சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வருமான வரி சோதனைகள்.. ஹைகோர்ட் கதவை தட்டும் துரைமுருகன், கதிர் ஆனந்த்

Google Oneindia Tamil News

Recommended Video

    தொடரும் ரெய்டுகள்... நீதிமன்றத்தை நாடும் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த்- வீடியோ

    சென்னை: துரைமுருகன் வீடுகளில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை தொடர்பாக அவரும், அவர் மகனும், வேலூர் வேட்பாளருமான கதிர் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் கடந்த மாதம் 29 மற்றும் 30ம் தேதிகளில் வருமான வரி சோதனைகள் நடைபெற்றன. இந்த நிலையில் இன்று மீண்டும் வருமான வரி சோதனைகள் நடைபெறுகிறது.

    Duraimurugan seeks High Court support against Income Tax raids

    மீண்டும் அதிரடி சோதனை.. துரைமுருகன் மகனின் கல்லூரியில் ஐடி ரெய்டு.. நீடிக்கும் பதற்றம்!மீண்டும் அதிரடி சோதனை.. துரைமுருகன் மகனின் கல்லூரியில் ஐடி ரெய்டு.. நீடிக்கும் பதற்றம்!

    ஏற்கனவே துரைமுருகன் அளித்த பேட்டியில், கதிர் ஆனந்த் வெற்றி பெறுவார் என உறுதியானதால் அரசியல் நோக்கத்தோடு வருமான வரித்துறை ரெய்டுகள் நடக்கின்றன என்று குற்றம்சாட்டினார்.

    இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் ஆகியோர் ஒரு முறையீட்டை தாக்கல் செய்துள்ளனர். அதை மனுவாக நாளை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    தேர்தல் நேரத்தில் நடைபெறும் வருமான வரி சோதனைகளால் பிரச்சாரத்திற்கு செல்ல முடிவதில்லை என்றும், எனவே தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கதிர் ஆனந்த் கோரிக்கைவிடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    English summary
    Duraimurugan files plea against Income Tax raids in his house, at Chennai High court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X