சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனிமேல் முதுகில் மூட்டையுடன் வரமாட்டார்கள்.. டெலிவரி முறையில் அசத்தல் மாற்றம்.. அமேசான் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், இந்தியாவில் தனது டெலிவரி முறையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வர இருக்கிறது.

அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெப் பெசோஸ் சமீபத்தில் டெல்லி வந்திருந்தார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, வணிகரீதியாக, பல்வேறு முக்கியமான விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

ஒரு பில்லியன் டாலர் மதிப்புக்கு முதலீடு செய்து டிஜிட்டலைஸ் செய்வது, 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றிருந்தன.

 இப்படியே போனா.. மொத்த இந்துக்களும் பாகிஸ்தானை விட்டு வெளியேறுவோம்.. அரசுக்கு கடும் எச்சரிக்கை இப்படியே போனா.. மொத்த இந்துக்களும் பாகிஸ்தானை விட்டு வெளியேறுவோம்.. அரசுக்கு கடும் எச்சரிக்கை

டெலிவரி

இது ஒரு பக்கம் என்றால், வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யக்கூடிய நடைமுறையில் அமேசான் மாற்றத்தைக் கொண்டு வர இருக்கிறது. தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் ஜெப். அதில் அந்த டெலிவரி வாகனம் எப்படி இருக்கும் என்று காண்பிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ

ஆட்டோ

நம்ம ஊரில் வழக்கமாக இயங்கக் கூடிய மூன்று சக்கர ஆட்டோ ரிக்ஷா பாணியில்தான் இவை உள்ளன. ஆனால் பின்பகுதியில் கன்டைனர் உள்ளது. முழுக்க காற்று புகாத வண்ணம் அடைக்கப்பட்ட இந்த கன்டெய்னர் ஆட்டோரிக்ஷா, மின்சாரத்தில் இயங்கக்கூடியது.

டூவீலர்

டூவீலர்

அமேசானின் விற்பனைப் பிரதிநிதிகள் தற்போது இரு சக்கர வாகனங்களில், முதுகில் பெரிய மூட்டையை சுமந்தபடி வந்து, டெலிவரி செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மற்றொரு போட்டி நிறுவனமான பிக் பாஸ்கெட் போன்றவை, டெம்போ மூலமாக டெலிவரி செய்து வருகின்றன.

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல்

இந்த நிலையில்தான் ஆட்டோ ரிக்ஷாவை கையில் எடுத்துள்ளது அமேசான். 2040 ஆம் ஆண்டுக்குள் 100 சதவீதம் மரபுசாரா எரிபொருளைக் கொண்டு வாகனங்களை இயக்க வேண்டும் என்ற அமேசான் லட்சியத்திற்கு மின்சார ஆட்டோ உறுதுணையாக இருக்கும். தங்களது விற்பனை பிரதிநிதிகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் தடுப்பதற்கு பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை தவிர்ப்பதற்கு அமேசான் முடிவு செய்து உள்ளது.

English summary
We’re rolling out our new fleet of electric delivery rickshaws. Fully electric. Zero carbon, says Amazon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X