சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்பா பல்லாண்டுகளில் பெற்றதை.. வெறும் 100 நாட்களில் பெற்ற மகன்.. ஸ்டாலினுக்கு துரைமுருகன் புகழாரம்

Google Oneindia Tamil News

சென்னை: கருணாநிதி பல்லாண்டுகளில் பெற்ற புகழை 100 நாட்களில் பெற்றவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17, அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய மூன்று நிகழ்வுகளை இணைத்து திமுகவின் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் விருதுகளும் வழங்கப்பட்டன.

பேசாமல் இருக்கிற ஆளுக்குத்தான் அந்த இடம் லாயக்கு.. ஆனால் நீங்களோ.. அப்பாவுவை கலாய்த்த துரைமுருகன் பேசாமல் இருக்கிற ஆளுக்குத்தான் அந்த இடம் லாயக்கு.. ஆனால் நீங்களோ.. அப்பாவுவை கலாய்த்த துரைமுருகன்

பெரியார் விருது

பெரியார் விருது

அதில் பெரியார் விருதை மிசா மதிவாணனுக்கும் பேரறிஞர் அண்ணா விருதை எல் கே மூக்கையாவிற்கும், கலைஞர் விருதை பா.மு. முபாரக்கிற்கு முதல்வர் வழங்கினார். விழாவில் பேசிய திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், அண்ணாவிடம் கருணாநிதி கேட்டுப் பெற்ற இதயத்தை அவரிடம் கேட்காமலேயே ஸ்டாலின் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

எட்டு திக்கு

எட்டு திக்கு

இந்தியாவில் எட்டு திக்கிலும் நமது முதல்வர் பற்றியே மக்கள் பேசுகிறார்கள். கருணாநிதி முதல்வரான பிறகு பல்லாண்டுகளில் பெற்ற புகழை 100 நாட்களில் பெற்றவர் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும் விருது பெற்றவர்கள் போன்ற பலர் இருப்பதால் இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்றார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கட்சிக்காக உழைத்தவர்களை பெருமைப்படுத்துவதற்காக அண்ணா பிறந்தநாளன்று முப்பெரும் விழா நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் 6ஆவது முறையாக திமுக ஆட்சி அமைந்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி என்பது எந்த பலனையும் எதிர்பார்க்காமல் உழைத்த தொண்டர்களால் விளைந்தது.

தொண்டர்கள்

தொண்டர்கள்

திமுக ஆட்சி தொடர்வதற்கான அடித்தளத்தை தொண்டர்கள்தான் அமைத்திட வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய சட்டசபையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. திமுக ஆட்சி சொன்னதை செய்யும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறோம். திமுகவுக்காக உழைத்தவர்கள் வாழக் கூடிய காலத்திலேயே பாராட்டும் வகையில் விருது வழங்கப்படுகிறது.

முரசொலி தாள் அல்ல வாள்

முரசொலி தாள் அல்ல வாள்

முரசொலி தாளாக இல்லாமல் வாளாக நம் கையில் இருக்கிறது. முரசொலியில் நானும் சம்பளத்துக்காக வேலை செய்துள்ளேன். இளைஞர்களுக்கு இது எதிர்கால வழிகாட்டி. பத்திரிகைத் துறை நண்பர்களுக்கு முரசொலி ஒரு பாட புத்தகம். பெரியார் என்றால் சமூக நீதி. தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றி வருகிறேன் என்றார் ஸ்டாலின்.

English summary
Minister Duraimurugan praises MK Stalin for his 100 days government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X