சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சந்திக்கவே பயந்தா எப்படி.. யாரை சொல்கிறார் துரை.. அழகிரி மகன் டிவீட்டால் சலசலப்பு!

திமுகவை தாக்கி துரை தயாநிதி அழகிரி கருத்து பதிவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    யாரை சொல்கிறார் துரை தயாநிதி... சலசலப்பை ஏற்படுத்திய ட்வீட்!- வீடியோ

    சென்னை: திமுக வட்டாரம் முழுவதும் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி அழகிரி பதிவிட்டுள்ள ஒரு ட்வீட் பற்றிதான் பேச்சாக இருக்கிறது!!

    திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதில் இருந்தே தமிழகம் பரபரப்பாக இருக்கிறது. ஒரு பக்கம் வேட்பாளரை அறிவித்து கொண்டு மற்றொரு பக்கம் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்வது நடந்தது. அதன்படி தேர்தலும் இப்போதைக்கு ரத்தாகி உள்ளது.

    இப்படி ஒரு அறிவிப்பினை பெரும்பாலான கட்சிகள் அதிலும் பிரதான கட்சிகளே வரவேற்றுள்ளன. திருவாரூர் தொகுதி என்பதால் அழகிரியும் இங்கு சுயேச்சையாக போட்டியிடுவாரா என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.

    சலசலப்பு ட்வீட்

    சலசலப்பு ட்வீட்

    இந்நிலையில், அவரது மகன் துரை தயாநிதி தேர்தல் ரத்தானது சம்பந்தமாக ஒரு ட்வீட் போட்டுள்ளார். இதுதான் சலசலப்பைக் கிளப்பி விட்டுள்ளது. டிவீட்டில் அவர் தெரிவித்துள்ளதாவது:

    ஏன் அச்சம்?

    "நீங்கள் ஒரு விஷயத்தில் நம்பிக்கை வைத்திருந்தீர்கள் என்றால் துணிந்து போராடுங்கள்... நீங்கள் வெற்றி பெறுவீர்களா அல்லது தோல்வி பெறுவீர்களா என்பதெல்லாம் நீங்கள் போட்டியை எதிர்கொண்ட பிறகுதான் தெரியும். ஆனால், இங்கே சிலர் போட்டியை எதிர்கொள்ளவே துணிவில்லாமல் அச்சமடைகின்றனரே" எனப் பதிவிட்டிருக்கிறார். #Thiruvarur என்ற ஹேஷ்டேக் கீழ் இதனை பதிவிட்டு இருக்கிறார்.

    யாரை சொல்கிறார்?

    யாரை சொல்கிறார்?

    இடைத்தேர்தலே வேண்டாம் சொன்ன கட்சிகள் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என பட்டியல் நீள்கிறது. ஆனால் இடைத்தேர்தலை எதிர்கொள்ள அச்சமடைகிறார்கள் என்று துரை தயாநிதி யாரை குறிப்பிட்டு சொல்கிறார் என தெரியவில்லை.

    அழகிரி கோரிக்கை

    அழகிரி கோரிக்கை

    ஆனால் இந்த ட்வீட்டில் தங்களைதான் மறைமுகமாக சாடி இருப்பதாக திமுக தரப்பில் கடுப்பாகி இருக்கிறார்கள். காரணம் இந்தப் புகாரை கூறி வந்தது அதிமுக, தினகரன் மற்றும் பாஜகவினர் ஆவர். மேலும், கட்சியில் சேர்த்து கொள்ளும்படி எத்தனையோ முறை, எத்தனையோ விதங்களில் பகிரங்க கோரிக்கை வைத்தவர் அழகிரி.

    முக்கியத்துவம்

    முக்கியத்துவம்

    மேலும் இடைத்தேர்தல் ரத்து என்றதும் அதனை இன்று வரவேற்ற தலைவர்களில் திமுக தலைவர் ஸ்டாலினும் ஒருவர். அதனால் துரை தயாநிதியின் இந்த ட்வீட், பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திமுக தரப்பில் பார்க்கப்படுகிறது.

    English summary
    MK Azhagiri's Son Durai Dayanidhi Tweet about Thiruvarur By election and slams DMK Leader MK Stalin
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X