சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுஜித் போயாச்சு.. எல்லாம் முடிஞ்சாச்சு.. அடுத்து என்ன செய்ய போகிறோம்?

பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும்

Google Oneindia Tamil News

Recommended Video

    Sujith rescue operation | எல்லாமே முடிஞ்சு போச்சு.. சுஜித்தின் தாயார் உருக்கம்!

    சென்னை: சுஜித்தை பறி கொடுத்து விட்டோம்.. எல்லாம் முடிந்து விட்டது.. கண்கள் வற்றும் வரை அழுதும் ஆயாச்சு.. அடுத்து?.. சமூக வலைதளங்களில் ஆக்ரோஷமாக ஹேஷ்டேக் போட்டு பொழுதைப் போக்கப் போகிறோமா அல்லது ஆக்கப்பூர்வமாக என்னதான் செய்யப் போகிறோம்.. இதுதான் மக்கள் முன் எழுந்து நிற்கும் மிகப் பெரிய கேள்வி.

    மக்களுக்கு ஒரு பொதுவான மன நிலை உள்ளது. ஏதாவது ஒரு பரபரப்பு என்றால் கூடவே மனதும் ஓடி வரும்.. கருத்துக்களை சரமாரியாக எடுத்துச் சொல்லும்.. அந்த பரபரப்பு ஓய்ந்த பின்னர் அத்தோடு மனசும் நின்று விடும்.. அடுத்த பரபரப்புக்கு மனசு போக ஆரம்பித்து விடும். இப்படித்தான் சில பல வருடங்களாக நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

    இன்று சுஜித்திடம் வந்து நிற்கிறோம்.. சுஜித் பிரச்சினைக்கு உண்மையில் யார் காரணம்.. மக்களாகிய நாம்தான்.. இதுதான் உண்மை, எதார்த்தம். நம்மிடமிருந்து தொடங்கியதுதான் இந்த விபரீதம்.. நாம்தான் இதன் பிள்ளையார் சுழி. நமது அஜாக்கிரதை, நமது கவனக்குறைவு, நமது அலட்சியம்தான் சுஜித்தை இன்று நம்மிடமிருந்து பறித்துக் கொண்டுள்ளது.

    சுஜித் உடல் சிதைந்தது எப்படி.. அழுகும் நிலைக்கு போக காரணம் என்ன.. ஏன் இப்படி ஒரு துயர முடிவு?சுஜித் உடல் சிதைந்தது எப்படி.. அழுகும் நிலைக்கு போக காரணம் என்ன.. ஏன் இப்படி ஒரு துயர முடிவு?

    தண்ணீர் பிரச்சனை

    தண்ணீர் பிரச்சனை

    போர்வெல் போடுவது இன்று அதிகரித்து விட்டது. எங்கு பார்த்தாலும் தண்ணீர்ப் பிரச்சினை. பல நூறு அடிகளுக்கு போர் போடுவது சாதாரணமாகி விட்டது. அதிலும் கிராமப்புறங்களில் புற்றீசல் போல போட்டுத் தள்ளி விடுகிறார்கள். காரணம், அவர்களுக்கு தண்ணீர் தேவை அதிகம் என்பதால். வேலூர் மாவட்டத்திற்குப் போய்ப் பார்த்தால் பார்க்கலாம்.. கிராமங்களில் எல்லாம் சாலையோரமாக,வயல் வெளி ஓரமாக, தோப்புகள் ஓரமாக நிறைய போர்வெல் குழிகளைக் காண முடியும்.

    சிக்கல்

    சிக்கல்

    எல்லாக் குழிகளும் 300 அடி, 400 அடி, 600 அடி என்று சர்வ சாதாரணமாக சொல்கிறார்கள். ஆனால் அத்தனையும் பாதுகாப்பானதா என்றால் இல்லை. புதர் மண்டிப் போய்க் கிடக்கும். ஏதாவது கல்லைப் போட்டு அடையாளம் வைத்திருப்பார்கள் அவ்வளவுதான். தெரிந்தவர்கள் போக மாட்டார்கள். தெரியாதவர்கள் ஏடாகூடமாக கால் வைத்து விட்டால் சிக்கல்தான்.

    அலட்சியம்

    அலட்சியம்

    இங்குதான் நாம் தவறிழைக்க ஆரம்பிக்கிறோம். போர்வெல்கள் பயன்படுத்தாமல் விடும்போது அதை பாதுகாப்பான முறையில் மூடுவது கிடையாது. ஒரு 200 முதல் 500 ரூபாய் செலவு செய்தால் அதை பாதுகாப்பான முறையில் மூடி விடலாம். ஆனால் நாம் செய்யத் தயங்குகிறோம் அல்லது அலட்சியமாக விட்டு விடுகிறோம்.

    போர்வெல்

    போர்வெல்

    இன்று போர்வெல் கிணறுகளில் விழுந்து தவிக்கும் குழந்தைகள் எல்லாமே கிராமத்துக் குழந்தைகள்தான். வசதியற்றவர்கள், விவசாயிகள், ஏழைகள்தான் இப்படி தொடர்ந்து சிக்கலுக்குள்ளாகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் கிராமப்புறங்களில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள போர்வெல் கிணறுகளால் ஏற்படும் அபாயம் குறித்து அவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    ரசிகர் மன்றங்கள்

    ரசிகர் மன்றங்கள்

    எப்படி பொது இடத்தில் மலம் கழிக்கக் கூடாது என்று சொல்கிறோமோ, இயக்கமாக எடுத்துச் சொல்கிறோமோ அதேபோல போர்வெல் கிணறுகளையும் இயக்கம் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நிலை வந்துள்ளது. இதை தொண்டு நிறுவனங்கள் கையில் எடுக்க வேண்டும். எத்தனையோ நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் உள்ளன. அவர்கள் செய்யலாம். உள்ளூர் அரசியல்வாதிகள் செய்யலாம். அரசு என்ன செய்தது என்று கேட்பதை விட இது எளிமையானது, வலிமையானதும் கூட.

    தவறுகள்

    தவறுகள்

    நாம் சரியாக இருக்கும்போது எந்த துயரமும் அண்டாது. சுஜித் விழுந்த போர்வெல் கிணற்றை சற்றே பாதுகாப்பான முறையில் மூடியிருந்தால் இன்று அவனது உயிர் போயிருக்குமா.. இத்தனை துயரம் ஏற்பட்டிருக்குமா.. நிச்சயம் இதைத் தவிர்த்திருக்க முடியும். இனியாவது சுஜித்தை மனதில் ஏந்தி, ஒவ்வொரு கிராமத்திலும் வசிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாக்கப்பட வேண்டும். இது மிக மிக அவசியம்.. குழந்தைகள் எந்த தவறும் செய்யாதவர்கள்.. அவர்களை கொல்வதற்கு நமக்கு எந்த உரிமையும் கிடையாது.. மிகக் கடுமையான தவறிழைப்பவர்கள் பெரியவர்களாகிய நாம்தான்.. எனவே நாம் முதலில் திருந்த வேண்டும். இனியாவது அதைச் செய்வோமா?!

    English summary
    sujith rescue operation failue: dry borewell should be closed, This is a real tribute to sujith
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X