சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏதாவது பேசி.. வாயை விட்டு சர்ச்சையில் சிக்கி.. இதெல்லாம் துரைமுருகனுக்கு தேவையா?

25 வருஷம் கழித்து ஸ்டாலின் ஜனாதிபதி ஆவார் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலின் நாட்டின் ஜனாதிபதியாக வருவார் : அடித்து சொல்லும் துரைமுருகன்!- வீடியோ

    சென்னை: இதெல்லாம் துரைமுருகனுக்கு தேவையா? எதையாவது பேசணுமே என்று போற போக்கில் அடிச்சி விட்டுட்டு போவதா? என்றுதான் நெட்டிசன்கள் கோடி கேள்விகளை முன் வைத்து வருகிறார்கள்.

    4 நாளைக்கு முன்னாடிதான், துரைமுருகன் போன்ற விவரம் தெரிந்தவர்களிடம் ஸ்டாலின் நிறைய விஷயங்களை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்று பாமக தரப்பில் ஒரு அறிக்கை வந்தது. அதாவது துரைமுருகனுக்கு தெரிந்த விஷயங்கள், ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்று மறைமுகமாக சொல்லப்பட்டு இருந்தது.

    உண்மையிலேயே துரைமுருகன் மிகவும் திறமைசாலி. எவ்வளவு காமெடியா பேசினாலும் துரைமுருகனிடம் உள்ள திறமையே தனி. அரசியல், வரலாறு உள்ளிட்ட நிலவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார். அத்தனையும் அத்துப்படி அவருக்கு!

     மு.க.ஸ்டாலினை கே.சி.ஆர். சந்திக்கிறார் என்பது வதந்தியாம்... கிளப்பிவிட்டது பாஜகவா? மு.க.ஸ்டாலினை கே.சி.ஆர். சந்திக்கிறார் என்பது வதந்தியாம்... கிளப்பிவிட்டது பாஜகவா?

    துரைமுருகன் பேச்சு

    துரைமுருகன் பேச்சு

    ஆனால் அவருக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை, அதிமுகவின் சில அமைச்சர்களை போல திடீரென சர்ச்சையில் இறங்கிவிட்டார். நேற்று கூட்டம் ஒன்றில் துரைமுருகன் சொன்னதாவது:

    ஊழல் பட்டியல்

    ஊழல் பட்டியல்

    "காரண காரியங்களை அடுக்கி வைத்து பேசுவதில், தைரியமாக கருத்துகளை சொல்வதில், பேரவையில் அமைச்சர்களை தோலுரித்து காட்டுவதில், நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளின் ஊழலை பட்டியலை போட்டு விளக்குவதில் ஸ்டாலினுக்கு நிகர் ஸ்டாலின்தான். இன்னும் 25 வருடங்களில் இந்த நாட்டின் குடியரசு தலைவராகக்கூட வரும் தகுதியும் வாய்ப்பும் ஸ்டாலினுக்கு உள்ளது" என்றார்.

    ஜனாதிபதி பதவி

    ஜனாதிபதி பதவி

    துரைமுருகனுக்கு தெரியாதது ஒன்னுமில்லை.. இப்போ ஸ்டாலினுக்கு வயசு 66. அடுத்த 25 வருஷம் கழிச்சு ஸ்டாலினுக்கு எப்படியும் 91 வயசு ஆகும். 91 வயசில் ஜனாதிபதியாக ஸ்டாலின் மாற வாய்ப்பு உள்ளதா? ஜனாதிபதி பதவிக்கு உச்சவரம்பு இல்லைதான். அதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் வழி உள்ளது என்றாலும், ஸ்டாலின் ஜனாதிபதி ஆகும் சாத்தியக்கூறுகள் உள்ளதா என தெரியவில்லை.

    வஞ்ச புகழ்ச்சியா?

    வஞ்ச புகழ்ச்சியா?

    ஒருவேளை ஆர்வ கோளாறு, ஸ்டாலின் மீது பாசம் காரணமாகவே இதை சொல்லிவிட்டாலும், அது என்ன 25 வருஷங்கள் கணக்கு என்றும் புரியவில்லை. ஒருவேளை பாராட்டற மாதிரி பாராட்டும் வஞ்ச புகழ்ச்சியா இது? எப்படியாக இருந்தாலும் சரி.. துரைமுருகனுக்கு இதெல்லாம் தேவையா என்றுதான் கேட்க தோன்றுகிறது!

    English summary
    DMK Durai murugan says MK Stalin is eligible to become president of the country
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X