சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓபிஎஸ் ஹைகோர்ட்டில் அதிரடி:"அதிமுக பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்"

அதிமுக பொதுக்குழு விசாரணை இன்று மீண்டும் ஹைகோர்ட்டில் ஆரம்பமாகிறது

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக மீண்டும் ஒருவரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதிமுகவில் கடந்த ஜூலை 11ம் தேதி நடக்கவிருந்த பொதுக்குழுவை நடத்த விடக்கூடாது என்பதில் ஓபிஎஸ் கடுமையாக முயற்சித்தார்.. இதற்காக உயர்நீதிமன்றத்தை நாடினார்.

கடந்த ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஹைகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

வாக்குக்காக இலவசங்கள்.. மாநில நிதிநிலைமையை சீரழிக்கிறது.. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு! வாக்குக்காக இலவசங்கள்.. மாநில நிதிநிலைமையை சீரழிக்கிறது.. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு!

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இதை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தார்... இந்த உத்தரவையடுத்து, எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவையும் கூட்டி நடத்திவிட்டார்.. ஆனால், பொதுக்குழுவுக்கு உத்தரவிட்டு, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில், சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது... அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை மறுபடியு சென்னை ஹைகோர்ட்டே 2 வாரங்களில் விசாரித்து தீர்வு காண உத்தரவிட்டது.

லிஸ்ட்

லிஸ்ட்

இதையடுத்து, இந்த வழக்குகள் நீதிபதி கிருஷணன் ராமசாமியிடம் பட்டியலிடப்பட்டிருந்தன... ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்ற பதிவுத் துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது... அதேபோல தலைமை நீதிபதியிடமும் முறையிடப்பட்டது... பின்னர், இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதி பரிந்துரை அளித்திருந்தார்.

கிருஷ்ணகுமார்

கிருஷ்ணகுமார்

இறுதியில், உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். .அதன்படியே இந்த வழக்கு நேற்று முன்தினம், அதாவது 8ம் தேதி முதல் விசாரணையை ஆரம்பித்தது.. புதிய நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கை விசாரித்தார்.. ஆனால் அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தங்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் இன்று ஆஜராகவில்லை என்றும், தங்கள் தரப்பு வாதங்களை அவர்தான் முன்வைக்க டெல்லியிலிருந்து வர வேண்டும், ஆனால் அவர் ஆஜராகாததால், வழக்கை வேறு தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது..

டிஸ்மிஸ்

டிஸ்மிஸ்

இந்த கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்... வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்க உள்ள நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுமா? அல்லது ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்படுமா? ஒருவேளை மனு தள்ளுபடி செய்யப்பட்டால், எடப்பாடியின் கை மீண்டும் ஓங்குமா? என்பதெல்லாம் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்துள்ளது.. நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஹைகோர்ட்

ஹைகோர்ட்

அப்போது, ஓபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி வாதிடும்போது, "பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்ய விதி திருத்தப்பட்டுள்ளது. விதிகள் திருத்தம் செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. பொதுச்செயலாளராக மீண்டும் ஒருவரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை திருத்தம் செய்ய முடியாது.

காலியாகிவிடும்

காலியாகிவிடும்

இரு பதவிகளும் காலியாக இருந்தால் பொதுக்குழுவை கூட்ட யாருக்கு அதிகாரம் உள்ளது? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு ஓபிஎஸ் தரப்பில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்டலாம் என்று பதில் அளிக்கப்பட்டது. தேர்தல் விதிகள் திருத்தத்துக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்காவிடில் இருபதவிகளும் காலியாகிவிடும். தேர்தலுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இருவர் செயல்பட முடியவில்லை என கூறுவது தவறு. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் எனவும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

English summary
edapadi palanisamys next move and aiadmk general committee case investigation begin today in high court அதிமுக பொதுக்குழு விசாரணை இன்று மீண்டும் ஹைகோர்ட்டில் ஆரம்பமாகிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X