• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சி.எஸ்.கே.வுக்கு வெற்றியை பரிசளித்த 'ஸ்லோ பால் ஸ்பெஷலிஸ்ட்' பிராவோ.. சகோதரர் என தோனி புகழாரம்!

Google Oneindia Tamil News

சென்னை: பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணியை வெற்றி பெற வைத்த சென்னை வீரர் பிராவோவை தனது சகோதரர் என்று தோனி அழைத்தார். நடப்பு ஆண்டு ஐ.பி.எல் சீசனின் இரண்டாம் கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நேற்று ஷார்ஜாவில் அரங்கேறிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஜ் பெங்களூரு அணிகள் மோதின. குரு தல தோனியும், சிஷ்யனான கிங் கோலியும் நேருக்கு நேர் மோதும் ஆட்டம் என்பதால் ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே அனல் பறந்தது. ஆரம்பத்தில் இருந்தே கோலி, படிக்கல் சிஎஸ்கே பவுலர்களை வாட்டி வதைக்க பெங்களூரு ஸ்கோர் ஜெட் வேகத்தில் வேகமாக சென்றது.

4 முறையா? இவர் செட்டாக மாட்டார்.. முக்கிய வீரரை தூக்கும் தோனி- சிஎஸ்கேவில் நடக்க போகும் மாற்றம் 4 முறையா? இவர் செட்டாக மாட்டார்.. முக்கிய வீரரை தூக்கும் தோனி- சிஎஸ்கேவில் நடக்க போகும் மாற்றம்

டிரேட் மார்க் ஷாட்

டிரேட் மார்க் ஷாட்

கோலி தனது வழக்கமான டிரேட் மார்க் ஷாட்கள் மூலம் பவுண்டரிகளாக திரட்ட, தேவ்தத் படிக்கல் அதிரடியான சிக்ஸர்களை விளாசினார். 13.2 ஓவர்களில் 'ஸ்லோ பால் ஸ்பெஷலிஸ்ட்' பிராவோ கோலிக்கு செக் வைத்து 53 ரன்களில் வெளியேற்ற, ஆட்டம் அப்படியே சென்னை பக்கம் திரும்பியது. தொடர்ந்து தேவ்தத் படிக்கல், அதிரடி சூரர்கள் டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல் கீ கொடுத்த பொம்மை போல் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேற 200 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய பெங்களுரு 156 ரன்னில் அடங்கியது.

ஸ்லோ பால் ஸ்பெஷலிஸ்ட்

ஸ்லோ பால் ஸ்பெஷலிஸ்ட்

பின்னர் ஆடிய சென்னைக்கு கெய்க்வாட், டூ பிளிசிஸ் அதிரடியான தொடக்கம் கொடுக்க 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு எந்தவித சிரமமும் இன்றி வெற்றி இலக்கை எட்டியது தோனியின் படை. சென்னையின் இந்த வெற்றிக்கு முழுக்க, முழுக்க காரணம் 'ஸ்லோ பால் ஸ்பெஷலிஸ்ட்' பிராவோதான். தொடக்கத்தில் கோலி, படிக்கல் ஜோடி 200 ரன்களுக்கு அடிக்கல் நாட்டியபோது கோலியை பிரித்து ஆட்டத்தை சென்னை பக்கம் திருப்பியது இவர்தான்.

3 விக்கெட்டுகள்

3 விக்கெட்டுகள்

மேலும் அபாயகரமான பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல், டெயிலெண்டர் ஹர்சல் படேல் ஆகியோரை வெளியேற்றியதுடன் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார் பிரோவா. சென்னை அணியின் மற்ற பவுலர்கள் ஓவருக்கு சராசரியாக 7.5 ரன்களுக்கு மேல் கொடுத்திருக்க, பிராவோ சராசரியாக 6 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். நேற்று மேட்ச் நடந்த ஷார்ஜா மைதானம் மிகவும் சிறியது.

தோனி புகழாரம்

தோனி புகழாரம்

பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில் கொஞ்சம் அசால்டாக பவுலிங் செய்தாலும், பந்து கூரையை நோக்கி சென்று விடும். ஆனாலும் பிட்சின் தன்மையை அறிந்து ஏகப்பட்ட ஸ்லோ பால்களை வீசி பெங்களுரு பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினார் பிராவோ. அணிக்கு வெற்றி தேடி கொடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார் இந்த ஸ்லோ பால் ஸ்பெஷலிஸ்ட். ஆட்டம் முடிந்ததும் பரிசளிப்பு விழாவில் பிராவோவை புகழ்ந்து தள்ளினார் கேப்டன் தோனி.

  RCB Missed 3 Winning Chances against CSK | IPL 2021 Match 35 | OneIndia Tamil
  சிறப்பாக செயல்பட்டார்

  சிறப்பாக செயல்பட்டார்

  ''முதலில் பிராவோக்கு அதிக ஓவர்கள் கொடுக்காமல், ஸ்பின்னர் மொயீன் அலிக்குதான் பவுலிங் கொடுக்க முடிவு செய்திருந்தேன். அதன்பிறகு முடிவை மாற்றி பிராவோவிடம் கொடுத்தேன். அவர் மிகச்சிறப்பாக பந்து வீசி ரன்களை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார். பிராவோ அதிகம் ஸ்லோ பால் போடுபவர் என்பதால் அவரது பந்தை தற்போது கணித்து விடுகின்றனர். இதனால் யார்க்கர், புல்லர் லெந்த் என்று மாற்றி, மாற்றி போடும்படி கூறினேன். அவரும் அவ்வாறே செய்தார்'' என்று கூறினார் தோனி.

  எனது சகோதரர்

  எனது சகோதரர்

  கடந்த போட்டியில் பிராவோவுடன் ஏற்பட்ட சிறு மோதல் குறித்து தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த தோனி, '' பிராவோ எனது சகோதரர் போன்றவர். அவரை எப்போதும் சகோதரர் என்றுதான் அழைப்பேன். நாங்கள் அவ்வப்போது இப்படி விளையாட்டாக சண்டை போட்டுக் கொள்வோம்'' என்று கூறினார். மும்பைக்கு எதிரான கடைசி போட்டியில் சவுரப் திவாரி அடித்த பந்தை பிடிப்பதில் தோனி-பிராவோ இடையே குழப்பம் ஏற்பட்டது. இறுதியில் தோனி கேட்ச் டிராப் செய்தார். அப்போது தோனி பிராவோ மீது சிறு கோபத்தை வெளிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Dhoni called Bravo his brother, who helped Chennai win the match against Bangalore. The second phase of the current IPL season is in full swing in the United Arab Emirates
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X