல் மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தி இருக்கிறது. தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை குறைக்க வலியுறுத்தியும், டாஸ்மாக் கடைகளை 2 மணி முதல் 8 மணி வரை திறக்க உத்தரவிடக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 Drinking cannot be abolished by drinkers says minister jayakumar in chennai

பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இந் நிலையில், இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:மதுவை கொண்டுவந்தது திமுகதான். கொண்டு வராமல் இருந்திருந்தால் அதேநிலை நீடித்திருக்கும். மது கூடாது என்பதுதான் எங்களுடைய உணர்வும்.

ஆனால் காலம் காலமாக மது குடித்து பழக்கப்பட்டுவிட்டார்கள். பொதுமக்கள் மது அருந்தாமல் இருந்தாலே மது விற்பனை தொடர்பான பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.

ஜனநாயக நாட்டில் தேர்தலில் விருப்ப மனு யார் வேண்டுமானாலும் அளிக்கலாம். யாரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கலாம் என்பதை தேர்தல் குழு முடிவெடுக்கும் என்று அவர் கூறினார்.

English summary
If drinkers do not change the immigrants cannot be eliminated says Minister Iayakumar in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X