சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தோல்வி பயம் வந்திடுச்சு.. ஸ்டாலினின் பிரச்சார யுக்தி குறித்து முதல்வர் பழனிச்சாமி கிண்டல்

Google Oneindia Tamil News

சென்னை: இடைத்தேர்தலில் தோற்றுவிடும் என்ற பயம் காரணமாகவே பல்வேறு வகையில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் 3 மாதங்களுக்குள் உள்ளாட்சித்தேர்தல் நிச்சயம் நடைபெறும். உள்ளாட்சித்தேர்தலை சந்திக்க அதிமுக எப்போதும் தயாராக உள்ளது.

edappadi palanisamy accuses mk stalin election campaign in sulur with some techniques Due to the fear of failure in election

3 எம்எல்ஏக்களுக்கும், ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம். இதன் மூலம் திமுக, அமமுகவுக்கு இடையேயான உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் பல்வேறு வகையில் பிரச்சாரம் செய்கிறார்.

இடைத்தேர்தலில் தோற்றுவிடும் என்ற பயம் காரணமாகவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஸ்டாலின் கொண்டு வந்திருக்கிறார்

தமிழகத்தில் ஏற்கனவே நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதிகளிலும், விரைவில் நடக்க உள்ள 4 சட்டமனற தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அதிமுக முழுமையாக வெற்றி பெறும். இயற்கை அன்னை ஒத்துழைத்தால் இந்த ஆண்டு வழக்கம் போல் மேட்டூர் அணை திறக்கப்படும்" என்றார்.

எல்லாம் முடிஞ்சு போட்டு பிரதமரே.. கர்மா காத்திருக்கிறது.. மோடி மீது ராகுல் காந்தி கடும் பாய்ச்சல்! எல்லாம் முடிஞ்சு போட்டு பிரதமரே.. கர்மா காத்திருக்கிறது.. மோடி மீது ராகுல் காந்தி கடும் பாய்ச்சல்!

இதனிடையே தமிழக மாணவர்கள் டெல்லி மாணவர்களின் வாய்ப்பை தட்டி பறிப்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லி மாணவர்களின் வாய்ப்பை தட்டி பறிக்கவில்லை என்றும் திறமையின் அடிப்படையில் முன்னேறி இருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார்.

English summary
tn by elections 2019 : edappadi palanisamy accuses mk stalin election campaign in sulur with some techniques Due to the fear of failure in election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X