சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹேப்பி.. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர் மட்டம் கிடுகிடு.. பூண்டி ஏரி ஒரே நாளில் 7 அடி உயர்வு

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Heavy rain lashes in Chennai, Kanchipuram

    சென்னை: திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கொட்டி தீர்த்து வரும் கனமழையால், சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மிதமானது, முதல் கனமான மழை பெய்து வருகிறது.
    சென்னை மற்றும் திருவள்ளூரில் இரவு நேரங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் மற்றும் நேற்று இரவில் பெய்த மழையால், சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    Due to heavy rains Chennai lakes water risen

    இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களான முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று நிருபர்களிடம் பேசிய வானிலை ஆய்வாளர் பாலச்சந்திரன், மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என அறிவித்துள்ளார். எனவே, இன்னும் அதிகமாக ஏரிகளில் தண்ணீர் சேகரமாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    தென்மேற்கு பருவமழை காலத்தில் வழக்கத்தைவிட சென்னை 30 சதவீதம் கூடுதல் மழையை பெற்றுள்ளதாம். எனவே, நீராதாரங்கள் புத்துயிர் பெற்றுள்ளன.

    நிலாவில் கடும் குளிர் காலம் ஆரம்பம்.. உயிர்த்தெழ முடியாமல்... இன்றுடன் விடைபெறுகிறது விக்ரம் லேண்டர்நிலாவில் கடும் குளிர் காலம் ஆரம்பம்.. உயிர்த்தெழ முடியாமல்... இன்றுடன் விடைபெறுகிறது விக்ரம் லேண்டர்

    35 அடி கொண்ட பூண்டி ஏரியின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்துள்ளது இதற்கு ஒரு உதாரணம். பூண்டி ஏரிக்கு 2000 கனஅடி நீர் வரத்து வருகிறது. புழல் ஏரிக்கு 315 கன அடி நீர் வரத்து வருகிறது. சோழவரம் ஏரிக்கு 347 கனஅடியும் நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    English summary
    Due to heavy rains in Tiruvallur district for the past two days, the water level of major lakes, which is the source of Chennai's drinking water, has risen.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X