சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவை தூரமாக வைத்தும்.. அதிமுகவின் அடிவயிற்றை கலக்கும் "அந்த 3 லட்சம்"!

இஸ்லாமியர் ஓட்டுக்களை அள்ள அதிமுக அதிரடியில் இறங்கி உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    DMK 4th Candidate : 4-வது வேட்பாளரை திமுக நிறுத்தியது ஏன்..?- வீடியோ

    சென்னை: கண்டும் காணாமல், பட்டும் படாமல் தான் பாஜகவுடன் அதிமுகவுக்கு உறவு இருப்பதாக தெரிகிறது. அதிலும் வேலூர் தொகுதியில் இன்னும் சுத்தம்.. கழட்டியே விட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.. காரணம்.. "அந்த 3 லட்சம் ஓட்டுக்கள்"தான்!

    நடந்து முடிந்த தேர்தலின் கூட்டணி சமயத்தில் பாஜகவே வலிய வந்துதான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. இங்கிருந்து யாரும் டெல்லிக்கு போகாமல், பியூஷ்கோயலை சென்னைக்கு வரவழைத்துதான் கூட்டணி சமாச்சாரத்தையே ஆளும்தரப்பு.

    பிறகு தேர்தல் முடிவின்போது, ஏன் 5 பேரும் தோத்து போய்ட்டீங்க என்று பாஜக வேட்பாளரை கட்சி தலைமை காரணம் கேட்க, "ஆளும் தரப்பில் எங்களுக்கு சப்போர்ட் இல்லை, கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லை" என்று தோத்து போனவர்கள் காரணம் சொன்னார்கள்.

    நிர்வாகிகள்

    நிர்வாகிகள்

    இப்போது வேலூர் தேர்தல் நடக்கும்போதும் இதையேதான் பாஜக சொல்லி வருகிறது. எங்களுக்கு உரிய முக்கியத்துவம் இல்லை என்று தேமுதிக, பாமக நிர்வாகிகள் மாறி மாறி குறை சொல்லி வரும் நிலையில், "உங்களுக்காவது பரவாயில்லை, எங்களை அப்பவும் கண்டுக்கலை, இப்பவும் கண்டுக்கலை" என்று புலம்புகிறது பாஜக தரப்பு.

    முஸ்லீம்கள்

    முஸ்லீம்கள்

    இது ஓரளவு உண்மை என்றும் சொல்லப்படுகிறது. வேலூர் தொகுதியை பொறுத்தவரை ஓரளவு வன்னியர், ஓரளவு முதலியார் சமூகத்தினர் நிறைந்திருந்தாலும், தேர்தல் வெற்றியை எப்போதுமே தீர்மானிப்பது முஸ்லீம் வாக்குகள்தான். இந்த தொகுதியில் கிட்டத்தட்ட 3 லட்சம் முஸ்லீம் வாக்குகள் உள்ளன. இவர்கள் யாருக்கு ஓட்டு போடுகிறார்களோ, அவர்களே பிரதான வேட்பாளராக குத்து மதிப்பாக கணக்கிடப்படுகிறது.

    முகம்மது ஜான்

    முகம்மது ஜான்

    அந்த வகையில், இஸ்லாமிய ஓட்டுக்களை அள்ள திமுக, அதிமுக தீவிர வேட்டையில் இறங்கி உள்ளது. ஏற்கனவே ஒரு முஸ்லீமுக்கு கூட சீட் தரப்படவில்லை என்று இந்த இருகட்சிகளின் மீதும் ஒரு அதிருப்தி உள்ளது. இதை உணர்ந்த அதிமுகவோ, இந்த தொகுதியை சேர்ந்த முகம்மது ஜானுக்கு ராஜ்ய சபாசீட் தந்து ஓரளவு அதிருப்தியில் இருந்து மீண்டு வருகிறது. மேலும் இஸ்லாமிய பிரதிநிதிகளை ஏசி சண்முகம் நேரில் சந்தித்து தனிப்பட்ட முறையில் பேசியும் வருகிறார்.

    நெருக்கம்

    நெருக்கம்

    இந்த நேரத்தில் பாஜகவுடன் நெருக்கத்தை அதிமுக காட்டி கொண்டால், அது ஏடாகூடமாகிவிடும் என்பதாலேயே அக்கட்சியுடனான நெருக்கத்தை தவிர்ப்பதாக சொல்லப்படுகிறது. தொகுதியில் உள்ள இஸ்லாமிய மக்களிடம் ஓட்டு கேட்க ஒன்றிரண்டு சமாச்சாரங்களை அதிமுக கையில் வைத்துள்ளது. ஆனல் திமுக என்ன செய்ய போகிறது என்றுதான் தெரியவில்லை. இந்த 3 லட்சம் ஓட்டுக்களை யார்தான் அள்ள போகிறார்களோ.. பார்ப்போம்

    English summary
    It is said that, the AIADMK is seeking 3 lakh Islamic votes in Vellore constituency Election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X