• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஸ்டாலினை "தொட" தயக்கம்?.. தேசிய அரசியல் காரணமா?.. எடப்பாடி பழனிசாமி ஏன் அப்படி சொன்னார்? பரபர களம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசியல் களத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளின் மீதான புகார்கள் தூசி தட்டி எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதன் அடுத்த கட்ட நகர்வு என்னமாதிரியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

ஓபிஎஸ்ஸும், எடப்பாடி பழனிசாமியும், எதற்காக டெல்லி சென்று வந்தார்கள் என்பது இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை.. ஆனால் பல்வேறு யூகங்கள் வெளியாகி கொண்டே இருந்தது..

மிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல் மிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல்

அதில் ஒன்றுதான் திமுக தரப்பு மீது அதிமுக முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுகள்.. விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு என்றதுமே அதிமுக தலைமை சற்று ஆடிப்போயுள்ளது..

கலக்கம்

கலக்கம்

எம்ஆர் விஜயபாஸ்கர் வரை ரெய்டுக்கு வந்துவிட்டவர்கள் இனி அடுத்தடுத்து தங்களையும் விடமாட்டார்கள் என்ற கலக்கத்தில்தான் டெல்லி விரைந்ததாகவும் கூறப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, திமுக மீதான ஊழல் புகார்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டிருக்கின்றன.. ஆனால், அவைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை..

 ஜெகத் ரட்சகன்

ஜெகத் ரட்சகன்

இப்போது அந்த டாக்குமெண்ட்டை எடுத்து கொண்டு பாஜக மேலிடத்திடம் இவர்கள் இருவரும் தந்ததாகவும், அதனடிப்படையில் திமுக மீதும் ரெய்டு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகின்றன.. குறிப்பாக, முன்னணி அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை கையில் எடுக்க வேண்டும், 2ஜி வழக்கை துரிதப்படுத்த வேண்டும், ஜெகத் ரட்சகன் மீதான வழக்கை விசாரிக்க வேண்டும், துரைமுருகன் மகன் மீதான சொத்து வழக்கையும் விரைவுபடுத்த வேண்டும் என்பது போன்று லிஸ்ட்களை அடுக்கியதாக தெரிகிறது.

 ஊழல் புகார்

ஊழல் புகார்

சுருக்கமாக சொன்னால், அதிமுக மீது ரெய்டு நடத்தினால், திமுக தரப்பிலும் ரெய்டு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அதன் சாராம்சம். ஆனால், அதற்கு டெல்லி தலைமை பெரிய அளவுக்கு ரியாக்ட் செய்யவில்லை என்கிறார்கள்.. முதல் காரணம், ஊழலை முன்வைத்து ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், அதிமுகவை காப்பாற்றி, அதே ஊழலுக்கு துணை புரிய பாஜக தலைமை தயாராக இல்லை..

பாஜக

பாஜக

இரண்டாவது காரணம், திமுகவை இந்த நேரத்தில் எதிர்த்து கொள்ள மேலிடம் தயாரில்லை என்றே தெரிகிறது.. விரைவில் எம்பி தேர்தல் வரவுள்ளது.. தேவையில்லாமல் திமுகவை தொட பாஜக இப்போது விரும்பவில்லை என்றே சொல்கிறார்கள்.. ஏற்கனவே திமுக எம்பிக்கள் கேட்கும் கேள்விகளுக்கு, அங்கு பாராளுமன்றத்தில் பாஜகவினால் பதில் சொல்ல முடிவதில்லை.. திணற வேண்டியதாக இருக்கிறது.. இப்போது ஸ்டாலினை சீண்டினால், டெல்லி அரசை அவர் கையில் எடுத்தால் என்னாவது?

அதிமுக

அதிமுக

எம்பி தேர்தல் வரஉள்ள நேரத்தில், பிகே உதவியுடன் தேசிய அரசியலில் என்ட்ரி தந்துவிட்டால் என்னாவது என்ற கலக்கமும் மேலிடத்துக்கு இருக்கவே செய்கிறது. அதனால்தான் ஊழல் புரிந்த, மற்றும் தொண்டர்களின் ஆதரவை வெகுவாக இழந்து கொண்டிருக்கும் அதிமுகவுக்கு உதவுவதற்கு தயாரில்லை என்பது போல, கையை விரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பேட்டி

பேட்டி

இப்படிப்பட்ட சூழலில்தான், நேற்றைய தினம் திமுக அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள், "ஊழல் அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்களே" என்று கேட்டனர்..

  Delhi Tamil Nadu house-ல் இருந்த OPS மற்றும் EPS.. Tv-யில் ஒளிபரப்பான முதல்வர் Stalin வீடியோ!
  நிலுவை

  நிலுவை

  அதற்கு எடப்பாடி, "இப்போ அவங்க ஊழல் அமைச்சரை தானே வெச்சிருக்காங்க. நீங்க அமைச்சரா இருந்தாலும் கோர்ட்ல ஆஜராகணும்னு இன்னைக்கு நீதிமன்றமே சொல்லியிருக்கே... அதுமட்டுமில்ல, அம்மா இருந்தபோது பல அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அதுசம்பந்தமான வழக்கு இன்னமும் கோர்ட்டில் நிலுவையில் இருக்கு.. அதை மறந்துவிட்டு அவங்க பேசக்கூடாது" என்றார்.

   சாத்தியமா?

  சாத்தியமா?

  எடப்பாடி பழனிசாமி, விடாப்பிடியாக திமுகவின் மீதான அதே ஊழல் குற்றச்சாட்டை நேற்றும் சொல்லி உள்ளது மேலும் பரபரப்பை கூட்டி இருந்தாலும், இது சாத்தியமா? எடப்பாடி இப்படி சொல்வதால், திமுக தன் நடவடிக்கையில் இருந்து பின்வாங்கி விடுமா? டெல்லி ஆதரவு அதிமுகவுக்கு கிடைக்குமா? என்று தெரியவில்லை..

   துணிச்சல்

  துணிச்சல்

  ஆனால் ஒரு விஷயம் மட்டும் புலப்படுகிறது.. "நாங்க ஊழலே செய்யவில்லை.. வேண்டுமானால் திமுக அதை தாராளமாக நிரூபிக்கட்டும்" என்று எடப்பாடி தரப்பு இதுவரை வாய்திறந்து துணிந்து சொல்லவில்லை.. சவாலும் விடவில்லை.. மாறாக, "அவங்களும்தானே ஊழல் பண்ணியிருக்காங்க" என்று சப்போர்ட்டுக்கு ஆள்தேடுவது மட்டுமே இதுவரை நடந்து கொண்டிருக்கிறது.. பார்ப்போம்..!

  English summary
  Edappadi Palanisamy protest against DMK and will MK Stalin enter into National Politics
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X