சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பாஜக"வுக்கு எதிராக பேசினால்.. குறி வைக்கப்படுகிறார்களா.. பதட்டத்தில் பாலிவுட்.. டென்ஷனில் கலைஞர்கள்

போதை நடிகைகளை பாஜக குறி வைப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: பாலிவுட் நடிகைகள் பலர் தொடர்ந்து குறி வைத்து போதைப் பொருள் வழக்கில் ஏன் சிக்குகிறார்கள் என்ற பரபரப்பான கேள்வி வலுத்து வருகிறது.

போதைப் பொருள் விவகாரம் நாடு முழுவதும் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக பாலிவுட்டை ஆட்டிப்படைத்து வருகிறது. அப்படியே கர்நாடகத்தையும் இது தொட்டு உலுக்கி எடுத்தது. இதில் சிலர் சிக்கியும் வருகின்றனர்... ஆனால் இதற்கு பின்னால், பாஜகவின் காழ்ப்புணர்ச்சி இருப்பதாக ஒரு விமர்சனம் எழுந்துள்ளது.

பிரபல நடிகர் கரண் ஜோஹர் கோகோ கிளப்பில் நடத்திய பார்ட்டியில் தீபிகா படுகோனே, சோனாக்ஷி, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

 போதை

போதை

அந்த பார்ட்டியில் எல்லாரும் ஒரு விதமான போதையில் இருந்திருக்கிறார்கள்.. இது சம்பந்தமான வீடியோவும் வெளியானது.. இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அகாலி தளம் கட்சி சார்பில் புகார் தர போவதாக ஒரு அறிவிப்பு வெளியானது.. ஆனால், அது எந்த அளவில் இப்போது உள்ளது என்று தெரியவில்லை.

ட்வீட்

ட்வீட்

ஆனால், கங்கனா ரனாவத் இந்த விஷயத்தில் சீரியஸாக இறங்கி விட்டார்.. இவர் மோடிக்கு நெருக்கமானவர்.. டக்கென ஒரு ட்வீட்டை போட்டார்.. "தீபிகா படுகோனே லவ் பெயிலியர் ஆனவர்.. அதனால் போதை பழக்கம் இருக்கிறது.. அதனால் போதை தடுப்பு போலீசார் இதை உடனே விசாரிக்க வேண்டும்" என்று சொல்லவும், பாலிவுட் வட்டாரமே அதிர்ந்தது.. ஒருவித பரபரப்பும் தொற்றி கொண்டது.

விசாரணை

விசாரணை

கங்கனா போட்ட ட்வீட்டின் அடிப்படையில் போதைத்தடுப்பு போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.. தீபிகாவின் மேனேஜரை பிடித்தால் எல்லாம் தெரியவரும் என்றும் கருதி, அவரை விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனராம்.. இதைதவிர, அந்த பார்ட்டிக்கு போன மற்ற நடிகைகள் யார் யார் என கண்டுபிடித்து அவர்களையும் விசாரிக்க உள்ளனராம்.

 சிக்கல்

சிக்கல்

ஒருவேளை கங்கனா சொன்னதுபோல, நடிகைகள் சிலர் போதை விவகாரத்தில் சிக்கியதாகவே இருந்தாலும், இந்த விவகாரத்தை யாரும் அவ்வளவாக வரவேற்கவில்லை.. காரணம், பாஜகவுக்கு எதிராக பேசியவர்கள், பாஜகவுக்கு எதிராக கருத்து சொன்னவர்களை மட்டுமே பாஜக குறி வைப்பதாக ஒரு விமர்சனம் எழுந்துள்ளது.

 அர்பன் நக்சல்கள்

அர்பன் நக்சல்கள்

"முன்பு கௌரி லங்கேஷை சுட்டுக் கொன்றார்கள்... பிறகு வரவர ராவ் போன்றோரை அர்பன் நக்சல்கள் என்று சொல்லி ஜெயிலில் தள்ளினார்கள்.. இப்போது தீபிகா.. ஏனென்றால், சிஏஏ விவகாரம் வெடித்தபோது, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களை டெல்லி போலீஸ் கடுமையாக தாக்கியது.. அந்த மாணவர்களுடன் சேர்ந்து தெருவில் இறங்கிய போராடியவர் தீபிகா.. அதனால்தான் அவர் மீது பாஜகவுக்கு காண்டு" என்கிறார்கள்.

நடிகைகள்

நடிகைகள்

அதுமட்டுமல்ல, ஃபேமஸ் ஸ்டார்களான ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் போன்றோரை யாரையுமே இதுவரை தீபிகா குறையே சொன்னது இல்லை.. எதற்காக மற்ற நடிகைகளை விடாமல் துரத்தி துரத்தி பழியை போடுகிறார் என்ற கேள்வியையும் பாலிவுட்டில் எழுப்புகிறார்கள்.

 சுஷாந்த் சிங்

சுஷாந்த் சிங்

தற்கொலை செய்து இத்தனை நாள் ஆகியும், சுஷாந்த் சிங் மரணம் குறித்த மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை.. அதை வெறுமனே "தற்கொலை" என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு, போதைப்பொருள் விவகாரத்தை இப்போது திசை திருப்ப பாஜக ஏன் முயற்சிக்கிறது என்ற சந்தேகத்தையும் கிளப்பி உள்ளனர்.

 சந்தேகங்கள்

சந்தேகங்கள்

இவ்வளவு சந்தேகங்கள், கேள்விகள், ஒருபக்கம் எழுந்தாலும், தீபிகாவுக்கு அடுத்து, சோனாக்ஷியை குறி வைக்கிறதாம் பாஜக.. இதற்கு காரணம், வரப்போகும் பீகார் தேர்தலில் எதையும் பாஜகவுக்கு எதிராக அவர் பேசிவிடக் கூடாது என்பதற்காக இப்பவே அலர்ட் செய்வதற்காகத்தான் இந்த குறியாம்... இப்படி பாஜகவின் போக்கு வேறு மாதிரியாக சென்று கொண்டுள்ளதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது!

English summary
drug abuse case: BJP politics Actress Kangana Ranaut
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X