கனமழை எதிரொலி.. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. சென்னையில் நிலை என்ன?

சென்னை: கனமழை காரணமாக தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்று தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு முழுக்க நீலகிரி, ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது. இரவு முழுக்க மிக கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியுள்ளது.
தமிழகத்தில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை.. வெள்ளக்காடான மாவட்டங்கள்.. நீலகிரியில் அதிதீவிர மழை
அதேபோல் நீலகிரியில் தற்போது மழை பெய்து வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன்புதான் நீலகிரியில் வரலாறு காணாத மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. கனமழை காரணமாக தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.
கனமழையால் நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மற்றும் சேலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!