சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆட்சிக்கு ஆப்பு வைக்க தயாராகும் கோஷ்டிகள்.. நமக்கு இத்தனை எதிரிகளா.. ஆடிப் போன முதல்வர்!

4 தொகுதிகளிலும் அதிமுக நிர்வாகிகள் சரிவர வேலை பார்க்கவில்லை என கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    நமக்கு இத்தனை எதிரிகளா..? ஆடிப் போன முதல்வர்!- வீடியோ

    சென்னை: நமக்கு இத்தனை பேர் ஆகாதவங்களா, நமக்கு இத்தனை எதிரிகளா? என்று ஆடிப்போய் உள்ளாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

    இந்த தேர்தலில் ஜெயிப்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் ஒரே வழி.. ஆட்சியை எப்படியாவது தக்க வைக்க வேண்டும் என்பதிலும், ஆட்சியை கவிழ்க்க விடாமல் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுதான் முதல்வரின் முழு மூச்சு எண்ணமாக உள்ளது.

    இதற்காக எத்தனை முட்டுக்கட்டைகள் இருந்தாலும் அதையெல்லாம் எப்படி தூக்கி தூரபோட்டு போகலாம் என்று தீவிர யுக்திகளை கையில் எடுத்துள்ளார். அதனால் நடக்க போகிற 4 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதற்காக ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை.. நான் இதை சொல்லியே தீருவேன்.. மமதா பகீர்! இதற்காக ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை.. நான் இதை சொல்லியே தீருவேன்.. மமதா பகீர்!

    அமைச்சர்கள்

    அமைச்சர்கள்

    என்னதான் ஓடி, ஓடி பிரச்சாரம் செய்தாலும், தேர்தல் பணிகளை கவனிக்க சரியான நபர்கள் இல்லையென்றால் அந்த தொகுதியின் வெற்றியே காலி ஆகிவிடும். அதனால்தான் 4 தொகுதிகளிலும் 10-க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார். கொடுக்கப்பட்ட வேலைகளை இந்த மாவட்ட நிர்வாகிகள் ஒழுங்காக செய்கிறார்களா என்பதை கவனிப்பது அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்களின் பொறுப்பாம்!

    விசாரித்தார்

    விசாரித்தார்

    எதேச்சையாக மதுரையில் நிலவரம் எப்படி இருக்கிறது என்று கூப்பிட்டு விசாரித்தாராம் முதல்வர். அப்போதுதான் இந்த குட்டு வெளிப்பட்டுள்ளது. இதற்கு காரணம் சீட் ஒதுக்கியதில் ஏற்பட்ட மனஸ்தாபம் என்று சொல்லப்படுகிறது.

    மதுரை

    மதுரை

    இத்தனைக்கும் அந்த தொகுதியில் 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இருந்தும் தொகுதியில் வேலை நடக்கவில்லை என்பதை தெரிந்து முதல்வர் அப்செட் ஆகி விட்டாராம். மதுரைக்கே இப்படி.. மிச்சம் 3 தொகுதிகளில் என்ன நிலவரமோ தெரியவில்லை.

    முக ஸ்டாலின்

    முக ஸ்டாலின்

    தினகரனும், ஸ்டாலினும் நிறைய உள்ளடி வேலைகளை பார்த்து தங்கள் பக்கம் அதிருப்தியாளர்களை காய் நகர்த்தி வருகிறார்கள் என்று ஏற்கனவே தகவல்கள் வருகின்றன. இதில் இப்படி சொந்த கட்சியினரே ஆட்சிக்கு ஆப்பு வைத்தால் எப்படி? என்பதுதான் எடப்பாடியின் கவலையாக உள்ளதாம்!

    English summary
    Edapadi Palanisamy is upset because four districts Secretaries did not work in by election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X