• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

செம மேட்டரை கையில் எடுத்த எடப்பாடி பழனிசாமி.. நொறுங்கும் "ஆடியோ" கணக்கு.. எகிறும் பரபரப்பு..!

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா போட்டு வரும் வியூகங்களை, எடப்பாடி பழனிசாமி முறியடிப்பாரா? அவரது கணக்கை தவிடுபொடியாக்குவாரா? அதிமுக என்ற ஆலமரம் சசிகலா கைக்கு போக வாய்ப்புள்ளதா? என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

சில தினங்களாகவே சசிகலா தன்னுடைய நிர்வாகிகளுடன் பேசும் ஆடியோ வெளியாகி கொண்டிருக்கிறது. தினம் தினம் வெளியாகும் இந்த ஆடியோவின் மூலம், அதிமுகவை விரைவில் கைப்பற்றும் சசிகலாவின் முயற்சியும் வெளிப்படுகிறது.

இது எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த கலக்கத்தை தந்து வருகிறது.. இதனால் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும், நம்பிக்கைக்குரிய நிர்வாகிகளும் இது சம்பந்தமாக பதிலளித்து வருகிறார்கள்..

 ஆடியோ

ஆடியோ

"கருவாடு கூட மீன் ஆகலாம்.. ஆனால், சசிகலா அதிமுகவில் வர முடியாது" என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்திருந்தார்.. அதேபோல, "சசிகலாவை எந்த அதிமுக தொண்டனும் ஆதரிக்க மாட்டான்... அவர் அமமுகவினருடன் தான் தொடர்பில் இருக்கிறார்" என்று கேபி முனுசாமியும் கூறியிருந்தார். இதையடுத்து, 2 விதமான செய்திகள் தற்போது கசிந்து வருகின்றன..

 நிர்வாகிகள்

நிர்வாகிகள்

அதிமுகவை மீட்டெடுப்பதற்கான முயற்சியாக, நிர்வாகிகளை தனித்தனியாக போன் போட்டு பேசி வரும் சசிகலா, இப்போதைக்கு அதிமுகவின் 8 எம்எல்ஏக்களை தன்பக்கம் விழவைத்து விட்டதாக கூறப்படுகிறது.. அதிமுகவின் முக்கியமான நபர்களான அதுவும் தன்னை அதிகமாக எதிர்க்கும் நபர்களை குறிவைத்து, தன் தரப்பு ஆட்களை அனுப்பி பேச வைத்தாராம் சசிகலா..

சசிகலா

சசிகலா

அதன்பிறகு சம்பந்தட்டவர்களுடன் நேரடியாகவே போன் போட்டு சசிகலா பேசினாராம்.. என்ன தப்பு செய்தேன்? ஏன் இப்படி என்னை ஒதுக்குகிறீர்கள்? என்று காரணங்களை கேட்டுள்ளார்.. இதையடுத்து 8 அதிமுக எம்எல்ஏக்களை பேசியே கரைய வைத்துள்ளதாகவும் தெரிகிறது. அதுமட்டுமல்ல, இந்த லாக்டவுன் முடிந்தவுடன் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தன்னுடைய ஆதரவாளர்களை சசிகலா சந்திக்க போகிறாராம்.. அப்போது மேலும் சில முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது...

 அரசியல்

அரசியல்

கடைசியாக, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு தன்னுடைய அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து சசிகலா அறிவிக்க போகிறாராம். இந்த தகவல்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமியின் காதுகளுக்கு எட்டிஉள்ளது.. இதனால், சசிகலாவுக்கு முன்னதாகவே அரசியல் சுற்றுப்பயணத்தை தான் தொடங்கிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளாராம்..

 ஓபிஎஸ்

ஓபிஎஸ்


ஆனால், தனியாக செல்லாமல், இதற்கு ஓபிஎஸ்ஸூம் துணைக்கு வருமாறு அழைத்துள்ளாராம்.. ஆனால், எடப்பாடியை ஓரங்கட்ட இதுதான் சாக்கு என்று காத்திருந்த ஓபிஎஸ், அவரது அழைப்பை ஏற்க மறுத்துவிட்டாராம். அதுமட்டுமல்ல, கேபி முனுசாமியும், சி.வி.சண்முகமும் சசிகலாவை எதிர்த்து பேட்டி தந்து வரும் நிலையில், சசிகலாவின் வருகையை கட்சியில் உள்ள வன்னியர்களே எதிர்க்கிறார்கள் என்கிற தோற்றத்தை எடப்பாடி பழனிசாமி கட்டமைக்க பார்க்கிறார் என்ற பேச்சும் எழுந்து வருகிறது..

 சிக்கல்

சிக்கல்

அதாவது, வன்னியர்களுக்கும், முக்குலத்தோர் சமூகத்திற்கும் இடையேயான ஒரு மனக்கசப்பு மட்டுமே உருவாகும். தன் பக்கம் இந்த சிக்கல் வராது" என்பதே எடப்பாடியின் கணக்காக உள்ளதாம்.. சசிகலா, எடப்பாடி பழனிசாமி என ஆளுக்கு ஒரு பக்கம் காய்களை நகர்த்த தொடங்கி உள்ளதால், அரசியல் களமே பரபரப்பாக தகித்து போயுள்ளது..!

English summary
Edapadi palaniswami to start ADMK tour before sasikala
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X