சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு இன்னொரு உத்தரவாதமும் கொடுத்திருக்கிறாராம் எடப்பாடியார்!

Google Oneindia Tamil News

Recommended Video

    குமரகுருவை நிறுத்த சொல்லுங்கள்!.. உத்தரவாதம் வாங்கிய பிரபு!- வீடியோ

    சென்னை: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, அதிமுகவில் மீண்டும் தீவிரமாக செயல்படமுடிவு செய்திருப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த இன்னொரு முக்கிய உத்தரவாதமும் காரணம் என்கிறார்கள்.

    கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஒரு வழியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக டிடிவி தினகரன் அணியில் இருந்த பிரபு எம்.எல்.ஏ., சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸை அடுத்து தனது நிலைப்பாட்டை மாற்றினார்.

    edappadi one more assurance to kallakurichi mla prabhu

    ஏற்கனவே அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் முதல்வரை சந்தித்த நிலையில் நேற்று பிரபுவும் முதல்வரை சந்தித்தார். அப்போது விழுப்புரம் மாவட்டச்செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் மிஸ்ஸிங். ஆனால் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மோகன், குமரகுரு எம்.எல்.ஏ. ஆகியோர் பிரபுவுடன் உடனிருந்தனர்.

    குட் நியூஸ்.. ஒருவழியாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆரம்பித்தது கன மழை.. ரெட் அலர்ட்! குட் நியூஸ்.. ஒருவழியாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆரம்பித்தது கன மழை.. ரெட் அலர்ட்!

    இது தொடர்பாக நாம் விசாரித்ததில், சி.வி.சண்முகத்தால் தான் பிரபு தினகரன் முகாமுக்கே சென்றார், அப்படியிருக்க மீண்டும் சி.வி.சண்முகத்துடன் அவர் எப்படி இணைவார் என கேட்டனர். மேலும், தற்போது கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இன்னும் விழுப்புரத்திலுருந்து நிர்வாக ரீதியாக பிரிக்கப்படவில்லை.

    edappadi one more assurance to kallakurichi mla prabhu

    இந்நிலையில், டெண்டர் உள்ளிட்ட விவகாரங்களில் சி.வி.சண்முகம் தான் வைத்ததே சட்டம் என்ற போக்கை கடைபிடிக்கிறார் எனவும் பிரபு தரப்பில் இ.பி.எஸ்.சிடம் புகார் கூறப்பட்டதாம். அதைப்பற்றி எல்லாம் இனி கவலைப்பட வேண்டாம், விரைவில் கள்ளக்குறிச்சிக்கு புதிய ஆட்சியர் நியமிக்கப்பட்டு தனி மாவட்டமாக செயல்பட தொடங்கும். ஆகையால் வழக்கம்போல் கட்சிப் பணியாற்றுங்கள்.

    மேலும், எந்த குறை, கோரிக்கை இருந்தாலும் சொல்லுங்கள் நிறைவேற்றித்தருகிறேன் என பிரபுவுக்கு இ.பி.எஸ். உறுதியளித்தாராம். இதனால் மனம்குளிர்ந்துவிட்டாராம் பிரபு எம்.எல்.ஏ. இதேபோல குமரகுருவும் இடையூறாக இருக்க மாட்டார் என உத்தரவாதம் தரப்பட்டுள்ளதால், பிரபுவுக்கு டபுள் குஷியாம்.

    ஆக.. தினகரன் தரப்பு செய்ய வேண்டியதை எடப்பாடி தரப்பு செய்ததால்தான் பிரபு, மனம் மாறி விட்டார் என்கிறார்கள்.

    English summary
    CM Edappadi Palanisamy has said to Kallakurichi MLA Prabhu the he will not any issues from minister CV Shanmugam, says soruces.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X