சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லா பந்தும் "சிக்ஸர்"தான்.. திகைப்பில் எதிர்ப்புகள்.. சரமாரி வியூகங்களை லாவகமாக சமாளித்து.. செக்!

மக்கள் பணியில் திமுக தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடியார் அடிக்கும் ஒவ்வொரு பந்துகளையும் சிக்ஸர்களாக மாற்றி கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.. அதாவது, அரசியல் களத்தில் பெருத்த நிதானத்துடன் காய்களை நகர்த்தி தேர்தலுக்கு தயாராகி வருகிறார் திமுக தலைவர் என்ற பேச்சு அடிபட ஆரம்பித்துள்ளது!

தமிழகத்தில் தொற்றை கட்டுப்படுத்த அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாகி உள்ளது.

முன்பை விட இப்போது டெஸ்ட்கள் அதிகம் செய்யப்படுகின்றன.. டிஸ்சார்ஜ்களும் அதிகமாக நடக்கின்றன.. இருந்தாலும் வைரஸ் எண்ணிக்கை கட்டுக்குள் வரவில்லை. இது ஆளும் தரப்புக்கு பெரிய மைனசாக உள்ளது.

தகுதி நீக்கம் கோரி திமுக தொடர்ந்த வழக்கு: ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்தகுதி நீக்கம் கோரி திமுக தொடர்ந்த வழக்கு: ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

லாக்டவுன்

லாக்டவுன்

இந்த தொற்று சமயத்தில் அரசு எடுத்த பல்வேறு முயற்சிகள் சாதகமாக இருந்தாலும், பாதகங்களே அதிகமாகி வருகின்றன.. லாக்டவுனுக்குள் லாக்டவுன், அறிவிப்புகளில் குழப்பம், அமைச்சர்களின் தெளிவற்ற பேட்டிகள் மேலும் அதிருப்தியை தந்து வருகிறது.

கோவை பேட்டி

கோவை பேட்டி

தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என்று முதல்வர் கோவையில் பேட்டி தந்த அதேசமயம், உச்சத்துக்கு பாதிப்பு செல்கிறது என்று விஜயபாஸ்கர் சென்னையில் பேட்டி தருகிறார்!! மதுரையில் தொற்று அவ்வளவாக இல்லை என்று ஆர்பி உதயகுமார் சொல்லி வந்த நேரத்தில், டெஸ்ட்டை அதிகரியுங்கள், மக்கள் சிக்கலில் உள்ளனர் என்று பகிரங்க கோரிக்கை விடுத்தார் எம்பி வெங்கசேடன்.. இறுதியில் அந்த மாவட்டத்தில் ஊரடங்கு போடப்படும் நிலை இன்று வந்துள்ளது. இது எல்லாவற்றிற்கும் மேலாக ராஜேந்திர பாலாஜியின் கொந்தளிக்கும் பேச்சுக்களை யாரும் பெரிதாக ரசிக்கவில்லை.

எரிச்சல்

எரிச்சல்

அதேசமயம், ஆரம்பத்தில் இருந்தே திமுக தலைவர் ஸ்டாலினின் அறிக்கை அதிமுக தரப்புக்கு எரிச்சலையும், குடைச்சலையும் தந்து வருகிறது.. இவருக்கு தினமும் அறிக்கைதான் விடறதை தவிர வேற என்ன தெரியும்? என்று கேள்வி கேட்ட அதிமுக அரசுக்கு தொடர்ந்து தளராமல் தங்களது பணிகளை செய்து காட்டி பதிலடி தந்து வருகிறது திமுக.. மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் கையில் எடுத்து அதிரடி காட்டுவதில் திமுக நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அதிமுக

அதிமுக

"ஒன்றிணைவோம் வா" குறித்து என்னதான் ஆளுங்கட்சி தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டாலும் கூட அது மக்களை ரீச் செய்து விட்டது... அந்த திட்டத்தினால்தான் அன்பழகன் இறந்தார் என்று அதிமுக தரப்பு குற்றம்சாட்டினாலும், அது நீண்ட நாள் சோபிக்கவில்லை.. காரணம், இன்று அதிமுகவிலேயே பல எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கும் கொரோனா வந்திருப்பதால் அந்த வாதம் பலவீனமாகி விட்டது.

சாத்தான்குளம்

சாத்தான்குளம்

அதுமட்டுமல்லாமல், ஸ்டாலின் சொல்வதைத்தான் அதிமுக அரசு செய்கிறது என்ற வாதமும் கிட்டத்தட்ட மக்களால் நம்பப்படும் அளவுக்குப் போய் விட்டது... இதில் பிரச்சனையாக சாத்தான்குளம் விவகாரத்தை விஸ்வரூபமெடுக்க செய்த சாணக்கியத்தனமும் திமுகவிடம் இருந்தது.. இதுவும் ஆளும் தரப்புக்கு சறுக்கலை தந்துள்ளது.. இதில் அதிரடியாக கெட்டப்பை மாற்றி வந்து தினமும் ஸ்டாலின் வீடியோவில் பேசிவருவதும், மக்களிடம் அக்கறை காட்டி வருவதும் ஈர்ப்பை தந்து வருகிறது.

வேலுமணி

வேலுமணி

இதை வெளிப்படையாகவே வேலுமணி சொல்லிவிட்டார்.. "முடிந்தவர் சாதிக்கிறார்.. முடியாதவர் முச்சந்தியில் நின்று போதிக்கிறார்...தினமும் நான்கு சுவற்றுக்குள்ளே உட்கார்ந்து கொண்டு 4 கேமராக்களை வைத்து, பின்னிருந்து எழுதி தரும் அறிக்கைகளை பேசி நடிப்பதும், அதனை அறிக்கைகளாக வெளியிட்டு அவதூறுகள் பரப்புவதும் தான், கொள்ளை நோய் கொரோனா காலத்தில் அவர் ஆற்றி வருகின்ற மக்கள் தொண்டாகும்" என்று அறிக்கை விட்டு பகிரங்கப்படுத்தும் அளவுக்கு ஸ்டாலினின் நடவடிக்கைகள் அதிமுகவை அதிர வைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்!

சிக்ஸர்கள்

சிக்ஸர்கள்

இப்படியே போனால் திமுகவுக்கு பலம் கூடிக் கொண்டே போய், தேர்தலில் அதன் தாக்கத்தை வெளிப்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஆனால், எடப்பாடியாரோ வேற லெவலில் நின்று யோசித்து வருகிறார்.. நிறைய பிளான்களை, ஐடியாக்களை கையில் எடுத்துள்ளார்.. ஐடி விங்கை பலப்படுத்தி அதன்மூலம் அதிரடியில் இறங்க போவதாக சொல்கிறார்கள்.. சமீபத்தில் அவர் சென்ற 3 நாள் சுற்றுப்பயணம் மக்களிடம் நல்ல ரீச்சை தந்துள்ளதாக தெரிகிறது.. எனினும், அதிமுக எறியும் பந்து இன்னும் பலமாக இருந்தால் மட்டுமே திமுகவை சாய்க்க முடியும் என்ற நிலைதான் தற்போது உள்ளதாக கூறப்படுகிறது!

English summary
edapadi palanisamy: DMK has consistently engaged in the work of the people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X