சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவங்களே வைக்கிறாங்க.. அவங்களே எடுக்கிறாங்க.. பழி மட்டும் எங்க மேல.. ஐடி ரெய்டு குறித்து துரைமுருகன்

Google Oneindia Tamil News

சென்னை: பழி சுமர்த்த மத்திய -மாநில அரசுகள் பார்ப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும் அவரது மகன் கதிர்ஆனந்தின் பள்ளி மற்றும் கல்லூரியிலும் கடந்த வாரம் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ரூ. 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறுகையில் தேர்தலில் வெற்றி- தோல்வி சகஜம், எதிரும் புதிருமாக நிற்பவர்கள் கருத்து போர் புரிவதுண்டு. அதுதான் அரசியல்.

திமுக தருவதாக சொன்ன 2 ஏக்கர் நிலம் என்னாச்சு... முதல்வர் கேள்வி திமுக தருவதாக சொன்ன 2 ஏக்கர் நிலம் என்னாச்சு... முதல்வர் கேள்வி

வீடு, கல்லூரி

வீடு, கல்லூரி

எதிர்த்து நிற்பவரை தனிப்பட்ட முறையில் பழிவாங்க நினைப்பதும், வீண்பழி சுமர்த்தி அவமானத்திற்கு உள்ளாக்க முயற்சிப்பதும் இன்றைய அரசியலில் ஆளும்கட்சி தரப்பில் மேலோங்கி நிற்பது. இதற்கோர் எடுத்துக்காட்டு தான் வேட்பாளர் கதிர் ஆனந்தின் வீடு, கல்லூரியை வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய செயல்.

செய்திகள்

செய்திகள்

இத்தோடு நிற்கவில்லை மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகள் எங்களைச் சுற்றி ஒரு கண்காணிப்பு வளையத்தையே உருவாக்கி எங்களை கண்காணித்து வருகிறார்கள். இதுவும் போதாது என்று மேலும் சில செயல்களில் மத்திய - மாநில அரசுகள் ஈடுபட போவதாக எங்களுக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

வீண்பழி

வீண்பழி

எங்கள் வீடு, கல்லூரி சோதனைகளில் எதுவும் சட்டத்திற்கு புறம்பான பொருள்கள் எதுவும் கைப்பற்ற முடியவில்லை என்பதால், எங்களை எப்படியும் பழிவாங்கி தீர்வதே என்ற முடிவோடு தேர்தல் நெருக்கத்தில் எங்களுக்கு சொந்தமான இடங்களில், அவர்களாகவே ஏதாவது ஒரு பொருளை வைத்துவிட்டு இவர்கள் புதியதாக கண்டு பிடித்து விட்டதாக அவர்களைக் காட்டி எங்கள் மீது வீண்பழி சுமர்த்த ஒரு முயற்சி நடப்பதாக அறிகிறோம்.

அறிக்கை

அறிக்கை

இதன் மூலம் கதிர் ஆனந்தின் வெற்றியை சீர் குலைத்து விடலாம் என்று இந்த அரசுகள் பெருமுயற்சி எடுப்பதாக தகவல். இத்தகைய போக்கு ஜனநாயகத்திற்கு புறம்பானது மட்டுமல்ல, கடைந்து எடுத்த பாசிச முறையாகும் என துரைமுருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK Treasurer Duraimurugan releases statement about Income Tax raids at his house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X