சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"வாட்ச்" பண்ணுங்க.. இரவு முழுக்க அமைதியோ அமைதி.. ஆள் போட்ட எடப்பாடி.. டெல்லியில் நடக்க போவது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் நேற்று ஏகப்பட்ட களேபரங்கள் நடந்த நிலையில்.. எடப்பாடி பழனிசாமி தரப்போ நேற்று மாலையில் இருந்தே பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அமைதி காத்து வருகிறது. எடப்பாடி தரப்பின் இந்த அமைதிக்கு என்ன காரணம்.. என்ன நடக்கிறது அவரின் கேம்பில்?

Recommended Video

    ADMK குழப்பத்துக்கு மத்தியில் OPS டெல்லி போனது ஏன்? பரபரப்பு தகவல்கள் *Politics

    அதிமுக பொதுக்குழுவில் நேற்று இரண்டு சம்பவங்கள் நடந்தன. ஒன்று.. எடப்பாடி பழனிசாமி தனது பவரை காட்டினார். 23 தீர்மானங்களையும் எடப்பாடி ஆதரவாளர்கள் நிராகரித்தது. மீண்டும் பொதுக்குழு ஜுலே 11ம் தேதி கூடும் என்று அறிவித்தது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு முஷ்டி முறிக்கியது.

    இரண்டாவது விஷயம்.. ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் அவமானப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்டார். அவர் மீது சில அதிமுக நிர்வாகிகளே பரிதாப்படும் அளவிற்கு நேற்று எடப்பாடி ஆதரவாளர்கள் மூலம் மிக மோசமாக நடத்தப்பட்டார்.

    ஜனாதிபதி தேர்தல்:பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று வேட்புமனுத் தாக்கல்-அதிமுக பங்கேற்பு! ஜனாதிபதி தேர்தல்:பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று வேட்புமனுத் தாக்கல்-அதிமுக பங்கேற்பு!

    எடப்பாடி அமைதி

    எடப்பாடி அமைதி

    நேற்று அதிமுக கூட்டத்தில் இந்த களேபரங்கள் எல்லாம் முடிந்த பின் எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை, சிடி ரவி ஆகியோர் பாஜக சார்பாக சந்தித்து பேசி உள்ளனர். இதில் அதிமுக பொதுக்குழு, ஓபிஎஸ் - இபிஎஸ் இடையிலான மோதல், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவிற்கு அதிமுக ஆதரவு தருவது தொடர்பாக எல்லாம் ஆலோசனை செய்துள்ளனர். அதன்பின் எடப்பாடி பழனிசாமி வீட்டிலேயே சில நிமிடம் ஓய்வு எடுத்துள்ளார்.

    ஒரு சில ஆலோசனை

    ஒரு சில ஆலோசனை

    இரவு 7 மணி வரை ஓய்வு எடுத்தவர் ஒரு சிலரை மட்டுமே சந்தித்துள்ளார். அதன்பின் இரவு 7 மணிக்கு மேல் ஒரு சில மாஜி அமைச்சர்களையும், தனக்கு ஆதரவாக இருக்கும் நிர்வாகிகளையும் எடப்பாடி சந்தித்து இருக்கிறார். இதில் சட்ட போராட்டம் நடந்தால் என்ன செய்வது.. பொதுக்குழுவில் அடுத்த முறை எப்படி ஒற்றை தலைமை தீர்மானத்தை கொண்டு வருவது என்பது பற்றி எல்லாம் சில நிமிடங்கள் மட்டும் ஆலோசனை செய்துள்ளனர்.

    வாட்ச் செய்தார்

    வாட்ச் செய்தார்

    மற்றபடி பெரிதாக நீண்ட நேரம் ஆலோசனை எதுவும் செய்யப்படவில்லை.. என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் இன்று டெல்லி செல்வதை எடப்பாடி பழனிசாமி தரப்பு நெருக்கமாக வாட்ச் செய்யும் என்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி நேற்று பாஜக தலைவர்களை சந்தித்த போது பெரிதாக நெருக்கமாக பேசவில்லை. பாஜகவிற்கு எடப்பாடி பிடிகொடுத்து பேசவில்லை. இந்த நிலையில்தான் ஓபிஎஸ் டெல்லி செல்கிறார்.

     டெல்லி பயணம் - தீவிரம்

    டெல்லி பயணம் - தீவிரம்

    குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது பற்றி பேசத்தான் டெல்லி செல்கிறோம் என்று ஓபிஎஸ் தரப்பு சொன்னாலும்... கண்டிப்பாக இதற்கு பின் அதிமுக பொதுக்குழுதான் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் டெல்லியில் நடக்க போகும் விவகாரங்களை எடப்பாடி பழனிசாமி நெருக்கமாக வாட்ச் செய்து வருகிறாராம். டெல்லி பாஜகவில் தனக்கு நெருக்கமாக இருக்கும் ஆட்கள், அதிமுக சார்பாக டெல்லியில் இருக்கும் தனது ஆதரவு நிர்வாகிகள் மூலம் ஓபிஎஸ்ஸின் ஒவ்வொரு மூவையும் எடப்பாடி பழனிசாமி வாட்ச் செய்து வருகிறாராம்.

     அடுத்த மூவ்?

    அடுத்த மூவ்?

    எடப்பாடியின் அடுத்த மூவ் என்ன... பொதுக்குழுவிற்கு எப்படி ஒற்றை தலைமை தீர்மானத்தை கொண்டு வருவார் என்ற கேள்வி நிலவி வருகிறது. அவரின் தரப்பு பெரிதாக எதுவும் செய்யாமல் அமைதி காத்து வருகிறது. இப்போதைக்கு "பார்த்துக்கலாம்.. வெயிட் அண்ட் வாட்ச்" என்ற மூடில்தான் எடப்பாடி தரப்பு இருக்கிறதாம். இன்று ஓபிஎஸ் தரப்பு செய்யும் மூவ்களை பொறுத்தே எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கும் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

    English summary
    Edappadi Palanisamy is closely watching O Panneerselvam moves in Delhi today. அதிமுக பொதுக்குழுவில் நேற்று ஏகப்பட்ட களேபரங்கள் நடந்த நிலையில்.. எடப்பாடி பழனிசாமி தரப்போ நேற்று மாலையில் இருந்தே பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அமைதி காத்து வருகிறது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X