சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. "அவரும்" இல்லை.. "இவரும்" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் "கை"

மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு பெருகியுள்ளது நிரூபணமாகிவிட்டது

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக வட்டாரத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை.. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் கை உயர்ந்து கொண்டே வருகிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

எதிர்க்கட்சி தலைவராக யார் பொறுப்பேற்பது என்பது குறித்து அதிமுகவில் அதிகார மோதல் வெளிப்படையாக வெடித்தது..!

ஒவ்வொரு முறையும் தலைமைக்கு நெருக்கடி தந்து, தன் காரியங்களை இந்த 4 வருடங்களில் ஓபிஎஸ் சாதித்து கொண்டே வந்தார்.. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியும் தனக்கே கிடைக்கும் என்று கணக்கு போட்டார்.

"யாருக்கும் அடிபணிய கூடாது".. அதிமுக மீட்டிங்கில் பளீரென பேசிய இபிஎஸ்.. கூட்டத்தில் என்ன நடந்தது?

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

ஆனால், கொங்கு மட்டுமல்லாமல் தென் மண்டல நிர்வாகிகளின் ஆதரவையும் எடப்பாடி பழனிசாமி பெற்றிருந்ததை ஓபிஎஸ் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.. கடைசியில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே, கோபித்து கொண்டு ரூமை விட்டு செல்ல மட்டுமே ஓபிஎஸ்ஸால் முடிந்தது. இதற்கு பிறகு, எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியாவது தனக்கு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.. ஆனால், ஓபிஎஸ் சசிகலாவுக்கு ஆதரவாக சென்றுவிடுவார் என்று தகவல்கள் கசிந்தன..

பிடிவாதம்

பிடிவாதம்

இதற்கு காரணம், எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவி எனக்கு வேண்டவே வேண்டாம் என்று ஓபிஎஸ் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்ததுதான். இப்படிப்பட்ட சூழலில்தான் விஜயபாஸ்கர் பெயரும் அடிபட்டது.. இவ்வளவுநாள் இரட்டை தலைமைக்குள் பிரச்சனை வெடித்து கொண்டிருக்கும்போது, முதல்முறையாக 3வது நபராக விஜயபாஸ்கர் என்ட்ரி ஆனார். தனக்குதான் அந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி வேண்டும் அல்லது கொறடா பதவியாவது வேண்டும் என்று எடப்பாடிக்கு செக் வைத்தார்.

 விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

ஆனால், ஏற்கனவே ஊழல் புகார்களில் சிக்கி உள்ளவர்களின் லிஸ்ட்டை திமுக ரெடி செய்துவிட்டது.. அதில் டாப் 5 பேரில் விஜயபாஸ்கரும் இருப்பதாக சொல்லப்படுகிறது.. விரைவில் இதுகுறித்த வழக்கை தூசி தட்டி எடுத்தால், விஜயபாஸ்கர் மீது புகார் நிரூபணமானால், அது தேவையில்லாமல் அதிமுகவுக்கு கெட்ட பெயர் தந்துவிடும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உஷாராகவே இருந்தார்.. அதுமட்டுமல்லாமல், என்னதான் விஜயபாஸ்கர் தங்களுடன் இருந்தாலும் அவர் ஒரு சசிகலா ஆதரவாளர் என்ற முத்திரை இன்னமும் போகாமல்தான் உள்ளது.

அதிமுக

அதிமுக

இப்படிப்பட்ட சூழலில்தான் தன்னுடைய ஆதரவாளரான எஸ்பி வேலுமணியை கொறடாவாக நியமித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. சசிகலா பக்கம் சென்றுவிடக்கூடும், சசிகலாவுடன் சேர்ந்து அதிமுகவை ஓபிஎஸ் கலைத்துவிடக்கூடும் என்ற யூகங்கள் எல்லாம் தவிடுபொடியாகிவிட்டன.. தற்போது ஓபிஎஸ் துணை எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏற்று கொண்டுள்ளார்.

ஸ்டண்ட்

ஸ்டண்ட்

இதன்மூலம் சசிகலாவுடனான அரசியல் ஓபிஎஸ்ஸூக்கு குறையும் என்று கணிக்கப்படுகிறது.. மேலும், இதை விட்டால் வேறு பெரிய பொறுப்பும் அதிமுகவில் இப்போதைக்கு இல்லை.. இதன்காரணமாகவே ஓபிஎஸ், எடப்பாடியாரிடம் சாய்ந்துவிட்டாரா? அல்லது இதற்கு பின்னால் வேறு ஏதேனும் ஸ்டண்ட் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

Recommended Video

    என்ன நடந்தது? எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட OPS | Oneindia Tamil
    ஐடியா

    ஐடியா

    ஆனால், இப்போதும் எடப்பாடி பழனிசாமியின் வாய்ஸே அதிமுகவுக்குள் ஓங்கி ஒலித்திருக்கிறது.. ஒருவேளை துணை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஓபிஎஸ் ஒப்புக் கொள்ளவிட்டால், அதற்கும் தன்னுடைய ஆதரவாளரான கேபி முனுசாமியை அல்லது வைத்திலிங்கத்தை களமிறக்க எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே ஒரு ஐடியா வைத்திருந்தார்.. கப்சிப்பென்று கிடைத்த பதவியை ஓபிஎஸ் பெற்றுக் கொள்ளவும், எடப்பாடியின் பேச்சுக்கு ஓபிஎஸ் கட்டுப்பட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது..

    முனுசாமி

    முனுசாமி

    கேபி முனுசாமி, வைத்திலிங்கம், விஜயபாஸ்கர், ஆகியோருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.. இவர்கள் எல்லாம் இனிமேலும் அமைதியாக இருப்பார்களா? அல்லது பதவி கிடைக்காத வேதனையில் அதிருப்தி குரலை எழுப்புவார்களா? அல்லது இதுதான் சாக்கு என்று சசிகலா இவர்களையும் தங்கள் பக்கம் தட்டி தூக்க தயாராவாரா? போன்ற எதிர்பார்ப்புகள் எழுகின்றன..

    வாய்ஸ்

    வாய்ஸ்

    அதேபோல, ஓபிஎஸ்ஸின் முக்கியத்துவம் எடுபடாமலும் போய்விட்டது புலனாகிறது.. கொறடா பதவிக்கு, தன்னுடைய ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதனை முன்னிறுத்த ஓபிஎஸ் ஆசைப்பட்டார்.. அதுவும் நிராசையாகிவிட்டதுடன், தற்போது அதிமுகவில் ஓபிஎஸ்ஸின் வாய்ஸ் மெல்லியதாக அடங்கி கொண்டிருக்கிறது.. எடப்பாடியார் பழனிசாமியின் வாய்ஸ் அதிர ஒலிக்க தொடங்கிவிட்டது..!

    English summary
    Edapadi Palanisamys importance in ADMK has been proven once again
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X