சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சார் நில்லுங்க" .. வழிமறித்து பொள்ளாச்சி குறித்து கேள்வி கேட்ட மாணவி.. திகைத்து சபாஷ் போட்ட ஓபிஎஸ்

பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஓபிஎஸ்-சிடம் மாணவி ஒருவர் வழிமறித்து கேள்வி கேட்டார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓ.பன்னீர்செல்வத்தை வழிமறித்து பொள்ளாச்சி குறித்து கேள்வி கேட்ட மாணவி- வீடியோ

    சென்னை: துணை முதல்வரையே வழிமறித்து கேள்வி கேட்டு துளைத்தெடுத்துள்ளார் ஒரு மாணவி. ஆனால் அதற்கு சளைக்காமல் நின்று பதிலளித்ததுடன், கேள்வி கேட்ட மாணவியையே பாராட்டி உள்ளார் துணை முதல்வர்!

    நேற்று தன் மகனுக்காக மதுரை அலங்காநல்லூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தை தொடங்கினார். சாமி கும்பிட்டு, மேள தாளத்துடன் இந்த பிரச்சாரம் ஆரம்பமானது.

    வரும் வழியெல்லாம் ஓட்டு கேட்டபடியே ஓபிஎஸ் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு பஸ் ஸ்டாண்டில் நிறைய காலேஜ் பெண்கள் பஸ்ஸுக்காக காத்திருந்தனர்.

    வெள்ளந்தி மனிதர்.. மனதில் பட்டதை சொல்பவர்.. தேமுதிகவை செமையாக கலாய்த்தவர்.. அவர்தான் கனகராஜ்வெள்ளந்தி மனிதர்.. மனதில் பட்டதை சொல்பவர்.. தேமுதிகவை செமையாக கலாய்த்தவர்.. அவர்தான் கனகராஜ்

    வழிமறித்த பெண்

    வழிமறித்த பெண்

    அதில் 2 பெண்கள் ஓபிஎஸ்ஸிடம், "சார் நீங்க துணை முதல்வர்தானே.. கொஞ்சம் நில்லுங்க'' என்றனர். உடனே ஓபிஎஸ் சிரித்து கொண்டே அந்த பெண்கள் அருகில் வந்து நின்றார். ''என்னம்மா நல்லா படிக்கிறீங்களா? பரீட்சைக்கு போய்ட்டு இருக்கீங்களா?" என்றார்.

    7 வருஷமாமே

    7 வருஷமாமே

    "ஆமா சார் என்னை போன்ற மகள் இல்லையா? உங்களுக்கு?'' என்று கேட்டனர். அதற்கு ஓபிஎஸ், "ஏம்மா?" என்றார். "பொள்ளாச்சியில் என்னை போல மாணவிகளை சீரழிச்சிருக்கிறாங்க. 7வருசமா நடந்ததாக சொல்றாங்க.

    பதில் சொல்லுங்க

    பதில் சொல்லுங்க

    ஆனா ஒரு வருஷத்துக்கு முன்னாடி புகார் கொடுத்தும் அதை நீங்க கண்டுகொள்ளலையாமே.. ஏன்? உங்க கட்சிகாரங்கதான் குற்றவாளின்னு சொல்றாங்க.. கட்சிதான் உங்களுக்கு முக்கியமா? மக்கள் இல்லையா? பதில் சொல்லிட்டு போங்க சார்" என்றார்.

    உன்னை பாராட்டறேன்

    உன்னை பாராட்டறேன்

    இதை கொஞ்சமும் எதிர்பாராத ஓபிஎஸ், "வணக்கம்மா.. நீ சொல்றது சரிதான். அதுக்குதான் நடவடிக்கை எடுத்து வருகிறோம். குற்றவாளிகள் யாருமே தப்ப முடியாது. ஆனா தைரியமாக வந்து கேள்வி கேட்கிற பாரு இதுதான் ஜனநாயகம்... உன் தைரியத்தை நான் பாராட்டுகிறேன்" என்று சொல்லிகொண்டே அங்கிருந்து நகர்ந்தார்.

    English summary
    College Student asked the question to DY CM O Panneerselvam about Pollachi Gang Rape issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X