சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நாளில்.. அட்மிட், டிஸ்சார்ஜ், அட்டென்டன்ஸ்.. பரபரப்பாக்கிய துரைமுருகன்!

பேரவை நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றார் திமுக பொருளாளர் துரைமுருகன்

Google Oneindia Tamil News

Recommended Video

    மருத்துவமனையில் இருந்த துரைமுருகன் வீடு திரும்பினார்- வீடியோ

    சென்னை: அட்மிட், டிஸ்சார்ஜ், அட்டன்ட்ன்ஸ்... என்று ஒரே நாளில் தமிழகத்தையே பரபரப்பாக்கி விட்டார் திமுக பொருளாளர் துரைமுருகன்.

    நேற்று சட்டப்பேரவையில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. துணை முதல்வர் கருணாநிதி பற்றி புகழஞ்சலி தெரிவிக்க, அதனை வழிமொழிந்து பேச துரைமுருகன் எழுந்தார்.

    Durai Murugan participate in TN Assembly

    ஆரம்பத்தில் கருணாநிதி குறித்து வழக்கம்போல துடிப்புடன்தான் பேச ஆரம்பித்தார். ஆனால் கருணாநிதி பற்றின பேச்சு நீண்டு கொண்டே செல்ல செல்ல.. துரைமுருகனின் பேச்சு உணர்ச்சி பூர்வமானது.. நா தழுதழுத்தது.. குரல் கம்மியது... தொடர்ந்து பேச்சு வராமல் தடுமாறியது... கடைசியில் வெடித்து குமுறி கதறி அழ ஆரம்பித்துவிட்டார்!!

    இந்த செய்தியேதான் நேற்று முழுவதும் மீடியாவில் பரவி கொண்டிருந்தது. இந்த சமயத்தில் நெஞ்சு வலி என்று தமிழக மக்களுக்கு காலையிலேயே பேரதிர்ச்சி கொடுத்தார் துரைமுருகன். உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் சொல்லவும், திமுக தொண்டர்கள் கலக்கமானார்.

    பிறகு அட்மிட் ஆன கொஞ்ச நேரத்திற்கெல்லாம் டிஸ்சார்ஜ் ஆனார் துரைமுருகன். இது தொண்டர்களுக்கு நிம்மதி தந்தது. ஆனால் துரைமுருகனோ டிஸ்சார்ஜ் ஆனதுடன் நேராக சட்டப்பேரவைக்கே வந்துவிட்டார். அதுவும் சரியாக பேரவை துவங்கும் 10 மணிக்கு ஷார்ப்பாக வந்தார் துரைமுருகன். அப்போது கட்சி பேதமின்றி பலரும் அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார்கள்.

    ஒரே நாளில் ஆஸ்பத்திரியில் அட்மிட்.. டிஸ்சார்ஜ் ஆகி.. பேரவையிலும் அட்டன்ட்ன்ஸ் போட்டுவிட்டார்... தட் ஈஸ் துரைமுருகன்!!!

    English summary
    DMK Treasurer Durai Murugan distcharge from the Apollo Hospital and participate in TN assembly today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X