சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை முத்தமிட்டது காவிரி தண்ணீர்.. முதல் சோதனை வெற்றிகரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    வேலூர்: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர்..! குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு...

    சென்னை: ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவரும் முதல் கட்ட சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது. மேட்டுசக்கர குப்பத்தில் உள்ள தொட்டியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் ரயில் நிலையம் அமைந்துள்ள பார்சம்பேட்டையை சென்றடைந்துள்ளது.

    சென்னையில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்கள் மூலம் காவிரி கூட்டுக் குடிநீரை கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்ததுள்ளது. , இத்திட்டத்திற்கு ரூ.65 கோடிநிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவாக நடந்து வந்தன. நேற்று இறுதிகட்ட பணிகள் நடந்தது. இதனால் நேற்றே சோதனை ஓட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பணிகள் நிறைவு பெறாததால் இன்று பிற்பகலில் தான் சோதனை ஓட்டம் தொடங்கியது.

    Drinking water from Jolarpe to Chennai by trains, test drive succesfully started

    ஜோலார்பேட்டை அருகே மேட்டு சக்கரக்குப்பம் பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் மேட்டூரில் இருந்து கொண்டு வரப்படும் காவிரி கூட்டுக் குடிநீரை பம்பிங் செய்து சேமித்து வைக்கப்பட்டது. அந்த தண்ணீரை ரயில் நிலையத்தை ஒட்டிய பார்சம்பேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    கொஞ்சம், கொஞ்சமாக தினகரன் கட்சி உதிர்ந்து வருகிறது... தமிழிசை விமர்சனம் கொஞ்சம், கொஞ்சமாக தினகரன் கட்சி உதிர்ந்து வருகிறது... தமிழிசை விமர்சனம்

    தற்போது தண்ணீர் பார்ச்சம்பேட்டையைச் சென்றடைந்தது. அங்கிருந்து சில மீட்டர் தூரம் தள்ளி உள்ள ரயில் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

    பார்சம்பேட்டையில் இருந்து தண்ணீர் அங்கிருந்து 5-வது நடைமேடையில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு கொண்டு சென்று அங்கு பொருத்தப்பட்டுள்ள குழாய்கள் மூலம் ரயில்வே வேகன்களில் நிரப்பட உள்ளது. எனவே வரும் ஜூலை 12-ம் தேதி அன்று சென்னைக்கு ரயில்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைப்பார் என தெரிகிறது. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வில்லிவாக்கம் வரும் தண்ணீர் அங்கிருந்து குழாய் மூலம் சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.

    இதனிடையே ஜோலார்பேட்டை - சென்னைக்கு தண்ணீர் கொண்டுசெல்ல தேவைப்படின் கூடுதல் ரயில்கள் அனுமதிக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு எம்பி கணேசமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு இந்த பதிலை அளித்துள்ளார்.

    English summary
    Drinking water to Chennai by trains from Jolarpet, test drive today, from july 10 will get train
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X