சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூல்ஸ் மாத்தினா இப்படியா? இ - பாஸ் விதியில் ஒரே ஒரு மாற்றம்.. தமிழகம் முழுக்க என்ன நடக்குது பாருங்க!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தற்போது இ பாஸ் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மாநிலம் முழுக்க மக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருக்கிறார்கள். பல டோல் கேட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இ - பாஸ் நடைமுறைக்கு எதிராக கடுமையாக எதிர்ப்புகள் எழுந்து வந்தது. சரியான காரணத்திற்கு இ பாஸ் விண்ணப்பித்தும் கூட கிடைப்பது இல்லை. என்ன சொன்னாலும் இ பாஸ் கிடைப்பது இல்லை.

இதை வைத்து நிறைய முறைகேடு நடக்கிறது. இதில் இடைதரகர்கள் உள்ளே வந்தது நிறைய மோசடிகளை செய்கிறார்கள். இதை அரசு உடனே தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இ பாஸ் ஈசியானதால் சென்னையில் இருந்து செல்பவர்களும் சென்னைக்கு திரும்ப வருபவர்களும் அதிகரிப்புஇ பாஸ் ஈசியானதால் சென்னையில் இருந்து செல்பவர்களும் சென்னைக்கு திரும்ப வருபவர்களும் அதிகரிப்பு

என்ன கோரிக்கை

என்ன கோரிக்கை

இதையடுத்து மக்களின் கோரிக்கையை தொடர்ந்து தமிழக அரசு இ பாஸ் விதிகளை மாற்றியது.யார் இ பாஸ் விண்ணப்பித்தாலும் கிடைக்கும் வகையில் அரசு விதிகளை மாற்றியது. அதே சமயம் தேவையில்லாமல் இ பாஸ் விண்ணப்பிக்க கூடாது. அவசிய காரணங்களுக்கு மட்டுமே இ பாஸ் கிடைக்கும் என்று அரசு தெரிவித்தது.

பலர் எடுத்தனர்

பலர் எடுத்தனர்

அரசு இப்படி இ- பாஸ் குறித்து அறிவித்த நிலையில் பலரும் வேகமாக இ பாஸ் எடுக்க தொடங்கினர். வெளிமாநிலத்தில் இருக்கும் தமிழர்கள். எல்லையில் வேறு ஊர்களில் சிக்கி இருக்கும் தமிழர்கள் என்று பலரும் இ பாஸ் விண்ணப்பம் செய்தனர். சென்னையில் இருந்து சிலர் வெளியே செல்ல இ பாஸ் விண்ணப்பித்தனர். சிலர் சென்னை நோக்கி வருவதற்கு இ பாஸ் விண்ணப்பித்தனர்.

கூட்டம்

கூட்டம்

இப்படி இ பாஸ் விண்ணப்பம் செய்த எல்லோரும் இன்று தங்கள் பயணத்தை தொடங்கினார்கள். மொத்தமாக கார் , பைக் என்று பல வாகனங்களில் இவர்கள் இ பாஸ் விண்ணப்பம் செய்துள்ளனர். இதன் காரணமாக தமிழகம் முழுக்க பலர் தற்போது சொந்த ஊர்களுக்கும், பணி இடங்களுக்கும் செல்ல தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடும் நெரிசல்

கடும் நெரிசல்

முக்கியமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருக்கும் சுங்க சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.மக்கள் கூட்டமாக ஒரே நேரத்தில் வெளியே வந்துள்ளனர். இதனால் சுங்க சாவடி கேட்களில் கட்டணம் வசூலிக்க தாமதம் ஆகியுள்ளது. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

என்ன மோசம்

என்ன மோசம்

அதிலும் மதுரை, திருச்சி, நெல்லை பகுதியில் உள்ள சுங்க சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இங்கிருந்து பலர் சென்னைக்கு செல்கிறார்கள்.சென்னையை சுற்றி இருக்கும் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் கூடி இருக்கிறது . தமிழகம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா பரவலில் இருந்து மீண்டுள்ளது.. இந்த நிலையில் இந்த போக்குவரத்து நெரிசல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Due to the change in E Pass rules, people moving in and out of their home town suddenly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X