சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கையில் கட்டு போட்டுகொண்டு.. அப்பிராணி மாதிரி நிற்கிறாரே.. சார் நேத்து பேசிய பேச்சை கேட்டால்.. !

Google Oneindia Tamil News

Recommended Video

    குடிபோதையில் கார் ஓட்டி விபத்து.. தொழிலதிபர் இளைஞர் கைது-வீடியோ

    சென்னை: கையில் கட்டு போட்டுகொண்டு, அப்பிராணி மாதிரி நிற்கிறாரே.. இந்த சார்தான், நேத்து போலீசாரை வண்டை வண்டையாக திட்டியவர்.

    நேற்று அதிகாலை 2.30 மணிக்கு, சென்னை ஈசிஆர் சாலை நீலாங்கரையில் ரெட் கலர் கார் ஒன்று தாறுமாறாக வந்தது. வந்த வேகத்தில், ரோட்டோரம் நின்றிருந்த ஆட்டோ மீது மோதியது.

    அந்த ஆட்டோவுக்குள் இருந்த டிரைவர், சுதாரித்துக் கொண்டு ஒரே தாவாக தாவி நூலிழையில் உயிர் பிழைத்துவிட்டார்.

    விபத்து

    விபத்து

    பிறகு அந்த கார் மோதி நொறுங்கியது. இதை பார்த்த ரோந்து போரீசார் யாருக்கு என்ன ஆச்சோ என்று பதறி ஓடிவந்தனர். அப்போது காருக்குள் சில இளைஞர்கள் இருந்துள்ளனர். இத்தனை பேர் இருக்க, ஒரே ஒரு இளைஞர் மட்டும் காரை விட்டு கீழே இறங்கி வந்து போலீஸ்காரர்களை திட்ட ஆரம்பித்தார்.

    நீலாங்கரை

    நீலாங்கரை

    பேச்சா அது.. அவ்வளவும் காது கொடுத்து கேட்க முடியவில்லை. அங்கிருந்த போலீசாரையும் தள்ளி விட்டார். போதையில் இருந்ததால், அவர் யார் என்ன விவரம் என்று போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை அங்கிருந்து நீலாங்கரை ஸ்டேஷனுக்கு நகர்த்தி கொண்டு போகவே ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.

    தொழிலதிபர்

    தொழிலதிபர்

    பிறகு போதை தெளிந்தபிறகுதான் விசாரணை ஆரம்பமானது. இளைஞர் பெயர் நவீன், சொந்த ஊர் மதுரை மாவட்டம் விளாங்குடி என்பதும் தெரியவந்தது. அது மட்டுமில்லை.. இவர் ஒரு தொழில் அதிபராம். பழங்களை வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பிசினஸ் பார்த்து வருகிறார்.

    நவீன் கைது

    நவீன் கைது

    சொந்த ஊருக்கு காரில் போகும்போதுதான் இந்த அக்கப்போர் நடந்துள்ளது. முதல் வேலையாக, போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால், போலீசார் நவீனின் டிரைவிங் லைசென்ஸை ரத்து செய்ய பரிந்துரைத்தனர். பின்னர், 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து செய்தனர். இப்போது போலீசின் பிடியில் உள்ளார் இந்த தொழிலதிபர்!

    English summary
    Drunkard businessman has arrests who shout in front of police in Chennai ECR Road
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X