சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னா ஆட்டம் ஆடினார் தெரியுமா மு.க.ஸ்டாலின்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொளேர் பிரச்சாரம்

பிரச்சாரங்களில் முக ஸ்டாலினை தமிழக முதல்வர் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: "ஸ்டாலின் என்னா ஆட்டம் ஆடினார் தெரியுமா.. என் டேபிள் மேல ஏறி ஒரே ஆட்டம், பாட்டம்தான்.. பெண் அமைச்சர் பெஞ்ச் மேல ஏறி டான்ஸ் ஆடினார்.. இவரா நாட்டை காப்பாத்த போகிறார்" என்று இப்போதெல்லாம் முதல்வர் பழனிசாமி திமுக தலைவர் ஸ்டாலினை வெளுத்து கட்ட ஆரம்பித்துவிட்டார்.

பிரச்சாரத்துக்கு முன்பு வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக தலைவர் முக ஸ்டாலினை அவ்வளவாக விமர்சித்தது இல்லை. அதற்கான காரணமோ, அவசியமோ பெரும்பாலும் இருந்ததில்லை. ஆனால் இப்போது தேர்தல் காலம் என்பதால், பிரச்சாரத்திற்கான அவசியம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

அதிலும் முதல்வர் எடப்பாடிக்கு இது முக்கியமான தேர்தல் என்பதால், வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். வழக்கமாக ஒவ்வொரு கட்சியும், எதிர்க்கட்சிகளை தாக்கியும், விமர்சித்தும் பேசுவதும் வாடிக்கைதான் என்றாலும், முதல்வரின் பிரச்சார பேச்சின் காட்டம் சற்று தூக்கலாக இருக்கிறது. அதற்கு ஒரு சில சாம்பிள்தான் இவை:

 பச்சோந்திகள்

பச்சோந்திகள்

சேலத்தில் கடந்த 20-ம் தேதி முதல்வர் பேசியபோது, "கருணாநிதி வாய் பேசாத நிலையில்கூட ஸ்டாலினை தலைவராக்கவில்லை. ஏன் என்றால், தந்தைக்கே மகன் மீது நம்பிக்கை இல்லை. பிறகு ஸ்டாலினை மக்கள் எவ்வாறு நம்புவார்கள்? பச்சோந்திகள் கூட நேரம் பார்த்துதான் நிறம் மாறும். ஆனால், திமுக நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி மாறுகிறது" என்றார்.

விஐபி தொகுதி தேனி.. முழுமை ரவுண்ட் அப்

 எளிமையானவர்

எளிமையானவர்

நேற்று முன்தினம் அரக்கோணத்தில் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்திக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது பேசியபோது, "இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மூர்த்தி எளிமையானவர். ரொம்ப சாதாரணமானவர். சாதாரண மக்கள்கூட அவரை அணுகி பேசலாம்.

தேர்தல் பிரச்சாரத்தில் குதிக்கிறார் நடிகை குஷ்பு... வருகிற 1-ஆம் தேதிக்கு பிறகு சுற்றுப்பயணம்தேர்தல் பிரச்சாரத்தில் குதிக்கிறார் நடிகை குஷ்பு... வருகிற 1-ஆம் தேதிக்கு பிறகு சுற்றுப்பயணம்

 சாதாரண மக்கள்

சாதாரண மக்கள்

ஆனால், திமுகவில் இவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் சாராய ஆலை அதிபர். பல ஆலைகளுக்கும் கம்பெனிகளுக்கும் சொந்தக்காரர், ரொம்பவும் பணக்காரர். இதுபோன்று பணக்காரர்களுக்குதான் திமுக தேர்தலில் வாய்ப்பு தந்திருக்கிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் போட்டியிடுபவர்கள் எல்லாருமே சாதாரண சாமானிய மக்கள்தான்.

 ரொம்ப ராசியானவர்

ரொம்ப ராசியானவர்

இந்த திமுக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. சமயம் கிடைக்கும்போதெல்லாம் கூட்டணி சேர்ந்துக்குவாங்க. உதாரணத்துக்கு வைகோ. அவர் பேசுறதெல்லாம் ஒரு பேச்சா? எந்த அளவுக்கு அவர் பேசினார் தெரியுமா? எங்கிருந்து பிரிந்து போனாரோ, திரும்பவும் அங்கேயே கூட்டணி சேர்ந்திருக்கிறார். அவர் அங்க சேர்ந்தது நமக்கு நல்லதுதான். ஏன்னா.. அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய ராசியாக இருக்கும். கூட்டணிக்கும் அவர் ரொம்ப ராசியானவர்.

 ஆட்டம், பாட்டம்தான்

ஆட்டம், பாட்டம்தான்

ஸ்டாலின் இந்த ஆட்சியையே அன்னைக்கு கலைக்க பார்த்தார். சட்டப்பேரவையில் நீங்களே பாத்திருப்பீங்களே? என்னா ஆட்டம் ஆடினார் தெரியுமா? என்னுடைய பெஞ்ச் மேல ஏறி ஆட்டம், பாட்டம்தான்! பெண் அமைச்சர் பெஞ்ச்சில் ஏறி நின்று டான்ஸ் ஆடினார். இவங்களா நாட்டை காப்பாத்த போறாங்க?" என்றார் ஆவேசமாக!

 திமுக பதிலடி?

திமுக பதிலடி?

ஏற்கனவே பல்வேறு காரணங்களால் அதிருப்தி அடைந்து அதிமுக மீது உச்சக்கட்ட கொதிப்பில் இருக்கும் திமுக, இனி இதற்கெல்லாம் என்ன சொல்ல போகிறது? எப்படி பதிலடி தர போகிறது என்பதை பார்ப்போம்!

English summary
TN Chief Minister Edapadi Palanisamy has been critical of the DMK & MK Stalin during his campaigns
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X