சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெ. வழியில் கட்சி, சின்னம் பிடிச்சாச்சு.. வசைபாடியவர்களை வளைச்சாச்சு.. ஜெ.வழியில் வெல்வாரா எடப்பாடி?

Google Oneindia Tamil News

Recommended Video

    அன்று ஜெயலலிதா வென்றதை போல வெற்றி பெறுவாரா எடப்பாடி?- வீடியோ

    சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில், அதிமுக கட்சி மற்றும் சின்னத்தை கைப்பற்றுவதில் வெற்றி பெற்ற முதல்வர் பழனிச்சாமி, அவரை போலவே கூட்டணி விஷயத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டுள்ளார். அதேபோல ஜெயலலிதா போல் அரசியல் வானில் வெற்றி பெறுவாரா என்பதை வரும் தேர்தல் நிரூபிக்கப் போகிறது.

    மக்களவை தேர்தலோடு, சட்டமன்ற இடைத்தேர்தலும் தமிழகத்தில் நடக்கிறது இது பிரதமர் மோடிக்கு மட்டுமல்ல, அவருடன் கூட்டணியில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்வா சாவா ஆட்டம் தான். இந்த இடைத்தேர்தலில வென்றால் மட்டுமே முதல்வராக நீடிக்க முடியும் என்ற நிலையில் களம் காண்கிறார்,

    இதன் காரணமாக ஜெயலலிதா வழியில் வலுவான கூட்டணி அமைத்து தற்போது சட்டமன்ற இடைத்தேர்தலை சந்தித்துள்ளார். இந்த நிலையில் கட்சி சின்னம் தொடர்பாக நமக்கு ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது.

    40 அடி கிணறு.. அப்படியே டைவ்.. ஒன்றரை வயசு பேத்தியை வெற்றிகரமாக காப்பாற்றிய பாட்டி! 40 அடி கிணறு.. அப்படியே டைவ்.. ஒன்றரை வயசு பேத்தியை வெற்றிகரமாக காப்பாற்றிய பாட்டி!

    வெற்றி பெற்ற ஜெயலலிதா

    வெற்றி பெற்ற ஜெயலலிதா

    ஜெயலலிதா 1989ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் ஆதரவுடன் இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக கட்சியையும் கைப்பற்றினார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கெண்டார். எதிர்பாராத விதமாக ராஜுவ்காந்தி கொல்லப்பட்டதால், அனுதாப அலையில காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதே அனுதாப அலையால் தமிழத்தில் அதுவரை இல்லாத அளவாக அதிமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.

    அதிமுக படுதோல்வி

    அதிமுக படுதோல்வி

    1996ம் ஆண்டு திமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி காரணமாக ஜெயலலிதா தலைமையிலான அதிமுக படுதோல்வி அடைந்தது. ஜெயலலிதா தான் போட்டியிட்ட பர்கூர் தொகுதியிலேயே தோல்வி அடைந்தார். அதன் பிறகு ஜெயலலிதா எழ முடியாத அளவுக்கு வழக்குகளை தொடுத்தது திமுக. இதனை கண்டு அசராத ஜெயலலிதா வலுவான கூட்டணி மூலம் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

    திட்டியவர்களுடன் கூட்டணி

    திட்டியவர்களுடன் கூட்டணி

    1996ம் ஆண்டு தன்னை விமர்சித்து பேசிய ஜிகே மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ராமதாஸின் பாமகவுடன் இணைந்து 2011ம் ஆண்டு வலுவான கூட்டணியினை ஜெயலலிதா அமைத்தார். அதன்மூலம் ஆட்சியை பிடித்து முதல்வரானார். அதன் பிறகு கட்சி, ஆட்சி என அனைத்தும் ஜெயலலிதா என்ற தனி ஒருவரின் கைக்கு முழுமையாக சென்றது.

    ஜெ.வழியில் ஈபிஎஸ்

    ஜெ.வழியில் ஈபிஎஸ்

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் போலவே, எடப்பாடி பழனிச்சாமியும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவுடன் அதிமுக கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்றினார். தற்போது துணை முதல்வராக உள்ள ஒபிஎஸ் இதற்கு பக்கபலமாக இருந்தார். இதனால் அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இரட்டை தலைமையாக மாறிவிட்டார்கள்.

    செல்வாக்கு

    செல்வாக்கு

    அதிமுகவை சொந்தம் கொண்டாடி போராடி 18 எம்எல்ஏக்களுடன் பிரிந்து சென்ற டிடிவி தினகரன் கடைசியில் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து இந்த தேர்தலை சந்திக்கிறார். இதனால் அதிமுவின் ஓட்டுகள் வரும் தேர்தலில் சிதறும் நிலை இருக்கிறது. அதிமுக தொண்டர்கள் ஈபிஎஸ், ஒபிஎஸ் பக்கமா அல்லது டிடிவி பக்கமா என்பது இந்த தேர்தலில் தெரிந்துவிடும்.

    திமுகவின் கணக்கு

    திமுகவின் கணக்கு

    கட்சியை கைப்பற்றிய எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆட்சியை காப்பற்றுவதில் மிகப்பெரிய சவால் உள்ளது. பதவி ஏற்றது முதல் தமிழகத்தில் கடுமையான போராட்டங்கள், எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். முதல்வர் பழனிச்சாமியை மிகக் கடுமையாக ஏன், திமுகவை விட மோசமாக பாமக விமர்சித்து வந்தது. இதேபோல் தேமுதிகவும் அதிமுகவை விமர்சித்து வந்தது. இதனால் திமுக வலுவான கூட்டணி மூலம் அதிமுகவை எளிதில் வீழ்த்திவிடும் என எதிர்பார்ப்பு எழுந்தது.

    திமுக அதிர்ச்சி

    திமுக அதிர்ச்சி

    இந்நிலையில் வாழ்வா சாவா ஆட்டத்தில் நிதானமாகவும், சரியாகவும் காய் நகர்த்தினார் முதல்வர் பழனிச்சாமி. இதன் பலனாக பாமகவையும், தேமுதிகவையும் தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்தார். அத்துடன் பாஜக, புதிய நீதிக்கட்சி, தமாகா, புதிய தமிழகம் என பெரும் கூட்டணியை முதல்வர் பழனிச்சாமி உருவாக்கினார். இதனால் திமுக தலைமை அதிர்ச்சி அடைந்து பாமகவை கடுமையாக விமர்சித்தது.

    வெற்றி வசப்படுமா?

    வெற்றி வசப்படுமா?

    தங்களை விமர்சித்த பாமக , தேமுதிக உடன் மட்டுமில்லாமல், துணைக்கு ஆளும் பாஜகவையும் சேர்த்து, பழனிச்சாமி சட்டமன்ற இடைத்தேர்தலை களம் காண்கிறார். இதன்மூலம் ஜெயலலிதா வழியில் செயல்படும் பழனிச்சாமி, இதில் வெல்வாரா என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். தற்போது தேர்தல் நடக்க உள்ள 22 தொகுதிகளில் குறைந்த பட்சம் 15 தொகுதிகளையாவது கைப்பற்றும் முனைப்பில் கடுமையாக உழைத்து வருகிறார். இதில் வென்றால் ஜெயலலிதா வழியில் அதிமுக எடப்பாடி கைவசம் செல்லும் என்பதால் இது அவருக்கு மிக மிக முக்கியமான தேர்தல். ஜெயலலிதா வழியில் வெல்வரா என்பது மே 23ம் தேதி தெரிந்துவிடும்.

    English summary
    chief minister edappadi palanisamy going jayalalitha way, he may win election like jayalalithaa?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X