சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தினமும் 3 லட்சமா?.. ஹிஸ்டரி இடிக்குதே.. எடப்பாடி பழனிசாமியின் "திடீர்" கோரிக்கை.. பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா சோதனையை 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்து உள்ளார்.

Recommended Video

    சட்டப்பேரவை நிகழ்வுகள் 23-06-2021

    தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் வேகமாக சரிந்து வருகிறது. தினசரி கேஸ்கள் 8 ஆயிரத்திற்கும் அதிகமாக குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று 6,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதனால் மொத்த பாதிப்பு 24,36,819 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 194 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 56,886 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    முதல்வரும் நானும்.. ஸ்டாலின் குறித்து நயினார் நாகேந்திரன் சொன்ன வார்த்தை.. சட்டசபையே கலகல! முதல்வரும் நானும்.. ஸ்டாலின் குறித்து நயினார் நாகேந்திரன் சொன்ன வார்த்தை.. சட்டசபையே கலகல!

    அதிகரிப்பு

    அதிகரிப்பு

    இந்த நிலையில் கொரோனா சோதனைகளை தமிழ்நாட்டில் உயர்த்த வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்து உள்ளார். அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் சோதனைகளை அதிகரிக்க வேண்டும். தினமும் 3 லட்சம் சோதனைகளை நடத்த வேண்டும். டெஸ்ட்களை அதிகரித்தால் மட்டுமே கொரோனா பரவலை கண்டறிய முடியும். கொரோனா பரிசோதனை முழுமையாக நடைபெறுவது இல்லை.

    குளறுபடி

    குளறுபடி

    இதில் நிறைய குளறுபடி நடப்பதாக தெரிகிறது. கொரோனா இல்லாதவருக்கு பாசிட்டிவ் என்றும், கொரோனா இருப்போருக்கு நெகட்டிவ் என்று ரிசல்ட் வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி இருந்தார். தமிழ்நாட்டில் உடனடியாக கொரோனா சோதனைகளை உயர்த்தி, தினமும் 3 லட்சம் வரை டெஸ்ட் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார்.

    சோதனை

    சோதனை

    தமிழ்நாட்டில் தினமும் 3 லட்சம் சோதனை செய்ய வேண்டும், அப்போதுதான் பரவலை தடுக்க முடியும் என்று எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி கணக்கு சொன்னாலும் கூட, அதிமுக ஆட்சியின் போது தமிழ்நாட்டில் 1.60 லட்சத்திற்கும் அதிகமாக கொரோனா சோதனை செய்யப்படவில்லை. அதிகபட்சமாக 1.58 லட்சம் மாதிரிகள் மட்டுமே அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சோதனை செய்யப்பட்டது.

     டெஸ்டிங்

    டெஸ்டிங்

    தேர்தல் முடிவு வருவதற்கு முதல் நாளான மே 1ம் தேதி தமிழ்நாட்டில் 1.56 லட்சம் மாதிரிகள் மட்டுமே கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதைவிட அதிக அளவு சோதனைகள் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியின் கீழ் செய்யப்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதங்களில் தினசரி டெஸ்டிங் அதிகரிக்கப்பட்டுள்ளது. தினமும் 1.70 லட்சத்தை விட அதிகமாக டெஸ்டிங் செய்யப்பட்டுள்ளது.

    விவரம்

    விவரம்

    கடந்த சில நாட்களாக செய்யப்பட்ட டெஸ்டிங் விவரம் பின்வருமாறு,

    22 ஜூன் : 1,65,375
    21 ஜூன் : 1,70,923
    20 ஜூன் : 1,72,543
    19 ஜூன் : 1,71,179
    18 ஜூன் : 1,70,269
    17 ஜூன் : 1,75,010
    16 ஜூன் : 1,71,085
    15 ஜூன் : 1,70,961
    14 ஜூன் : 1,70,256
    13 ஜூன் : 1,77,295

    ரெக்கார்ட்

    ரெக்கார்ட்

    தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஒரு நாள் சோதனை ஜூன் 12ல் செய்யப்பட்டது. ஜூன் 12ல் 1,82,878 செய்யப்பட்டதே தமிழ்நாட்டில் செய்யப்பட்ட அதிகபட்ச சோதனை ஆகும். தமிழ்நாட்டில் இதைவிட அதிக சோதனைகள் இதற்கு முன் செய்யப்பட்டது கிடையாது. தமிழ்நாடு தற்போது மூன்றாவது அலை கொரோனா தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.

    எத்தனை

    எத்தனை

    இதற்கு ஏற்றபடி டெஸ்டிங் சென்டர் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. 274 ஆக தமிழ்நாடு டெஸ்டிங் சென்டர் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 69 அரசு டெஸ்டிங் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் தினசரி டெஸ்டிங் எண்ணிக்கை 2 லட்சத்தை தொட வாய்ப்புள்ளது.

    English summary
    Opponent leader Edappadi Palanisamy asks to increase Covid 19 Test in Tamilnadu: What is the highest testing in his tenure?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X