சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரிப்போர்ட் வேணும்.. ஜெயலலிதா ஸ்டைலில் அதிரடிக்கு தயாரான பழனிச்சாமி.. களையெடுப்பு தொடங்குகிறது!

அதிமுக எம்எல்ஏக்கள் எல்லோரையும் மொத்தமாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முக்கியமான சில நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளார் என்கிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் எல்லோரையும் மொத்தமாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முக்கியமான சில நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளார் என்கிறார்கள்.

All is not well என்று ஆங்கிலத்தில் ஒரு பிரபலமான வசனம் இருக்கும். ஒரு அமைப்பில் தவறுகள் நடக்கும் போது, பூசல்கள் நிகழும் போது இந்த வாசகம் பயன்படுத்தப்படும். தற்போது All is not well with அதிமுக என்று சொன்னால் அது மிக சரியாக இருக்கும்.

ஆம் தற்போது அதிமுக கட்சிக்குள் மிக மோசமான அளவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கட்சிக்கு உள்ளேயே ஆட்சிக்கு எதிராக சிலர் காய் நகர்த்தி வருகிறார்கள்.

நாங்களும் தயார்தான்.. இந்தியாவிற்கு பாகிஸ்தான் பதிலடி.. ஆசியாவில் எகிறும் அணு ஆயுத போர் அச்சம்!நாங்களும் தயார்தான்.. இந்தியாவிற்கு பாகிஸ்தான் பதிலடி.. ஆசியாவில் எகிறும் அணு ஆயுத போர் அச்சம்!

என்ன செய்கிறது

என்ன செய்கிறது

அதிமுக கட்சிக்குள் நிலவும் பிரச்சனைக்கு காரணம் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இடையே நிகழ்வும் பனிப்போர்தான். இவர்களுக்கு இடையில் நிலவும் சண்டை காரணமாக தற்போது கட்சிக்குள் இரட்டை தலைமை பிரச்சனை இருந்து வருகிறது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள், இபிஎஸ் ஆதரவாளர்கள் என்று இரண்டாக பிரிந்து கட்சியினர் பணியாற்றி வருகிறார்கள்.

கோபம் என்ன

கோபம் என்ன

இந்த நிலையில் ஆட்சிக்கு எதிராக சிலர் அதிமுக கட்சிக்குள்ளேயே குழி பறிப்பதாக முதல்வர் பழனிச்சாமிக்கு ரிப்போர்ட் சென்று இருக்கிறது. அதிமுகவில் சிலர் உங்கள் பேச்சை கேட்கும் நிலையில் இல்லை. கட்சிக்கு உள்ளேயே சிலர் உங்களுக்கு எதிராக பணியாற்றுகிறார்கள். அவர்களை இப்போதே கட்டுக்குள் கொண்டு வாருங்கள் என்று முதல்வருக்கு ரிப்போர்ட் சென்று உள்ளது.

என்ன செய்தார்

என்ன செய்தார்

இதனால் தற்போது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைக்கவும், முதல்வர் பழனிச்சாமி அமைச்சர்கள் குறித்த ரிப்போர்ட் ஒன்றை கேட்டுள்ளார். அதேபோல் அதிமுக எம்எல்ஏக்கள் கடந்த 8 வருடங்களில் செய்த தவறுகள், அவர்கள் மீது இருக்கும் புகார்கள் என்று அனைத்து விஷயங்கள் குறித்தும் பழனிச்சாமி தற்போது ரிப்போர்ட் கேட்டு உள்ளார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

ஆட்சிக்கு எதிராக யாராவது காய் நகர்த்தினால் அவர்களை லாக் செய்வதற்காக இப்படி முதல்வர் ரிப்போர்ட் கேட்டு இருக்கிறார் என்கிறார்கள். ஜெயலலிதா பாணியில் அவர் செயல்படுகிறார். முக்கியமாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை அவர் அதிகம் குறி வைக்கிறார் என்றும் ஆட்சிக்கு நெருக்கமான சிலர் கூறுகிறார்கள்.

ஏற்கனவே

ஏற்கனவே

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டனை தூக்கினார் எடப்பாடி பழனிசாமி. இதுவும் கூட அப்படி ஒரு நடவடிக்கைதான். மற்ற எம்எல்ஏக்களையும், அமைச்சர்களையும் கட்டுப்பாட்டில் வைக்க அவர் இப்படி செய்கிறார் என்று கூறுகிறார்கள்.

English summary
Tamilnadu CM Edappadi Palanisamy plan to control AIADMK party and Government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X