சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது தமிழகத்தில் இ-பாஸ் தேவையில்லையா? யார் சொன்னது? பொத்தாம் பொதுவாக வைரலாகும் தகவலால் குழப்பம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 65 நாட்களுக்கு பிறகு இன்று முதல் மக்கள் போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் பொத்தாம் பொதுவாக இ பாஸ் தேவையில்லை என்ற செய்தி வைரலாகி வருகிறது. ஆனால் அது தவறு இ பாஸ் சிலவற்றிற்கு கட்டாயம் தேவை.

இ பாஸ் எனப்படும் சிறப்பு அனுமதி தேவையில்லைதான். ஆனால் எதற்கு தேவையில்லை என்பதை பார்ப்போம். தமிழகத்தை 8 மண்டலங்களாக பிரித்துள்ளார். ஒரே மண்டலங்களுக்குள் பயணிக்க இ பாஸ் தேவையில்லை.

E passes are mantodory for some cases in Tamilnadu

ஒரு மண்டலத்திலிருந்து இன்னொரு மண்டலத்திற்கு சென்றாலும் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு சென்றாலும் இ பாஸ் கட்டாயம் பெற வேண்டும். அந்த 8 மண்டலங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

  • மண்டலம் 1- கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்- இந்த மண்டலங்களுக்கிடையே பயணம் செய்ய இ பாஸ் தேவையில்லை.
  • மண்டலம் 2- தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி- இந்த மண்டலங்களுக்கிடையே பயணம் செய்ய இ பாஸ் தேவையில்லை.
  • மண்டலம் 3- விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி- இந்த மண்டலங்களுக்கிடையே பயணம் செய்ய இ பாஸ் தேவையில்லை.
  • மண்டலம் 4- நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை- இந்த மண்டலங்களுக்கிடையே பயணம் செய்ய இ பாஸ் தேவையில்லை.
  • மண்டலம் 5- திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்- இந்த மண்டலங்களுக்கிடையே பயணம் செய்ய இ பாஸ் தேவையில்லை.
  • மண்டலம் 6- தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி- இந்த மண்டலங்களுக்கிடையே பயணம் செய்ய இ பாஸ் தேவையில்லை.
  • மண்டலம் 7- காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு- போக்குவரத்து இல்லை
  • மண்டலம் 8- சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதி - போக்குவரத்து இல்லை.

தாங்க முடியவில்லை.. ஜார்ஜ் தாங்க முடியவில்லை.. ஜார்ஜ் "கொலையால்" பொங்கி எழுந்த ஒபாமா.. டிரம்ப் எதிர்பார்க்காத திருப்பம்!

உதாரணமாக மண்டலம் 5-ன் கீழ் உள்ள திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கைக்கு செல்ல இ பாஸ் தேவையில்லை. இதே திண்டுக்கல்லில் இருந்து மண்டலம் 6-இன் கீழ் வரும் தூத்துக்குடிக்கு செல்ல இ பாஸ் தேவை. அது போல் தமிழகத்திலிருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்ல கட்டாயம் இ பாஸ் தேவை.

English summary
Who said E Passes are not mandatory? Here is the info for which we have to get the pass.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X