சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எவன் எவன்கூட இருக்கான்னு தெரியும்".. திமுகவின் ஒரு தலைவர் பேசும் பேச்சா இது? கிளம்பியது சர்ச்சை

துரைமுருகனின் பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: '' கூட்டணியில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படலாம்... அப்போதுதான் எவன் எவன்கூட இருக்கான்னு தெரியும்" என்று திமுகவின் சீனியர் தலைவர் துரைமுருகன் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலுார் மாவட்டம் காட்பாடி அருகே வண்டரந்தாங்கல் கிராமத்தில் நடந்த கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்ட துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, "திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எம்எல்ஏ தேர்தலில் சீட்கள் போதவில்லை என வெளியேறுவர்... அங்கே இருக்கும் சிலரும் திமுக கூட்டணிக்கு வருவர்... இது சகஜம் தான்... இதனால் கூட்டணியில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படலாம்... அப்போதுதான் எவன் எவன் கூட இருக்கான்னு தெரியும்" என்றார்.

"சித்தியுடன்".. கொந்தளித்த அக்கா மகன்கள்.. நட்ட நடுகாட்டில் நடந்த அக்கிரமம்.. அலறிய செங்கல்பட்டு

ஜெயலலிதா

ஜெயலலிதா

யார் யாருடன் கூட்டணி வைக்க போகிறார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், கூட்டணியில் உள்ளவர்களை மரியாதை குறைவாக பேசியதுதான், இப்போது சர்ச்சையாகி வருகிறதாம்.. பொதுவாகவே, துரைமுருகன் காமெடி சென்ஸ் உள்ளனர்.. எதையாவது ஜோக்கடித்து கொண்டே இருப்பார்.. குறிப்பாக சட்டசபையில் இவர் பேச்சுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு.. ஜெயலலிதா ஏதாவது சீரியஸாக பேசி கொண்டிருந்தால், துரைமுருகன் உள்ளே புகுந்து எதையாவது சொல்லிவிடுவார்.. இதனால் தன்னையும் அறியாமல் சிரித்துவிடுவார் ஜெயலலிதா.. கட்சிக்கும் அப்பாற்பட்டு தலைவர்கள் அன்று வெகுஇயல்பாக பழகுவார்கள்.

துடுக்குத்தனம்

துடுக்குத்தனம்

இருந்தாலும், சில சமயங்களில் துரைமுருகனின் துடுக்குத்தனமான பேச்சுக்கள் ஏதாவது வம்பை இழுத்து கொண்டு வந்துவிடும்.. யாராக இருந்தாலும், விமர்சித்துவிடுவார்.. அவர்களை போலவே மிமிக்ரி செய்தும் பேசிவிடுவார்.. இதுபோல, கூட்டணி கட்சி தலைவர்களாக இருந்தாலும் சரி, சொந்த கட்சிக்காரர்களாக இருந்தாலும் சரி, எதையாவது விமர்சித்து தர்மசங்கட சூழலை சில நேரங்களில் இவர் ஏற்படுத்தியதும் உண்டு.

விமர்சனம்

விமர்சனம்

எவன் எவன் எங்கிருக்கிறான் என்று தெரியும் என்ற துரைமுருகனின் வரிகள் கூட்டணி கட்சி தலைவர்களை அதிர வைத்துள்ளதாம். யாரை சொல்கிறார்? எதற்காக சொல்கிறார் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இப்படி அவன், இவன் என்று ஏன் பேச வேண்டும், என்று கேள்வி எழுப்புகிறார்கள் பொதுவெளியில்.
பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி ஒரு பக்கம் நடப்பதாக சொல்லப்பட்டது.. பாமக உள்ளே வந்தால் நிச்சயம் விசிக கூட்டணியில் தொடராது என்ற நிலை உள்ளது.

மதிமுக

மதிமுக

அதேபோல, உதயசூரியன் சின்னத்தில்தான் கடைசிவரை போட்டியிட வேண்டுமா என்ற குழப்பத்தில் மதிமுக உள்ளது. காங்கிரஸ் நிலைமை பரிதாபத்தில் உள்ளது.. கூட்டணியில் அவர்கள் சேர்த்து கொண்டால் போதும் என்ற நிலையில் உள்ளனர்.. இப்படி அதிருப்தி நிறைந்த கூட்டணியில், துரைமுருகன் சொன்னது யாராக இருக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சண்டை

சண்டை

எனினும் ஒரு மூத்த தலைவர் இப்படியெல்லாம் பேசக்கூடாது.. கூட்டணி கட்சி என்றால் கிள்ளுக்கீரையாக நடத்துவா? என்னதான் அதிமுகவுக்குள் குடுமிப்பிடி சண்டை வந்தாலும், திமுகவை விட அதிமுகதான் வலுவாக உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில் சின்ன கட்சி, பெரிய கட்சி என்றெல்லாம் பார்க்காமல் எல்லாரையும் அனுசரித்து போவதுதானே திமுகவுக்கு நல்லது?

ஆ.ராசா

ஆ.ராசா

ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் என்று ஆசை இருந்தால் மட்டும் போதுமா? அனுசரணை வேண்டாமா? எல்லாரையும் இப்படி தூக்கி எறிந்து பேசுவது ஒரு பாரம்பரிய கட்சிக்கோ, ஒரு மூத்த தலைவருக்கோ அழகல்ல.. இப்படித்தான் ஆ.ராசா 2 நாளைக்கு முன்பு, அந்த நாயை வெளியே தூங்கிட்டு போங்கப்பா என்று சொந்த கட்சி தொண்டரை பொதுமேடையிலேயே சொன்னார்.. சீனியர்கள் எல்லாம் இப்படி பேச ஆரம்பித்துவிட்டால், கட்சி என்னாவது? திமுக ரொம்ப ஆடக்கூடாது என்று ஆதங்க பேச்சு சோஷியல் மீடியாவில் எழுந்து வருகிறது.

English summary
Durai Murugans controversy speech
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X