சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2021-ல் மீண்டும் நமது ஆட்சி தான்... சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில் முதல்வர் உறுதி

Google Oneindia Tamil News

சென்னை: வரும் 2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சி தான் தமிழகத்தில் அமையும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற அதிமுக சொற்பொழிவாளர்கள் பயிற்சி பாசறையை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனைக் கூறினார். ஒரு கட்சி ஆட்சிக்கு வருவதற்கு அந்தக் கட்சியில் உள்ள பேச்சாளர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும், அதனை உணர்ந்து சொற்பொழிவாளர்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மக்களிடம் விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், வரும் தேர்தலிலும் அதிமுகவை தான் மக்கள் ஆட்சிக்கட்டிலில் அமரவைப்பார்கள் என தெரிவித்தார்.

edappadi palanisami says, admk regime is again in 2021

முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி ''சொல்வோம் வெல்வோம்'' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டனர். அதிமுக பொதுக்கூட்டங்களில் எவ்வாறு பேச வேண்டும், எதை தவிர்க்க வேண்டும், எப்படி அரசின் சாதனைகளை விளக்க வேண்டும் என்பன பற்றியெல்லாம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

வண்டியை விருதுநகருக்கு விடுங்க... ஏர்வாடி தர்ஹா பயணதிட்டத்தை ரத்து செய்த முதல்வர்வண்டியை விருதுநகருக்கு விடுங்க... ஏர்வாடி தர்ஹா பயணதிட்டத்தை ரத்து செய்த முதல்வர்

எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கும், புகார்களுக்கும் அதிமுக பேச்சாளர்கள் நாகரீகமான முறையில் பதிலடி தர வேண்டும் என்றும், பொதுமக்கள் மத்தியில் பொதுக்கூட்டத்தில் பேசும் போது கண்ணியம் தவறி பேசக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், சி ஏ ஏ விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்றும், ஒரு வேளை அப்படியே வந்தால் கூட அதிமுக அரணாக இருந்து பாதுகாக்கும் எனவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக நட்சத்திர பேச்சாளர்களான நடிகர் சரவணன், அனு மோகன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

English summary
edappadi palanisami says, admk regime is again in 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X