• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"சித்தி" வரப் போறாங்க.. தலைமை மாற போகுதா.. 2 கட்சிகளும் இணைய போகுதா.. பரபரக்கும் அதிமுக, அமமுக!

|

சென்னை: என்ன நடக்கிறது தமிழ்நாட்டில் என்று தெரியவில்லை.. இருக்கிற பிரச்சனைகளை எல்லாம் விட்டுவிட்டு, சசிகலா விடுதலையில் அதிமுக அமைச்சர்களின் கவனம் சென்று கொண்டிருக்கிறது.. இதையெல்லாம் பார்த்தால், சசிகலாவிடம் தலைமை பொறுப்பை அதிமுக தந்துவிடுமோ என்ற சந்தேகமும் எழுந்து வருகிறது!!

சசிகலா விடுதலை பற்றின பேச்சு தொடர்ந்து அடிபட்டு கொண்டே இருக்கிறது... இவரை வெளியில் கொண்டுவருவதற்கு ஏராளனமான முயற்சிகளில் சட்டம் படித்த நுணுக்கர்கள் சிலர் இறங்கி உள்ளனர்.

அதேசமயம், பாஜக ஆதரவு இல்லாமல் சசிகலாவை வெளியில் கொண்டுவருவதில் சிக்கல்கள் உள்ளதையும் சசிகலா குடும்பத்தினர் புரிந்து வைத்துள்ளனர். கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால், அவரது விடுதலை நாள் தள்ளி போகும் என்ற பேச்சும் எழுந்தபடியே உள்ளது.

"சித்தி" வரப் போறாங்க.. தலைமை மாற போகுதா.. 2 கட்சிகளும் இணைய போகுதா.. பரபரக்கும் அதிமுக, அமமுக!

 செல்லூர் ராஜு

செல்லூர் ராஜு

ஆனால், எப்படி பார்த்தாலும், சசிகலா வருவது அதிமுகவுக்கு கலக்கத்தை தருவது போல சுத்தமாக தெரியவில்லை.. செல்லூர் ராஜு முதல் விஜயபாஸ்கர் வரை இதுவரை சசிகலாவை விமர்சித்தது இல்லை.. அதேசமயம் இவர்களை பற்றின கேள்வி கேட்டால், அதற்கு பதில் அளிக்காமல் விட்டதும் இல்லை.

 ஜெயில்

ஜெயில்

"சசிகலா ஜெயிலில் இருப்பது ரொம்பவும் கஷ்டமா இருக்கு.. சீக்கிரம் அவர் விடுதலையாக பிராத்திக்கிறேன்" என்று ராஜேந்திர பாலாஜி வெளிப்படையாகவே சொல்லி இருந்தார். இந்நிலையில், "ஜெயிலில் இருந்து சசிகலா வெளியே வந்தால், அதிமுகவை யார் வழி நடத்துவது என்று தலைமைதான் முடிவு செய்யும்" என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியனே ஓபனாக கூறியுள்ளார்.

 சந்தேகம்

சந்தேகம்

இதை சாதாரண வரிகளாக எடுத்து கொண்டு நாம் கடந்து போய்விட முடியாது.. விடுதலையாகி வந்தாலும், அதிமுகவில் அவருக்கு இடமே இல்லை என்று சொல்லி கொண்டிருந்தவர்கள், இப்போது ஏன் இப்படி பேசுகிறார்கள்? எதற்காக சசிகலா பக்கம் சாய்கிறார்கள்? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது எல்லாவற்றிற்கும் மேலாக, சசிகலா பற்றி இதுவரை எடப்பாடியார் காட்டமான அறிக்கை, பேட்டி, வார்த்தைகளை உதிர்த்ததும் இல்லை.

 ஓ.எஸ்.மணியன்

ஓ.எஸ்.மணியன்

அமைச்சர் ஜெயக்குமார் காட்டிய எதிர்ப்பைகூட முதல்வர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது! அமைச்சர் மணியனின் இந்த கருத்தை நாம் எப்படி பார்ப்பது? இது அவர் சொந்த கருத்து என்று எடுத்து கொள்வதா? அல்லது மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய அமைச்சரின் பேட்டியாக எடுத்து கொள்வதா, அல்லது அதிமுக தரப்பின் நிலைப்பாடாக எடுத்து கொள்வதா? என தெரியவில்லை.

 அதிமுக

அதிமுக

ஒருவேளை அமைச்சரின் சொந்த கருத்தாக இருந்தால், அதை நாம் விமர்சிப்பதற்கில்லை.. அது அவர் விருப்பம்.. மாறாக, கட்சியின் நிலைப்பாடாக இருந்தால், அது ஏன் என்று தெளியப்படுத்த வேண்டும்... கட்சி தலைமை சசிகலாவிடம் தலைமையை ஒப்படைப்பதாக இருந்தால், அதற்கான காரணங்களையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

திமுக

திமுக

திமுக தற்போது பலம் பொருந்தி எழுச்சியுடன் வந்து கொண்டிருக்கிறது.. அதனால் திமுகவை சமாளிக்க முடியாமல் சசிகலாவிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்ககூடுமோ, அல்லது கொரோனா உட்பட தமிழக பிரச்சனைகளை கையாள முடியாமல் சசிகலா என்ற ஒற்றை தலைமையை அணுக கூடுமோ என்பது தெரியவில்லை.

 குருமூர்த்தி

குருமூர்த்தி

இந்த சமயத்தில்தான் இன்னொரு தகவல் கசிந்துள்ளது.. துணை முதல்வர் ஓபிஎஸ் ஆஸ்பத்திரியில் இருந்தபோது, ஆடிட்டர் குருமூர்த்தியும், டிடிவி தினகரனும் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசியதாக சொல்கிறார்கள்.. முதல்வரை சமாதானம் செய்ய முயற்சி மேற்கொள்ள போவதாகவும் அப்போது நம்பிக்கை தந்ததாக கூறப்படுகிறது.. இது எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை.. இது உண்மையாக இருப்பின், அது வரவேற்க வேண்டியதுதான்.. ஈரு கட்சிகளும் இணைவதை ரத்தத்தின் ரத்தங்கள் அப்போதிருந்தே எதிர்பார்த்து வருவதுதான்..

நம்பிக்கை

நம்பிக்கை

ஆனால், அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை கட்டி இழுத்த செல்ல, மிகப்பெரிய ஆளுமை தேவைப்படுகிறது என்பது மட்டும் புரிகிறது.. அது சசிகலாவுக்கு இருக்கிறது என்று அதிமுகவில் பெரும்பாலானோர் நம்புவதாகவும் தெரிகிறது.. எப்படி இருந்தாலும், இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும்வரை அணுமானங்களும், யூகங்களும் கூடிக்கொண்டுதான் போகும்!

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
edapadi palanisamy: minister o s maniyan says that if Sasikala comes out of jail, the leadership will decide who will lead the AIADMK
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X